வெள்ளி, 20 மார்ச், 2020


தடைப்பட்டுவிட்ட 5ஜி ஏலம்!
-------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------
கொரோனா வைரஸ் புண்ணியம் கட்டிக் கொண்டது.
5ஜி ஏலம் தடைப்பட்டு நிற்கிறது. நிதியாண்டு 2021ன்
முதல் குவார்ட்டரில் ஏலம் நடைபெற வேண்டும்.
நடைபெற வழியில்லை.

5ஜி அலைக்கற்றையின் விலையாக (Base price)
ரூ 5.86 லட்சம் கோடியை ஏலத்தின் ஆரம்ப விலையாக
நிர்ணயித்துள்ளது TRAI.

ரூ 6 லட்சம் கோடி என்பது ஆரம்ப விலை என்றால்,
பலரும் ஏலம் கேட்டுக் கேட்டு, தொகை உயர்ந்து
குறைந்தது ரூ 10 லட்சம் கோடியாவது அரசுக்குக்
கிடைக்கும் என்று சப்புக் கொட்டுகிறார் அமைச்சர்
ரவிசங்கர் பிரசாத்.

5G Spectrum:
----------------
Bandwidth: 3.3 GHz to 3.6 GHz
quantum: 8293.95 units.


2010ல் 3ஜி ஏலம் நடைபெற்ற போது, அதற்கான Base priceஆக
ரூ 30,000 கோடியை நிர்ணயித்து இருந்தது TRAI.
ஏலத்தின் இறுதியில் ரூ 67,000 கோடி கிடைத்தது
அரசுக்கு.

ஆனால் இன்று நிலை என்ன?
கபில் சிபல் 2012ல் நடத்திய 2ஜி ஏலம் படுதோல்வி
அடைந்து ஒருவர் கூட ஏலம் எடுக்க முன்வரவில்லை.
தற்போதைய 5ஜி ஏலமும் படுதோல்வி அடையும்!
காரணம் நிறுவனங்களிடம் பணம் இல்லை!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக