ஞாயிறு, 1 மார்ச், 2020

இதுதான் உலகம் என்று அவரும் பிறரும்
புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக
அப்படி எழுதப் பட்டுள்ளது.

பாடகர் டி எம் கிருஷ்ணாவின் செயல்கள் ஜெயமோகனுக்கு
உவப்பாக இல்லை; மிகவும் எரிச்சல் அடைகிறார்.
எரிச்சல் அடைந்து டி எம்  கிருஷ்ணாவின் சாதியைச்
சொல்லிக் கத்துகிறார்.

சாதியைக் குறிப்பிடாமலேயே டி எம் கிருஷ்ணாவை
மூர்க்கத் தனமாக விமர்சிக்க இயலும். அது தெரியாதவர்
அல்லர் ஜெயமோகன். இருந்தும் ஏன் சாதிய வசவுகளைத்
தேர்ந்தெடுக்கிறார்?

அதுதான் உலகம். அதுதான் இந்திய சமூகம்.
முற்போக்கு இயக்கங்களில் உள்ள பார்ப்பனர்கள்
சதா சர்வ காலமும் தங்களை நிரூபித்துக் கொண்டே  
இருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

இந்த நிலையை மாற்ற மருதையன் செய்த
முயற்சிதான் என்ன? ஒன்றும் இல்லை.

அவரும் புக, புஜ, வினவு ஆகியவற்றில்
மயிலை பார்த்தசாரதி என்று எழுதுவார்.
அமெரிக்க அம்பி என்று எழுதுவார்.
பார்ப்பனர்கள் மீது கல்லெறிவார்!
அசைவ உணவின் பெருமையை அசட்டுத் தனமாக
எழுதுவார். தேவையின்றி அதைத் தூக்கிப்
பிடிப்பார். உணவில் முற்போக்கு பிற்போக்கு
என்று எதுவும் இல்லை.

புழுவினும் இழிந்த திராவிடக் கசடு வே மதிமாறனை
அழைத்து பாரதியாரை இழிவுபடுத்தி எழுதி வைத்தார்.
மருதையன் பாரதியாரை இழிவு படுத்தலாம். இதன் மூலம்
மற்றவர்கள் மருதையனை பார்ப்பான் என்று
இழிவுபடுத்தும் உரிமையை வழங்குகிறார்.

இதுதான் கள யதார்த்தம். Com Marudhaiyan should understand
what would happen if he were at the receiving end.

பார்ப்பான் என்று திட்டுவது சாதியப் பார்வையே.
சாதியப் பார்வை அல்லாமல் வேறு எதுவும் இல்லை.
முதலில் மருதையன் அந்தப் பார்வையைக் கைவிடட்டும்.
அதன் பிறகு மற்றவர்கள் ஆட்டமேட்டிக்காக அதைக்
கைவிடுவார்கள். மற்றப்படி மருதையன் ஒரு பார்ப்பனர்
என்று நான் கருதவில்லை. இதுதான் உண்மை.



 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக