வெள்ளி, 31 ஜூலை, 2020

சமஸ்கிருதத் திணிப்பு என்னும் பூச்சாண்டியும்
மக்களை திசைதிருப்பும் ஊழல் பேர்வழிகளும்!     
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
1) இந்தியாவில் The Hindu, Express, Times என்றெல்லாம்
ஆங்கில தினசரிகள் வருகின்றன. அதைப்போல
சமஸ்கிருதத்தில் ஏதாவது தினசரிப் பத்திரிகை
வருகிறதா?

2) தமிழில் தினமணி, தினத்தந்தி, தினமலர் என்றெல்லாம்
தினசரிகள் வருகின்றன. அது போல சமஸ்கிருதத்தில்
ஏதேனும் தினசரி வருகிறதா?

3) தந்தி TV, விஜய் TV, புதிய தலைமுறை, நியூஸ் 18
என்றெல்லாம் தமிழில் TV சானல்கள் உள்ளது போல
சமஸ்கிருதத்தில் உள்ளதா?

4) பிரணாய் ராய், ரஜ்தீப் சர்தேசாய், அர்னாப் கோஸ்வாமி
ஆகியோர் ஆங்கில TV சானல் நடத்துவது போல
யாரேனும் சம்ஸ்கிருத TV சானல் நடத்துகிறார்களா?

5) BA,MA பட்டப் படிப்பில் தமிழ்நாட்டில் தமிழ் மீடியம்,
ஆங்கில மீடியம் என்று இரண்டு வகை உள்ளது.
அது போல சமஸ்கிருத மீடியம் உள்ளதா?

6) எந்தப் பொறியியல் கல்லூரியிலோ அல்லது
மருத்துவக் கல்லூரியிலோ சம்ஸ்கிருத மீடியத்தில்
கல்வி கற்பிக்கப் படுகிறதா?

7) நோய் வந்தால், டாக்டரிடம் போகிறோம். எந்த
டாக்டராவது மருந்துச் சீட்டில் சமஸ்கிருதத்தில்
மருந்து எழுதிக் கொடுக்கிறாரா?

8) உற்பத்தி மொழி என்றால் என்ன என்று தெரியுமா?
சமஸ்கிருதம் இந்தியாவில் எங்காவது உற்பத்தி
மொழியாக இருக்கிறதா?

9) மேற்கண்ட எல்லாக் கேள்விகளுக்கும் இல்லை இல்லை
என்பதுதானே பதில்! சொல்லுங்கள்!

10) இப்படி எல்லாம் இல்லை இல்லை என்று இருக்கும்போது
சமஸ்கிருதத்தை எப்படியடா திணிக்க முடியும்?
யார் மீதடா திணிக்க முடியும்?

11) டாக்டர்களுக்கு உத்தரவு போட்டு, மருந்துச் சீட்டில்
சமஸ்கிருதத்தில் மருந்துகளை எழுதச் சொல்ல
முடியுமாடா? டாக்டர்கள் மீது திணிக்க முடியுமாடா?

12) ஏண்டா, மக்களை முட்டாளாக்கி, பொய்களைச்
சொல்லி, சதா திசை திருப்பிக் கொண்டு
இருக்கிறீர்கள்? சமஸ்கிருதத்தை யாராலும்
எவர் மீதும் திணிக்க முடியாது. இதுதான் உண்மை.
இந்த உண்மை மண்டையில் ஏறாதவன் உயிர் வாழத்
தகுதியற்றவன்.

13) அப்பன் பெயர் தெரியாத பயல்களே,
சமஸ்கிருதம் செத்துப் போச்சுடா! செத்து வருஷம்
ஆச்சுடா! அதை எப்படிடா திணிக்க முடியும்?
*******************************************************     

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
கவலை உனக்கிலை ஒத்துக்கொள்
எத்தொழில் ஏதும் தெரியாமல்
இருப்பது உனக்கே சரியாமோ!
...............கவிமணி..................................



இந்தியைத் திணிக்க முடியும்!
சமஸ்கிருதத்தைத் திணிக்க முடியுமா?
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
மத்திய அரசு நினைத்தால் இந்தியாவின் எல்லா
மாநிலங்களிலும் இந்தியைத் திணிக்க முடியும்.
இதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம்.

மதிப்புக்குரிய திமுக தலைவர் டி ஆர் பாலு
அவர்களை நாம் அறிவோம். இவர் 2004-2009
காலத்தில் டாக்டர் மன்மோகன் சிங் அமைச்சரவையில்
காபினெட் அமைச்சகராக இருந்தார். அதுவும்
நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது டாக்டர் மன்மோகன்சிங் இவரைக்
கூப்பிட்டு, நெடுஞ்சாலைத் துறையில் கொஞ்சம்
இந்தியைத் திணிக்குமாறு உத்தரவிட்டார்.
பிரதமரின் உத்தரவுக்கு உடனே கீழ்ப்படிந்த
டி ஆர் பாலு அதிகாரிகளை அழைத்து இந்தியைத்
திணிக்குமாறு உத்தரவிட்டார். எப்படி என்று பார்ப்போம்.

தேசிய நெடுஞ்சாலைகள் பற்றித் தெரியுமா?
அந்தச் சாலையில் என்றாவது பயணம் செய்து
இருக்கிறீர்களா? அந்தச் சாலைகளில் குறிப்பிட்ட
இடைவெளியில் மைல்கற்கள் உண்டு தெரியுமா?
அந்த மைல்கற்களைப் பார்த்து இருக்கிறீர்களா?

தமிழ்நாட்டில் உள்ள மைல்கற்களில் இந்தியில்
ஊர்ப்பெயர்கள் எழுதப் பட்டன. இதுதான்
இந்தித் திணிப்பு! படத்தில் வேலூரில் உள்ள
மைல்கல்லில் இந்தியில் எழுதப்பட்டு இருப்பதைக்
காணுங்கள்.

ஆக இந்தியை ஏதேனும் ஒரு வழியில் திணிக்க
முடியும். ஆனால் சமஸ்கிருதத்தை அப்படித்
திணிக்க முடியாது. எனவே சமஸ்கிருதத்
திணிப்பு என்பது மக்களை திசைதிருப்பும்
நாடகம்.
*********************************************** 




 
    



















தமிழ் மீடியத்தை மூர்க்கத் தனமாக
எதிர்க்கும் தனியார் மெட்ரிக் பள்ளி அதிபர்கள்!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
புதிய கல்விக் கொள்கையில் 5ஆம் வகுப்பு வரை
தமிழ் மீடியம் என்று வரையறுக்கப் பட்டுள்ளது.
இதைக் கேட்டதுமே தீயை மிதித்தது போல்
அலறுகிறார்கள் மெட்ரிக் பள்ளி அதிபர்கள்!

LKG, UKG முதற்கொண்டு, குழந்தையின் மழலைப்
பருவ காலத்திலேயே ஆங்கிலத்தைத் திணித்த
இந்தக் கயவர்கள் தமிழ் மீடியத்தை ஏற்றுக்
கொள்வார்களா? மாட்டார்கள்! வெறி கொண்டு
எதிர்ப்பார்கள்.

5ஆம் வகுப்பு வரை தமிழே பயிற்றுமொழி என்று புதிய
கல்விக் கொள்கையில் சட்டம் செய்யப் பட்டு உள்ளது
என்பதை மூர்க்கத் தனமாக எதிர்க்கிறது மெட்ரிக் லாபி.
இது மிகவும் சக்தி மிக்க ஒரு லாபி.

தமிழ்ப் பற்று உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?
----------------------------------------------------------------------------------
1) 5ஆம் வகுப்பு வரை தமிழே பயிற்று மொழி என்பதை
நாம் வரவேற்க வேண்டும்.

2) காலப்போக்கில் இது 8ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்
பட்டு, பின்னர் குறைந்தது 10ஆம் வகுப்பு வரை
தமிழே பயிற்றுமொழி என்ற நிலை உருவாக வேண்டும்.

3) இந்தியாவில் உள்ள பல மாநில மொழிகளில் குறிப்பாக
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளி,
மராத்தி, குஜராத்தி, இந்தி ஆகிய மொழிகளில்
10ஆம் வகுப்பு வரையிலான அறிவியலைச் சொல்ல
முடியும். அதற்கான ஆற்றல் உள்ள மொழிகள்தான் அவை.

4) தற்போது சற்றுத் தட்டுத் தடுமாறி 12ஆம் வகுப்பு
வரையிலான அறிவியலை தமிழ், தெலுங்கு ஆகிய
மொழிகள் சொல்கின்றன.

5) இந்தியாவின் பிரதானமான மாநில மொழிகள் (அதாவது
அரசமைப்புச் சட்டம் கூறுகிற மொழிகள்) அனைத்தும்
12ஆம் வகுப்பு வரையிலான அறிவியலைத் தங்கள்
மொழியில் சொல்லத் தகுதி பெற வேண்டும்.
அவற்றைத் தகுதி உடையதாக ஆக்குவதே அந்தந்த
தேசிய இனப் பற்றாளர்கள் மற்றும் போராளிகளின்
கடமையாக இருக்க வேண்டும்.

6) இன்னும் ஒரு 30 ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள
எல்லா மாநில மொழிகளும் 12ஆம் வகுப்பு வரையிலான
அறிவியலைத் தங்கள் மொழியில் சரளமாகச்
சொல்ல வேண்டும். இதை சாத்தியப் படுத்திக்
காண்பிக்க வேண்டும்.

7) இதுதான் Maximum possibility. மற்றப்படி PhD வரை
மாநில மொழியில் கல்வி என்பதெல்லாம் நடைமுறை
சாத்தியமற்றது. அது தேவையும் அற்றது.

8) இந்த லட்சியத்தை நம்மால் அடைய முடியுமா?
தனியார் மெட்ரிக் அதிபர்களை வீழ்த்தாமல்,
நம்மால் ஒருபோதும் இந்த லட்சியத்தை
அடைய முடியாது.

9) தனியார் மெட்ரிக் அதிபர்கள் பசை உள்ளவர்கள்.
தமிழ் உணர்வாளர்களை அவர்கள் விலைக்கு
வாங்குவார்கள். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

10) 5ஆம் வகுப்பு வரை தமிழ் மீடியம் என்பதை
ஆதரிக்க மறுப்பவன் எவனும் தமிழின் எதிரியே.
***************************************************
       

.
      



     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக