போலி நாத்திகக் கயமை!
------------------------------------------
இவற்றை விளக்குவதில் என்ன கடினம் அல்லது
இயலாமை இருக்க முடியும்?
1) தஞ்சைப் பெரிய கோவில் மானுட முயற்சியின்
மகத்துவத்தை முரசறைந்து கொண்டிருப்பது.
அஃது ஓர் மகத்தான கலைப் படைப்பு: அறிவியல்
படைப்பு. அக்கோவில் மனிதர்களால் கட்டப் பட்டது.
கடவுளால் கட்டப்படவில்லை.
2) திருச்செந்தூருக்கு பக்தர்கள் செல்கிறார்கள்.
உலகெங்கும் பக்தர்கள் சிறப்பிக்கப்பட்ட இடங்களுக்குச்
செல்கிறார்கள். மெக்காவுக்கு ஆண்டுதோறும் ஹஜ்
யாத்திரை செல்லும் இஸ்லாமிய பக்தர்கள் உலகெங்கும்
உள்ளனர்.
3) இந்தியாவில், அறிவியல் வழியில் கடவுளை மறுத்து
கடவுள் இல்லை என்று நிரூபிக்கும் பொருள்முதல்வாதம்
என்னும் தத்துவம் மக்களிடம் பரவவில்லை; செல்வாக்குப்
பெறவும் இல்லை. மாறாக கருத்துமுதல்வாதம் என்னும்
கடவுளை வணங்கும் தத்துவமே 99.9999999 சதம்
மக்களால் ஏற்கப்பட்டுப் பின்பற்றப் படுகிறது.
4) இங்கு பொருள்முதல்வாதம் ஏன் மக்களிடம்
பரவவில்லை. பெரும் நாத்திகர்கள் என்று
கருதப்படும் அண்ணாத்துரை, கருணாநிதி
வகையறாக்கள் அனைவருமே போலி நாத்திகர்கள்;
கருத்துமுதல்வாதிகள். இவர்களுக்கு பொருள்முதல்வாதம்
என்றால் என்னவென்றே தெரியாது.
5) இங்குள்ள கம்யூனிஸ்டுகளும் பொருள்முதல்வாதத்தை
மக்களுக்கு கற்றுக் கொடுக்க முயலவில்லை.
ஆக மேற்கூறிய காரணங்களால், அறுபடை வீடுகளுக்கு
மட்டுமல்ல, மேல்மருவத்தூருக்கும் ஆண்டுதோறும்
அல்லது ஆண்டில் பல்வேறு விஷேச நாட்களில்
மக்கள் கூட்டம் கூட்டமாகப் போவது நிகழவே செய்யும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக