வெள்ளி, 6 மார்ச், 2020

5G விவகாரத்தில் மோடிக்கு டிரம்ப் நெருக்கடி!
சீனாவை ஆதரிக்கும் தயாநிதி மாறனும் ஆ ராசாவும்!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
நாடு முழுவதும் 5G அலைக்கற்றையின் பரிசோதனைகள்
(5G trials) நடந்து கொண்டிருக்கின்றன. ஜனவரி 2020ல்
இப்பரிசோதனைகள் தொடங்கின.

ஹுவாய் (HUAWEI) என்று ஒரு நிறுவனம் உள்ளது. இது
சீன நிறுவனம். மொபைல் போன்களைத் தயாரிக்கும்
நிறுவனம் இது (equipment manufacturing).

5ஜி பரிசோதனையில் ஹுவாய் நிறுவனத்தை
அனுமதிக்கக் கூடாது என்று அமெரிக்கா இந்தியாவிடம் 
வற்புறுத்தியது. ஆனால் மோடி அரசு அதை ஏற்கவில்லை.
தற்போது ஹுவாய் நிறுவனம் இந்தியா முழுவதும்
வாய்ப்புள்ள இடங்களில் 5ஜி trialsஐ நடத்திக் கொண்டு
இருக்கிறது.

5G trials நடத்துவதற்காக இந்த நிறுவனங்களுக்கு
5ஜி அலைக்கற்றை வழங்கப் பட்டுள்ளது. 5ஜி
அலைக்கற்றை இல்லாமல் 5G trials எப்படி நடத்த இயலும்?

ஹுவாய் குறித்து இந்திய முதலாளிகளின் தீண்டாமை?!
-------------------------------------------------------------------------------------------
இந்திய முதலாளிகள் ஹுவாய் ஆதரவு, ஹுவாய் எதிர்ப்பு
என்று இரண்டு பிரிவாக உள்ளனர்.
ஹுவாய் ஆதரவுக் கூட்டணி: இதில் வோடாபோன் மற்றும்
ஏர்டெல் (Vodafone and Airtel) முதலாளிகள் உள்ளனர்.
வோடாபோன் ஒரு பிரிட்டிஷ் நிறுவனம். இதனுடன்
merge ஆகி விட்டார் பிர்லா.

ஹுவாய் எதிர்ப்புக் கூட்டணியில் மேதகு முகேஷ் அம்பானி
இருக்கிறார். அவர் சாம்சங் நிறுவனத்துடன் கூட்டணி
ஏற்படுத்தி உள்ளார். சாம்சங் என்பது எந்த நாட்டு
நிறுவனம்? வாசகர்கள் பதிலளிக்கலாம். பதில்
தெரியாதவர்கள் முகநூலில் உள்ள கிராம்சியவாதிகளிடம்
கேட்டு அறியலாம்.

முந்திய வாக்கியத்தில் உள்ள பகடியை உங்களால்
புரிந்து கொள்ள இயலுமெனில், உங்களின் IQ = 100
என்று நீங்கள் முடிவு செய்யலாம்.

முதலிடத்தில் உள்ளதா தமிழ்நாடு"
-----------------------------------------------------
இந்தியாவிலேயே 5G trials குறித்து முழுவீச்சில்
விவாதம் நடக்க வேண்டிய இடம் தமிழ்நாடு.
ஏன்? தொலைதொடர்பு அமைச்சர்களாக முன்பு
இருந்த இரண்டு பேர் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றனர்.
1) தயாநிதி மாறன்
2) ஆ ராசா
இவ்விருவரும் தற்போது எம்பிக்களாக இருக்கின்றனர்.

எனவே தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்டணக்
கழிப்பிடத்திலும், ஒவ்வொரு சாராயக் கடையிலும்
5G trials குறித்து தீவிரமான விவாதம் நடக்க
வேண்டும். ஆனால் 5ஜி குறித்த எந்த அறிவோ
புரிதலோ இல்லாமல் இருக்கிற கூட்டம்
தமிழ்நாட்டில்தான் அதிகம்.

இந்து முஸ்லீம் பிரச்சினையை மட்டும்தான் தமிழ்நாட்டில்
பேச வேண்டும் என்பது இங்குள்ள "முற்போக்கு"களின்
எழுதப்படாத சட்டம். 5ஜியை அடுத்து 6ஜி, 7ஜி வந்தாலும்
இங்குள்ள போலி முற்போக்கு இந்து முஸ்லீம்
பிரச்சினையைத்தான் பேசிக்கொண்டு இருப்பான்.

இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு, திருச்சியில்
இருந்து ஒரு பெரிய மனிதர், "தயாநிதி மாறனையும்
ஆ ராசாவையும் குறிப்பிட்ட நீங்கள், ஏன் என் பெயரை
விட்டு விட்டீர்கள்?" என்று உரிமையுடன் கோபித்துக்
கொண்டார். யார் அவர்?

அவர்தான் திருநாவுக்கரசர். இவர் தற்போது காங்கிரஸ்
கட்சியில் இருக்கிறார் என்று நம்புகிறேன். இவரும்
தொலைதொடர்புத் துறையில் அமைச்சராக
இருந்தவர்தான். ஆனால் இணை அமைச்சராக
இருந்தார். எப்போது 2003-04 காலத்தில். ஆம், வாஜ்பாய்
அவர்களின் பாஜக அரசில் அமைச்சராக இருந்தார்.
இந்தியாவில் உள்ள எல்லாக் கட்சிகளிலும் இவர்
இருந்து விட்டார். இவர் அமைச்சராக இருந்த
காலம், தொழில்நுட்பத்தைப் பொறுத்து  ஹைதர் அலி
காலம். எனவேதான் இவரைச் சேர்க்கவில்லை.

அடுத்து ஒரு முக்கியமான செய்தியுடன் இக்கட்டுரையை
நிறைவு செய்யலாம்.இது பொருளுற்பத்தி பற்றிய
கட்டுரை. பண்பாட்டு விவகாரங்களை நான்
எழுதுவதில்லை. அது கிராம்சியவாதிகளின் ஏரியா.
5G trials குறித்து நான் எழுதாவிட்டால் வேறு யாரும்
எழுதப் போவதில்லை. எனவே நான் எழுதித் தொலைக்க
வேண்டி உள்ளது.

பொருளுற்பத்தி பற்றிய கட்டுரைகள் ஆங்கிலத்தில்
மட்டுமே உள்ளன. ஒரு வறண்ட நடையில் இக்கட்டுரைகள்
இருக்கும். ஆனால் நான் மிகவும் சுவாரஸ்யமான
நடையில் எழுதி, இதில் உள்ள செய்திகள் உங்களின்
மூளையில் பதியும் வண்ணம் எழுதி உள்ளேன்.  

சரி, அந்த முக்கியமான செய்திக்கு வருவோம்.
இந்தச் செய்தியின் கதாநாயகர் ஜே சென் என்பவர்.
இவர் ஹுவாய் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவர்.
(Jay Chen, CEO, Huawei India).

5G trialsஐ ஒட்டி டெல்லியில் இவர்
1) புரட்சியாளர் தயாநிதி மாறன்
2) புரட்சியாளர் ஆ ராசா
ஆகிய இருவரையும் சந்தித்து உரிய மரியாதை
செய்தார். உரிய மரியாதை என்றால், தயாநிதி மாறனைப்
பொறுத்து அது ராஜ மரியாதைதான் என்பதை
நுண்மாண் நுழைபுலம் உள்ளவர்கள் அறிவார்கள்.
இத்தகைய மரியாதை நிமித்தமான சந்திப்புகளை
வரவேற்போம்.
***************************************************** 





 
     
 
  

        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக