வியாழன், 16 ஜூலை, 2020


தனித்தமிழ்நாடு என்ற கோரிக்கையை அடைய
வேண்டுமெனில் ஆயுதம் தாங்கிய வன்முறைப்
போராட்டங்களின் மூலமே அது கைகூடும்.
அஹிம்சை வழி, அறவழி, மகாத்மா காந்தி வழி,
வள்ளலார் வழி, இன்ன பிற வன்முறையற்ற
போராட்டங்களால் தனித்தமிழ்நாடு கோரிக்கையில்
0.00000000000000000000000000000000000000000000001 விழுக்காடு
கூட அடைய இயலாது.  தனித்தமிழ்நாடு என்பதெல்லாம்
பித்துக்குளித் தனமான கற்பனாவாதம்.

50 லட்சம் பேருக்கு மேல் உயிர்த் தியாகம் செய்து,
ஒன்றிய அரசின் ராணுவத்தில் பல ஆயிரம்
ராணுவத்தினரைக் கொன்று, நவீன ஆயுதங்களின்
மூலம் பெரும் மக்களைத் திரட்டி, ஒரு பெரும்
வன்முறைப் போராட்டத்தை நடத்தினாலும்,
இந்திய ஒன்றிய அரசு தன் ஆற்றலின் சிறு பகுதியை
மட்டும் செலவிட்டு, அப்போராட்டத்தை ரத்த
வெள்ளத்தில் மூழ்கடிக்கும்.

இந்திய ராணுவத்தை எதிர்த்து நிற்க ஆயுதம் வேண்டாமா?
ஆய்தம் வாங்க வாய்க்கரிசி வேண்டாமா?
கொஞ்சம் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் வாங்கவே
லட்சம் கோடி ரூபா வேண்டுமே! அதற்கு எங்கே போவது?

மூளையே இல்லாத முட்டாள்களின் இழிந்த சிந்தனைக்
கசடுகலே (scum) தனிநாட்டுச் சுயஇன்பம்!
காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே!   ளே

சேயீன் நகரில் இயற்கையாகவே நமக்கு ஒரு
experimental setup தயார் நிலையில் உள்ளது.
அங்குள்ள ஒரு நீரற்ற அகலமான கிணற்றில்
நட்ட நடு மத்தியானத்தில் உச்சி வெயிலில்
சூரியன் விழுகிறது. ஆனால் அதன் நிழல் விழவில்லை.
எனவே இங்கு கோணம் பூஜ்யம் டிகிரி. (ஆண்டுதோறும்
நிகழும் solstice தினத்தன்று இவ்வாறு இந்த இடத்தில்
நிழல் விழாமல் போவது காலங்காலமாக நிகழ்வது.
இது யாத்திரிகர்கள் மூலமாக பிற நகரங்களுக்கும்
பரவிய செய்தியே. இதை எரோட்டஸ்தீனஸ் நன்கறிவார்)

அடுத்து தன்னுடைய சொந்த ஊரில் அலெக்ஸாந்திரியாவில்
அவரே நிழலின் கோணத்தை, அதே solstice தினத்தன்று
அளந்து கொண்டார். வேலை முடிந்தது.

அவரின் உண்மையான பிரச்சினை இரு ஊர்களுக்கும்
இடையிலான தூரத்தைத் துல்லியமாக அளப்பதே.
இது அவர் காலத்தில் கடப்பாறையை விழுங்கி
ஜீரணிப்பதற்குச் சமம். இது பற்றி எழுதுவதெனில்
இன்னொரு தனிக் கட்டுரை வேண்டும்.
  

சூரியன் உச்சிக்கு வரும்போது. காலை 10 மணிக்கு
கம்பத்தை நட்டால், வெயிலின் காரணமாக நிழல்
விழும். சூரியன் உச்சிக்கு வர வர, நிழலின் நீளம்
குறைந்து கொண்டே வரும். இருப்பதிலேயே
குறைவான நீளமுள்ள நிழலின்போது, கோணம் என்ன
என்று அளக்க வேண்டும். அப்படித்தான் எரோட்டஸ்தீனஸ்
அளந்தார்.


நவீன அரசுகள் மொழியை மட்டுமே ஆதாரமாக
அடித்தளமாகக் கொண்டு அமைந்தவை அல்ல.
எனவே பிறப்புரிமை என்பதெல்லாம் எதுவும் இல்லை.
காலங்காலமாக தமிழ்நாடு பாரதத்தின் அங்கமாக
இருந்து வந்தது. பிரிட்டிஷ் காலனி ஆட்சியின்போது,
பிரித்தாளும் சூழ்ச்சியுடன் பிரிட்டிசாரும் அவர்களின்
தாசர்களும் பல்வேறு பிரிவினைச் சிந்தனைகளை
மக்களின் மனத்தில் விதைக்க முயன்றார்கள்.
அது தமிழகத்தில் மட்டுமே ஓரளவு வெற்றி அடைந்தது.


மக்கள் இயக்கங்களில் நேரடியாகப் பங்கேற்று
அரசியல் செய்யும்போதுதான், இயக்கம்
நடத்தும்போதுதான் சரி- தவறு புரியும்.
சாத்தியப்பாடு-சாத்தியமின்மை புரியும்.
அதுவரை குட்டி முதலாளித்துவ சுயஇன்பமே
தலைதூக்கி நிற்கும்.

தொழிலாளி வர்க்கம் தன்  சொந்த அனுபவங்களில்
இருந்துதான் பாடம் கற்றுக் கொள்கிறது  என்றார் லெனின்.
அதாவது தத்துவ போதனைகளால் அல்ல, சொந்த
அனுபவங்களால் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆயுதப் போராட்டம் பற்றிய சிந்தனையின் சுவடு கூட
இல்லாத குட்டி முதலாளித்துவம் மட்டுமே தனித்தமிழ்நாடு
பற்றிப் பேசுகிறது.

ஆயுதப் போராட்ட வழி என்றால் குட்டி முதலாளித்துவம்
ஓடி விடும். அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல்
சுடுகாடு  என்கிறார் அண்ணாத்துரை. பிரிவினைத் தடைச்
 சட்டம் என்று ஜவஹர்லால் நேரு சொன்ன மறு நிமிடம்
மண்டியிட்டு சரணாகதி அடைந்தார். இதுதான் குட்டி
முதலாளித்துவம்.

தனித்தமிழ்நாடு பேசும் யார் எவராவது மக்களிடம்
வாக்கெடுப்பு (plebiscite) நடத்தி, மக்களின் விருப்பம்
தனிநாடு என்று தீர்மானித்தார்களா? இல்லையே!
எல்லாம் குட்டி முதலாளித்துவச் சுய இன்பம்!
   


 அருள் கூர்ந்து தமிழ் குறித்து எனக்குப் பாடம் எடுக்க
வேண்டாம். நீங்கள் எந்த மக்கள் இயக்கத்திலும்
பங்கேற்காமல் வெறும் திண்ணை வேதாந்தம் பேசுவதால்
என்ன பயன்? களத்தில் நிற்க வேண்டும்.
நீருக்குள் மீனாக மக்களோடு மக்களாக நிற்க வேண்டும்.

சகல சௌபாக்கியங்களும் நிறைந்த ஒரு குட்டி
முதலாளித்துவ வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு,
களத்தில் இறங்கிப் போராடாமல்,  வறட்டுத் திண்ணை
வேதாந்தம் பேசுவது பரிதாபத்துக்கு உரியது மட்டுமின்றி
கேலிக்கும் உரியதாகும்.

தேசிய இனங்களின் உரிமை பற்றிப் பேசுவதற்கு
இந்த உலகில் லெனினைத் தவிர வேறு யாருக்கும் அருகதை
கிடையாது. குட்டி முதலாளித்துவம் ஆளும் அரசின்
ஒரு சிறிய அடக்குமுறையை எதிர்த்து நிற்கக் கூட
ஆற்றல் இல்லாதது.

மக்கள் இயக்கத்தில் பங்கெடுக்காமல்,
மக்களின் கருத்தை உணராமல்,
சமகால உலகின் அரசுகளின் நிலை பற்றிய
எந்த அறிவும் இல்லாமல் 
மதுபோதையில் இருப்போர் பிரக்ஞையற்றுப்  
பேசுதல் போல் பேசுவோர் பேசிக்கொண்டே
செல்லட்டும். குடித்து விட்டு எதையோ உளறிக்
கொண்டு ரோட்டில் தள்ளாடிக் கொண்டே நடப்பவனுக்கு
என்ன பெறுமதி உண்டோ, அந்தப் பெறுமதி கூட
இவனுக்கு கிடையாது.

போராட்டத்தில் பங்கேற்று அனுபவம் பெறாமல்,
மக்கள் இயக்கங்களில் பங்கேற்காமல் செய்யப்படும் 
armchair criticism பயனற்றது. தமிழ் தேசிய இனத்தின்
உரிமை என்ன என்பதை மார்க்சியம் தீர்மானிக்கும்.
மார்க்சியம் மட்டுமே தீர்மானிக்கும்.
  



 இதற்குக் 
  

நான் என்ன நினைக்கிறேன்?


இங்கு சீரியசாகப் பேசுவதானால்

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக