திங்கள், 2 மார்ச், 2020

ஒருதலைப் பட்சமான ஒழுங்குமுறை ஆணையம்!
சவுக்கால் அடித்த BSNL!
----------------------------------------------------------------------------
பெப்ரவரி 1997ல் TRAI எனப்படும் தொலைதொடர்பு
ஓழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டது.
தான் பிறந்ததில் இருந்தே இந்த ஆணையம்
BSNLக்கு எதிராகவும் தனியார் நிறுவனங்களுக்கு
ஆதரவாகவுமே செயல்பட்டது.

2010ல் ஒரு நிகழ்வு! அப்போது திரு J S சர்மா ஐ ஏ எஸ்
ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக இருந்தார்.
(J S Sharma IAS Chairman TRAI).( இவர் தற்போது காலமாகி விட்டார்).

தொலைத்தொடர்பு ஒரு அறிவியல் தொழில்நுட்பத் துறை.
அது போலவே TRAI என்பதும் அறிவியல் தொழில்நுட்ப
விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் துறை. இங்கெல்லாம்
அறிவியல் தொழில்நுட்ப அறிவு பெற்ற தொழில்நுட்ப
அறிஞர்களையே நியமிக்க வேண்டும். ஆனால்
அறிவியல் தற்குறித் தேசமான இந்தியாவில் இதற்கு
வாய்ப்பே இல்லை. IAS officers are totally incompetent  to
handle technological affairs.

மனோஜ் சின்ஹா  தொலைதொடர்புத்துறை அமைச்சராக
மோடி 1.0 ஆட்சியின்போது இருந்தார். அவர் ஐ ஐ டியில்
M.Tech படித்தவர். அப்போது தொலைதொடர்பு
ஆணையத்தின் தலைவராகவும் (Telecom Commission)
DoTயின் செயலாளராகவும் இருந்தவர் திருமதி அருணா
இவர் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி. கல்வித் தகுதி என்று
பார்த்தால் எம் ஏ வரலாறு படித்தவர். இவரால்
எப்படி அறிவியல் தொழில்நுட்ப விவகாரங்களைப்
புரிந்து கொள்ள முடியும்?

எம்.டெக் படித்த அமைச்சர் மனோஜ் சின்ஹா
இவரை அழைத்து, துறை சார்ந்த சில தொழில்நுட்ப
விஷயங்களைப் பற்றிக் கேள்வி கேட்டபோது, ஒரு
இழவும் தெரியாமல்,பேந்தப் பேந்த முழித்தாராம்
அருணா சுந்தரராஜன். நிற்க.

BSNLலிடம் இருக்கும் அலைக்கற்றையைப் (spectrum)
பிடுங்கி தனியார் நிறுவனங்களிடம் கொடுக்க
ஒரு இழிந்த முயற்சியைச் செய்தார் டிராய் தலைவர்
ஜே எஸ் சர்மா. BSNL நிர்வாகம் இதைப் பொதுவெளியில்
அம்பலப்படுத்தி முறியடித்தது.

பெருவாரியான மாநிலங்களில் BSNL நிறுவனம்
2G அலைக்கற்றையை அளவுக்கு மேல் வைத்திருப்பதாகவும்
அதை டிராயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும்
டிராய் தலைவர் சர்மா BSNLக்கு கட்டளை இட்டார்.
அதாவது BSNL 12.4 மெகா ஹெர்ட்ஸ் அளவுள்ள
அலைக்கற்றையை அநேகமாக 22 பிராந்தியங்களிலும் 
(LSA = LicencedServiceArea) வைத்திருப்பதாக டிராய் கூறியது.
இதில் 2.4 மெகா ஹெர்ட்ஸ் அளவுள்ள அலைக்கற்றையைத்
திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று சர்மா கூறினார்.

BSNLளிடம் இருந்து இவ்வாறு பிடுங்கும் அலைக்கற்றையை
தனியார் நிறுவனங்களான SWAN telecom, Telenor உள்ளிட்ட
தனியார் நிறுவங்களுக்கு வழங்குவது சர்மாவின் திட்டம்.

எந்த ஒரு பிராந்தியத்திலும் 7.6 மெகா ஹெர்ட்ஸ் அளவுக்கு
மேல் BSNL வைத்திருக்கவில்லை என்று BSNL  நிறுவனம்
நிரூபித்தது. சர்மாவின் ஓரவஞ்சனை முறியடிக்கப் பட்டது.

(தகவல் ஆதாரம்: எக்கனாமிக் டைம்ஸ் ஜூன் 25, 2010)
**************************************************************
   
  
  
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக