புதன், 4 மார்ச், 2020

ஆ ராசா ரூ 1.76 லட்சம் கோடி ஊழல் புரிந்தார்
என்பது இமாலயப் பொய். இதை அன்றே உரக்கச்
சொன்னவன் நான். ஆனால் ஆ ராசா ஒரு
மீடியாக்கர் (சராசரி)  அமைச்சர். டெலிகாம் போன்ற
சிக்கலான துறையைக் கையாளும் அளவுக்கு
அவருக்கு ஆற்றலும் திறனும் இல்லை; பெரும்
பூர்ஷ்வாக்களின் தொடர்பும் இல்லை. எனவே
வெளிப்படையாக டாட்டாவுக்குச் சலுகை
காட்டி, மற்ற  ஏகபோக பூர்ஷ்வாக்களின் 
பகையைச் சம்பாதித்தார். இப்படி வெளிப்படையாகப்
பகைப்பது ஒரு அமைச்சருக்கு உகந்தது அல்ல.
இரண்டாவது ஆ ராசாவுக்கு போர்ஷ்வா கிளப்பில்
எந்த ஒரு face valueம் கிடையாது.

சரத் பவார் கபில் சிபல் லெவலில் உள்ள
அமைச்சர்கள்தான் இத்துறைக்குப் பொருத்தம்.


ஜியோவிடம் 2ஜி, 3ஜி அலைக்கற்றை எல்லாம்
கிடையாது. அவர்களிடம் high speed 4G LTE இருப்பதால்
அதிக வாடிக்கையாளர்களைப் பிடித்தனர். இன்று
Market leader ஜியோதான். இதனால் அவர்கள் மிக்க
குறைந்த விலைக்கு 1 GB data கொடுக்க முடிகிறது.
அதே நேரத்தில் இதில் கணிசமான risk எடுத்துத் தான்
கொடுத்தனர். பெரும் முதலீட்டை கண்மூடித்தனமாக
இதில் செலவழித்தார் முகேஷ் அம்பானி.

5ஜி போட்டியில் BSNL களத்திலேயே இல்லை.
5ஜி அலைக்கற்றை விலை மிகவும் அதிகம்.
அவ்வளவு பணம் செலுத்தி தேவையான அளவுக்கு
(quantum in Mega Hertz) 5ஜி அலைக்கற்றையை
வாங்கும் அளவுக்கு இன்றுள்ள நிறுவனங்களில்
ஜியோவைத் தவிர வேறு யாருக்கும் நிதிநிலைமை
சீராக இல்லை.

எனவே ஏலம் தோல்வி அடையும். அதாவது எதிர்பார்த்த
வருவாய் கிடைக்காது. இந்திய நிறுவனங்களின்
நிதி நிலைமை  சீரடைந்த பின், அடுத்த ஆண்டில்
இந்த ஏலத்தை நடத்தலாம். அலைக்கற்றையை
வாங்குவதற்குத் தேவையான நிதியைக் கடனாக
வழங்க SBI உள்ளிட்ட வங்கிகள் தயாராக இல்லை.
இதுவரை கடன் வாங்கித்தான் இந்த நிறுவனங்கள்
அலைக்கற்றையை வாங்கின.

ஒருவேளை அந்நிய நாட்டு நிறுவனங்கள்
ஏலத்தில் பங்கெடுத்து 5ஜி அலைக்கற்றையை
வாங்குமானால், அது இந்திய நிறுவனங்களுக்குத்
தோல்வியாகவே முடியும்.

ஆக எப்படிப் பார்த்தாலும் தோல்விதான்!
இந்தியாவில் நடைபெறும் ஏலத்தில், இந்திய
நிறுவனங்கள் வெற்றி பெற வேண்டும் அல்லவா?
------------------------------------------------------------------------
கோதை அம்மா,
ரூ 1.76 லட்சம் கோடி ஊழலை ஆ ராசா செய்யவில்லை
என்பது ஒரு ஒளி வீசும் உண்மை. உண்மைகள்
முரட்டுப் பிடிவாதம் கொண்டவை என்பது ஓர்
ஆங்கிலப் பழமொழி.

ஆ ராசா ஒரு மீடியாக்கர் (mediocre) அமைச்சர். அவரால்
ஒருபோதும் ரூ 1.76 லட்சம் கோடி ஊழலைச்
செய்ய இயலாது. அதற்கான சாமர்த்தியம் (IQ உட்பட)
அவரிடம் மருந்துக்கும் கிடையாது.

ரூ 1.76 லட்சம் கோடி ஊழல் புரிய வேண்டுமென்றால்
அது ஒரு சில ஜாம்பவான்களின் கூட்டு முயற்சியால்
மட்டுமே நடைபெற இயலும். அதாவது ப சிதம்பரம்,
சரத் பவார், பிரணாப் முகர்ஜி போன்ற BIG SHOTS
கூட்டுச் சேர்ந்தால் மட்டுமே ரூ 1.76 லட்சம் கோடி
அளவுக்கு ஊழல் புரிய முடியும். இந்த elite clubல்
ஆ ராசா வெறும் errand boyயாக மட்டுமே இருக்க
முடியும். அவரின் தகுதி அவ்வளவுதான். இதுதான்
உண்மை.

மற்றப்படி, ஒரு  மீடியாக்கர் மத்திய அமைச்சர்
எவ்வளவு ஊழல் புரிவாரோ, அதை ஆ ராசாவும்
புரிந்திருப்பர் என்பது goes without saying. இதை
நான் மறுக்கவில்லை; மறுப்பவனும் அல்ல.

சரி, இக்கட்டுரை ஆ ராசாவைப் பற்றியது அல்ல.
5ஜி ஏலம் குறித்த முக்கியமான கட்டுரை.
அது குறித்துப் பேசுங்கள், விவாதியுங்கள்.
     

இந்திய நிறுவனங்கள் பங்கு கொள்ளும்
அளவுக்கு வலிமை பெற்ற பிறகு, இந்த
ஏலத்தை நடத்துவதே நாட்டுக்கு நல்லது.
சீனாவின் ஹுவாய் ஏலத்தில் பங்கெடுத்து
வெற்றி பெறுமானால், அது தேசத்தின் மிகப்பெரிய
தோல்வி. இந்திய நிறுவனங்களுக்கும் மிகப்
பெரிய தோல்வி. சுதேசித் தத்துவம் சுடுகாட்டுக்குப்
போய்விடும்.

3ஜி ஏலத்தை நடத்திய ஆ ராசா நிர்ணயிக்கப்பட்ட
விலையான ரூ 30,000 கோடியை விட மிக மிக
அதிகமாக ரூ 67,000 கோடிக்கு ஏலம் விட்டார்.
இது அப்படியே அரசு கஜானாவுக்குச் சென்றது.

இன்னொரு அலைக்கற்றையும் உண்டு. அதன் பெயர்
BWA spectrum. இது 3ஜியை விட அதிக ஆற்றல்
உடைய அலைக்கற்றை. இதையும் ஆ ராசா ஏலம்
விட்டார். இதிலும் எதிர்பார்த்த விலையை விட
அதிக விலைக்கு ஏலம் போனது. அந்த வருவாயும்
அப்படியே அரசு கஜானாவில் சேர்ந்தது.


ஜியோவிடம் illegal எதுவும் இல்லை. அலைக்கற்றையை
ஜியோ வாங்கியபோது, அதுவும் legal முறைப்படியே
நடந்தது.

ஆனால் வாடிக்கையாளர்களைக் கவரவும்,
மற்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களைத்
தங்கள்பால் ஈர்க்கவும், ஜியோ கையாண்ட முறைகள்
நிச்சயமாக unfair trade practice என்ற வகையில்தான் வரும்.

போட்டியை ஒழுங்குபடுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு
என்னும் level playing fieldஐ உருவாக்கித் தருவதே
TRAI என்னும் மத்தியஸ்த அமைப்பின் வேலை.
ஆனால் டிராய் ஜியோவுக்கு சாதகமாக நடந்து
கொண்டது.

இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் குறித்தும் COMMUNICATION
குறித்தும் உள்ள சட்டங்கள் ஹைதர் அலி காலத்தவை.
நவீன காலத் தேவைகளுக்கு ஏற்ப, புதிய சட்டங்கள்
இன்னமும் இயற்றப் படவில்லை. எனவே ஜியோவின்
unfair trade practiceஐ சட்டரீதியாக முறியடிக்க
வாய்ப்பில்லை.

இந்த நிலையில் டிராய் அமைப்பு பாரபட்சமற்ற
முறையில் நடந்து கொள்ள வேண்டும். ஆனால்
டிராய் அமைப்பு ஜியோவுக்கு சாதகமாக மட்டுமே
நடந்து கொண்டது. இன்னும் சொல்ல நிறைய
உள்ளது. குறுகிய காலத்திலேயே ஜியோ
சந்தையைச் சீர்குலைத்து விட்டது.இக்காரணங்களால்
நான் ஜியோவை எதிர்க்கிறேன்.  
 
 . 

          


  
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக