புதன், 25 மார்ச், 2020

கொரோனா பற்றிய உலகின் முதல் வெண்பா!
---------------------------------------------------------------------
செத்தொழி ஓடிவிடு பீடைக் கொரோனாவே
இத்தேயம் தன்னில் உனக்கென்ன வேலை
புறந்தூய்மை தன்னில் உலகின் தலையாய் 
அறமுடையிந் நாட்டிலில்கொ ரோன.
--------------------------------------------------------------
அறமுடை இந்நாட்டில் இல் கொரோன
என்று ஈற்றடியைக் கொண்டு கூட்டவும்.
கொரோன என்பது குறுக்கல்  விகாரம்.
இல் கொரோன என்பதன் பொருள்
இல்லை கொரானா என்பதாகும்.

ஈசன் எந்தை இணையடி நீழலே என்பதில்
நீழல் என்பது நீட்டல் விகாரம்.
அது போல, இல் கொரோன என்பது குறுக்கல்  விகாரம்.
--------------------------------------------------------------------------

வாசக அன்பர்களே,
கொரோனா பற்றிய உலகின் முதல் வெண்பாவை
வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் பேறு பெற்றவர்கள்.

இந்த வெண்பாவை ஆதரிப்பது உங்களை கொரோனாவில் 
இருந்து காக்கும். இந்த வெண்பாவை ஆதரிக்காதவர்களை
கொரோனா தாக்குவதற்கான நிகழ்தகவு = 0.9999999.

புழேந்திப் புலவருக்கும் காளமேகப் புலவருக்கும் பின்
தமிழில் வெண்பா இயற்ற யாரும் இல்லையே!
தமிழ் அநாதை ஆகி விட்டதே!
தமிழ் இலக்கிய வளத்தை இழந்து நிற்கிறதே!
என்றெல்லாம் யார் எவரும் வாழ்ந்த வேண்டாம்!

புகழேந்திப் புலவரின் தொடர்ச்சி நான்தான்.
இன்று என்னை விட்டால் வெண்பா எழுதுவதற்கு
இத்தமிழ்நாட்டில் நாதி கிடையாது!

எனவே இந்த வெண்பாவை ஆதரியுங்கள்!
இதை ஆதரிப்பது உங்கள் கடமை!
 
****************************************************************

மருதுபாண்டியன்

=====================================================

சித்த மருத்துவமும் அல்லோபதியும்!
------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------
இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு, 1920களில்
சித்த மருத்துவமானது தமிழ்நாட்டில் பெரும்
செல்வாக்குடன் விளங்கியது. அதே போல ஆயுர்வேதம்
உள்ளிட்ட இந்திய மருத்துவமும் அன்று பெரும்
செல்வாக்குடன் திகழ்ந்தது.

அக்காலத்தில் 1900, 1910களில் இந்தியாவில் பிளேக்
நோய் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலி
கொண்டது. பிளேக்கை ஒழிக்க சித்த மருத்துவமோ
ஆயுர்வேதமோ எந்த மருந்தையும் கண்டுபிடிக்கவில்லை.

பின்னர் பெரியம்மை (smallpox) நோய் கொள்ளை நோயாய்
வந்தது. சித்த மருத்துவத்திடம் மருந்து இல்லை. ஆங்கில
மருத்துவமே பெரியம்மையை ஒழித்தது.

காலரா மலேரியா போன்ற கொள்ளை நோய்கள்
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பர்மா வரை பரவி நின்றன.
சித்த மருத்துவத்தால் காலராவையோ மலேரியாவையோ
ஒழிக்க முடியவில்லை.

எட்வர்ட் ஜென்னர் என்னும் இங்கிலாந்து மருத்துவர்
பெரியம்மை நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்து
அதை அடியோடு ஒழித்தார்.

ரொனால்டு ராஸ் என்னும் பிரிட்டானிய மருத்துவர்
மலேரியாவை ஒழித்தார்.

சித்த மருத்துவம், ஆயுர் வேதம் ஆகியவை புதுப்பிக்கப்
பட வேண்டும். நவீனமாக வேண்டும்.

அல்லோப்பதி என்பது அறிவியல் ரீதியான மருத்துவம்.
அது evidence based medicineஐக் கொண்டது. இது தொடர்ச்சியாக
update ஆகி வருகிறது.

சித்தமருத்துவம் ஆயுர்வேதம் ஆகியவற்றுக்கு நிச்சயமாக
ஒரு பாத்திரம் உண்டு. அவை அல்லோபதியின்
complimentary மற்றும் supplementaryஆக மட்டுமே இருக்க
முடியும்.
********************************************* 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக