செவ்வாய், 3 மார்ச், 2020

அவதூறுகளின் முதுகெலும்பை முறிக்கும் பதில்!
தோழர் மருதையன் விலகலை முன்வைத்து!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
சித்தாந்த ரீதியாக நிலவும் ஊசலாட்டங்களை
மார்க்சிய லெனினிஸ்டுகள் காலந்தோறும்
எதிர்கொண்டும் தீர்வு கண்டும் ஆக வேண்டும்.

சித்தாந்தக் கலைப்புவாதம் மாநில அமைப்புக்
கமிட்டியை (SOC) விழுங்கிக் கொண்டு இருப்பதன்
வெளிப்பாடே தோழர் மருதையனின் விலகல் என்ற
பொருளில் முகநூலில் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்..

இந்தக் கட்டுரையைப் படித்த ஒருவர் எதிர்வினை
ஆற்றி இருக்கிறார். நான் முன்வைத்த அரசியல்
தத்துவார்த்தக் கருத்துகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.
மாறாக அவதூறுகளை மட்டும் முன்வைத்துள்ளார்.

அவர் ஆற்றிய எதிர்வினையில் எந்த ஒரு அரசியல்
அம்சமோ அல்லது தத்துவார்த்த அம்சமோ இல்லை.
ஆனால் தமது பண்பாடற்ற நடத்தையின் மூலமாக
தமது மூளையில் உள்ள கழிவுகளை மட்டுமே 
தமது எதிர்வினையில் வக்கிரமாக வெளிப்படுத்தி உள்ளார்.

இவரை நான் முகநூலில் பிளாக் (block) செய்திருப்பதாக
ஒரு பொய்யைச் சொல்கிறார். இதுவரை பிளாக்
பண்ணவில்லை. இனிமேல்தான் பண்ணப் போகிறேன்.
இவரை நான் பிளாக் செய்திருந்தால், என்னுடைய
கட்டுரையை அவர் எப்படி காப்பி-பேஸ்ட் பண்ண முடியும்?
ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியும்?

எனது நண்பர்களான சில மாவோயிஸ்ட் தோழர்கள்
பாஸ்கர் விஸ்வநாதன் முத்து (Bhaskar Viswanathan Muthu)
என்னும் இந்த நபரைப் பற்றிக்கூறி பலமுறை என்னை
எச்சரித்து உள்ளனர். அவர்கள் சொல்லித்தான் இவர்
மாவோயிஸ்டுகளைக் காட்டிக் கொடுக்கும் ஒரு
இழிந்த நபர் என்று அறிந்து கொண்டேன். இந்த
நபரை எனக்குத் தெரியாது. பழக்கமும் கிடையாது.
தோழர் ஏ எம் கே மறைவுக்கு அஞ்சலி செலுத்தும்
கூட்டத்தில் வேலூரில்தான் முதன் முதலில் இவரைப்
பார்த்தேன்.

மாவோயிஸ்ட் நண்பர்களின் எச்சரிக்கையைத்
தொடர்ந்து இவரை முகநூலில் நட்பு நீக்கம் (unfriend)
செய்தேன். இது நிகழ்ந்து இரண்டு மாதம் இருக்கும்.

மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்வது என்பது
அன்றாடம் மலம் கழிப்பது போன்றது என்று முகநூலில்
ஒரு பதிவை எழுதி இருந்தேன். இந்தப் பதிவை
ஸ்க்ரீன் ஷாட் எடுத்து டெல்லியில் உள்ள
நிதி அமைச்சகத்துக்கு புகார்க் கடிதம் எழுதி
இருந்தார் ஒரு புண்ணியவான். வேறு யாருமல்ல.
பாஸ்கர் விஸ்வநாதன் முத்துதான்! இதை கிருஷி
பவனில் பணிபுரியும் ஒரு அதிகாரி நண்பர் மூலம்
விசாரித்து அறிந்து கொண்டேன்.

BSNL நிறுவனத்தில் 80,000 பேர் விருப்ப ஒய்வு என்னும்
VRSல் செல்வது இந்துத்துவ பாசிசம் என்கிறார்
திரு பாஸ்கர் விஸ்வநாதன் முத்து.

BSNL VRS என்பது BSNL புத்தாக்கத் திட்டத்தின் ஒரு
பகுதி. இதை BSNLல் உள்ள CPI, CPM சங்கங்களான
NFTE BSNL, மற்றும் BSNLEU உள்ளிட்ட அனைத்துச்
சங்கங்களும் (SNEA, BSNLEA) ஏகமனதாக ஏற்றுக்
கொண்டனர்.

தொழிற்சங்கங்கள் விரும்பாத ஒரு VRSஐ நிர்வாகமோ
அரசோ எங்கள் மீது திணிக்க முடியாது. சமூகத்தின்
பொருளுற்பத்தி பற்றியோ, தொழிற்சங்க இயக்கம்
பற்றியோ அணுவளவு அறிவு கூட இல்லாத இந்தத்
தற்குறி பாஸ்கர் விஸ்வநாதன் முத்துவுக்கு  BSNL
குறித்தோ, BSNLன் போர்க்குணமிக்க தொழிலாளர்கள்
குறித்தோ என்ன தெரியும்?

எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகத் தன்னைக் கருதிக்
கொண்டு குவாண்டம் தியரி பற்றியெல்லாம்
முட்டாள்தனமாகப் பேசும் இவரின் அறிவியல் தகுதி
என்ன?

போகிற போக்கில் சூரியனைப் பார்த்துக் குரைக்கும்
நாய் போல, தோழர் ஏ எம் கே அவர்கள் மீதும்
அவதூறு மொழிந்து விட்டுச் செல்கிறார்.

ஒரு போலிஸ் இன்பார்மருக்கே உரிய வன்மத்துடன் தமது
எதிர்வினையை எழுதி இருக்கிறார். இந்துத்துவ
பாசிசத்தை நான் ஆதரிப்பதாலேயே எனக்கு
தொலைக்காட்சி விவாத அழைப்புகள் கிடைப்பதாக
எழுதித் தன்னுடைய அரிப்பைத் தீர்த்துக் கொண்டுள்ளார்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக டிவி
நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். இதற்காக
நான் பணியில் இருந்த காலத்திலேயே, எங்கள்
பொது மேலாளரிடம் இருந்து முறைப்படி அனுமதி
பெற்று இருக்கிறேன்.  இதற்கும் இந்துத்துவத்துக்கும்
எந்த ஒரு மயிரு சம்பந்தமும் கிடையாது.

மறைந்த மூத்த தோழர் கோவை ஈஸ்வரன் அவர்களின்
மறைவின்போது நான் டெல்லியில் இருந்தேன்.
அஞ்சலி செலுத்துவதில் இந்தியாவில் எழுதப் படாத
ஒரு சட்டம் உள்ளது. அது இந்து மதத்தின் வைதீக
சம்பிரதாயங்களின்படி அமைந்த மரபார்ந்த ஒரு
விஷயம் ஆகும். அதன்படி, ஒருவர் இறந்து விட்டால்,
அவருக்கு அஞ்சலி செலுத்தும்போது, எந்த விதமான
விமர்சனமும் இல்லாத அஞ்சலியை (uncritical homage)
மட்டுமே செலுத்த வேண்டும்.

இந்த இந்துத்துவ மரபை மார்க்சியமும் ஏற்க வேண்டுமா?
அப்படி ஏற்பதுதான் மண்ணுக்கேற்ற மார்க்சியமா?
ஆனால் விமர்சனத்துடன் கூடிய அஞ்சலியைச்
செலுத்தலாம் (Homage with critical comments) என்கிறது
மார்க்சியம். இது விவாதத்துக்கு உரியது என்றால்,
தமது கருத்தை திரு பாஸ்கர் விஸ்வநாதன் முத்து
கூறி இருக்கலாம். ஆனால் அவர் கூறவில்லை.

திரு பாஸ்கர் விஸ்வநாதன் முத்து மீது சைபர் கிரைமில்
புகார் கொடுக்கலாமே என்றார் எனது நண்பரான
BSNL எஞ்சீனியர்.

அதனால் எந்தப் பயனும் விளையாது என்றார்
உடனிருந்த மாவோயிஸ்டு நண்பர். "புகாரை
விசாரிக்க ஒரு அதிகாரியைப் போடுவார்கள்;
அந்த அதிகாரியிடம் தான் ஒரு கியூ பிராஞ்சு
இன்பார்மர் என்று கூறித் தப்பித்து விடுவார்"
என்றார் மாவோயிஸ்டு நண்பர்.

போலீசின் ஆதரவு இருக்கிறது என்ற திமிரில்,
தன் மன வக்கிரத்தை வெளிப்படுத்துவது
பாஸ்கர் விஸ்வநாதன் முத்துவுக்கு இதமாக
இருக்கலாம். ஏற்கனவே ஒருமுறை இவர் என் மீது
அவதூறு எழுதியபோது, அதைப் புறக்கணித்தேன்;
குளித்து விட்டு வரும் யானை, சேற்றில் புரளும்
பன்றியைக் கண்டு ஒதுங்குவது போன்று.
அப்போதுதான் அவரை நட்பு நீக்கமும் செய்தேன்.

பாஸ்கர் விஸ்வநாதன் முத்துவின் எலக்ட்ரானிக்
உபகரணங்களைச் சோதனை செய்தால் என்னுடைய
பதிவுகள் அனைத்தின் ஸ்கிரீன் ஷாட் அவரிடம்
இருப்பதைக் காணலாம்.

இப்படிப்பட்ட நபர்களைக் கண்டு அஞ்சுகிறேன்.
அருவருக்கிறேன். இவர்களை விட்டு ஒதுங்கி
வாழ விரும்புகிறேன். ஆனால் காலைச் சுற்றிய
பாம்பாக போலீஸ் இன்பார்மர் பாஸ்கர் விஸ்வநாதன்
முத்து எனக்குத் தொல்லை கொடுத்து வருகிறார்.
இதே போன்ற தொல்லையை இவரால் அனுபவித்த
மாவோயிஸ்டு தோழர்கள் இவரின் பெயரைக்
கேட்டதுமே தீயை மிதித்தது போல் அலறுகிறார்களே,
அது ஏன் என்று இன்றுதான் புரிந்து கொண்டேன்.

ஒரு போலீஸ் இன்பார்மருக்கு எப்படிப் பதில்
கொடுக்க வேண்டுமோ, அப்படியான பதில் இது.
வாசகர்கள் அவரின் அவதூறையும் அதற்கான
எனது பதிலையும் படித்துப் பார்த்து, உண்மையை
அறியலாம்.

போலீஸ் இன்பார்மரான பாஸ்கர் விஸ்வநாதன்
முத்துவுக்கு இவ்வளவு வன்மமும் திமிரும் இருக்கக்
கூடாது. அற்பத் தனத்தை அகங்காரத்தால்
எதிர்கொள்ள வேண்டும் என்பார் ஜெயகாந்தன்.

இனிமேலும் பாஸ்கர் விஸ்வநாதன் முத்து குரைத்தால்
சட்டப்படியான தீவிர நடவடிக்கை எடுக்கப் படும்.
ஏனெனில்  அரசியல் ரீதியாக எதிர்கொள்வதற்கு
ஒரு போலீஸ் இன்பார்மர் அருகதை அற்றவர். 
********************************************************      




  
       





       

        


   

     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக