திங்கள், 6 ஜூலை, 2020

போலிப் போராளியும் கற்பழிப்புக் குற்றவாளியுமான
முகிலனின் சாயம் வெளுத்து ஓராண்டு ஆகிறது!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
சொந்த வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக
தானாகவே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார்
முகிலன். இது உண்மையில் self exile ஆகும். இது இன்று
நன்றாக அம்பலப் பட்டு விட்டது.

இதற்கு ஒரு உண்மைப்பூச்சு அளிக்கும் பொருட்டு,
முகிலனின் ஆலோசனையின் பேரில், அவரின் மனைவி
பூங்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு
ஹேபியஸ் கார்ப்பஸ் வழக்குப் போட்டார். இதன் மூலம்
நீதிமன்றத்தையும் ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகத்தையும்
ஏமாற்றினார் முகிலன்.

கோவையைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர்
ரமேஷ் மற்றும் சிலரின் பண உதவியுடன் முகிலனின்
தலைமறைவு வாழ்க்கை தொடர்ந்தது.

கடந்த ஆண்டு 2019 இதே நாளில் ஆந்திர மாநிலம்
திருப்பதியில் வைத்து கைது செய்யப்பட்டு சென்னை
கொண்டுவரப் பட்டார் முகிலன். அவர் மீதான கற்பழிப்பு
வழக்கைத்  தொடர்ந்து, அவர் கைது செய்து சிறையில்
அடைக்கப் பட்டார். கற்பழிப்புக் குற்றங்கள் போக
மகளிர் வன்கொடுமைச் சட்டத்திலும் அவர் மீது
குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டது.

சுமார் மூன்று மாத சிறைவாசத்திற்குப் பின், ஜாமீன்
கிடைக்கப்பெற்று, தற்போது ஜாமீனில்
இருக்கிறார் முகிலன். கரூரைச் சேர்ந்த அந்த
இளம் பெண் கொடுத்த கற்பழிப்பு வழக்கானது
தற்போது கரூர் மகிளா நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்
பட்டுள்ளது. மகிளா நீதிமன்றம் என்றால் மகளிருக்கான
தனி நீதிமன்றம் ஆகும். இது கிட்டத்தட்ட ஒரு விரைவு
நீதிமன்றம் (fast track court) போன்றது. விரைவாக நீதி
கிடைக்கும். எனினும் கொரானா முகிலனைக்
காப்பாற்றி வருகிறது.

முகிலன் விவகாரத்தில் சொல்லப்படும் உலக மகா பொய்
என்ன தெரியுமா? முகிலன் ஒரு ஸ்டெர்லைட் எதிர்ப்புப்
போராளி என்பதுதான். தூத்துக்குடியில் போய் இதைச்
சொன்னால் எல்லோரும் சிரிப்பார்கள். தூத்துக்குடிக்கே
ஒருபோதும் சென்றிராத, ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி
ஒரு இழவும் தெரியாத மூடர்கள் மட்டுமே இந்தப்  
பொய்யைப் பரப்பி வருகிறார்கள்.
 
ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்து
13 பேர் உயிர் துறந்தனர். இந்து என்று நடந்தது? 2018
மே 22 அன்று போலீசின் வெறித்தனம் வெளிப்பட்டது.
மே 22 தேதியின் முக்கியத்துவம் என்ன? அன்றுதான்
போராட்டத்தின் 100ஆவது நாள். எனவே மாவட்ட
கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி கிளப்பியது.

இந்தப் பேரணியில் முகிலன் கலந்து கொண்டாரா?
சொல்லுங்கள் முட்டாள்களே! ஸ்டெர்லைட் போராளி
என்று மோசடியாக உங்களால் உயர்த்தப்படும்
முகிலன் இந்தப் பேரணியில் கலந்து கொண்டாரா?
துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்டாரா?
இல்லை, இல்லை, இல்லை!

மே 22 என்பது ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்
100ஆவது நாள். இதற்கு 100 நாட்களுக்கு முன்னதாகவே
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பித்து
விட்டது. ஒரு பெரும் போராட்டக் கமிட்டி அமைக்கப்
பட்டு போராட்டம் ஒழுங்கமைக்கப் பட்டது.பேராசிரியர்
பாத்திமா பாபு போன்றோர் போராட்டக் கமிட்டியில்
இடம் பெற்று இருந்தனர்.

முகிலன் ஆதரவு மூடர்களே, இந்தப் போராட்டக்
கமிட்டியில் முகிலன் இடம் பெற்று இருந்தாரா?
சொல்லுங்கள் பொய்யர்களே! போராட்டக் கமிட்டியில்
முகிலன் இடம் பெறவில்லை என்பதுதானே உண்மை!
போராட்டக் கமிட்டியிலேயே இடம் பெறாத முகிலன்
எப்படி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளி ஆக முடியும்?

பெப்ரவரி 2018ல் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம்
தொடங்கியது. மே 22 அன்று போராட்டத்தின் 100ஆம் நாள்.
இந்த 100 நாட்களில் என்றாவது ஒருநாள் முகிலன் இந்தப்
போராட்டத்தில் கலந்து கொண்டாரா? இல்லை,
இல்லை, இல்லை.

அது மட்டுமல்ல, இந்த 100 நாட்களில் ஒருநாள் ஒரு
பொழுதாவது தூத்துக்குடிக்கு வந்தாரா? இல்லையே.

1) தூத்துக்குடியை எட்டிக்கூடப் பார்க்காத முகிலன்       
2) போராட்டக் கமிட்டியில் இடம் பெற்றிராத முகிலன்
3) 100 நாட்களாக நடந்த போராட்டத்தில் ஒரு நாள்
கூடப் பங்கேற்காத முகிலன்
4) 100ஆம் நாள் பேரணியில் பங்கேற்று துப்பாக்கிச்
சூட்டை எதிர்கொள்ளாத முகிலன்
எப்படி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளியாக
இருக்க முடியும்?

முகிலன் ஸ்டெர்லைட் போராளி என்பது எப்பேர்ப்பட்ட
மோசடி! எப்பேர்ப்பட்ட பித்தலாட்டம்!

முகிலன் சென்னை போலீசாரிடம் ஒப்படைக்கப்
பட்டபோது ரயில்வே பிளாட்பாரத்தில் நாடக
பாணியில் கோஷம் போடுகிறார்.
அனில் அகர்வாலைக் கைது செய்!

நல்லது. இந்தக் கோழை முகிலனால் வைகுண்டராஜனைக்
கைதுசெய் என்று கோஷம் போட தைரியம் உண்டா?
மாபெரும் சூழலியல் போராளி என்று மோசடி செய்யும்
பித்தலாட்டப் பேர்வழி முகிலனால், வைகுண்டராஜனை 
எதிர்த்து மூச்சு விட முடியுமா?

வைகுண்டராஜனின் வி வி மினரல் கம்பெனியும்
டைட்டானியம் கம்பெனியும் தூத்துக்குடியில் சூழலை
மாசு படுத்துவது பற்றி கோழை முகிலனால் மூச்சு
விட முடியுமா? வைகுண்டராஜனை எதிர்த்து மூச்சு
விட்ட வரலாறாவது முகிலனுக்கு உண்டா?

முகிலனை ஆதரித்து பொய்களை மட்டுமே தமிழ்ச்
சமூகத்தில் பரப்பி வந்த அத்தனை கயவர்களும்
இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கடமைப்
பட்டவர்கள். ஆனால் எவர் ஒருவரிடம் இருந்தும்
நேர்மையான பதில் வராது.

உண்மை அறியும் குழுவின் கடமை!
--------------------------------------------------------
முகிலன் தானாகவே தன் சொந்த நெருக்கடிகளால்
தலைமறைவு ஆன பிறகு, அ மார்க்ஸ், தியாகு ஆகிய
இருவரும் சேர்ந்து ஓர் உண்மை அறியும் குழுவை
அமைத்தனர். எந்த உண்மையை அவர்கள்
கண்டறிந்தனர்?  தாங்கள் கண்டறிந்த உண்மைகளை
சமூகத்திற்குச் சொல்ல அவர்கள் கடமைப் பட்டவர்கள்.

இதுவரை ஏதேனும் "உண்மை"களைக் கண்டுபிடித்து
உள்ளனரா? இல்லை. அப்படியானால் அந்த உண்மையை
சமூகத்திற்குச் சொல்லி தங்களின் குழுவைக்
கலைக்க வேண்டியது அவர்களின் கடமை அல்லவா?
**************************************************************   
 
    மருதுபாண்டியன்    எதை உறுதி செய்ய வேண்டும்?

இங்கு சொல்லப்பட்டவற்றில் கருத்துக்கள் குறைவு.
அனைத்தும் நிகழ்வுகள் மற்றும் அவை பற்றிய
உண்மைகள். .

1) முகிலன் ஜாமீனில் இருப்பது உண்மை.
2) மூன்று மாத சிறைவாசத்துக்குப் பின்னரே ஜாமீன்
கிடைத்தது. இதுவும் உண்மை.
3) முகிலன் மீது பெண் வன்கொடுமைச் சட்டப் பிரிவுகளில்
குற்றப் பத்திரிக்கை உள்ளது. இதுவும் உண்மை.
4) இவ்வழக்கு மகிளா (மகளிர்) நீதிமன்றத்தில்
இருக்கிறது. இதுவும் உண்மை.
5) முகிலன் இன்று வரை தலைமறைவுக் காலத்தில்
எங்கே இருந்தான் என்று சொல்லவே இல்லை. ஏன்?
தன்னுடைய வக்கீல் சுதா அம்மையார் கேட்ட கேள்விக்கே
இன்னும் பதில் சொல்லவில்லை.

6) விஷயம் தெரியாத முட்டாளாக, இழிந்த பாமரனாக
இருந்தால் ஒரு இழவும் மண்டையில் ஏறாது.
 
     
 
   

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக