புதன், 1 ஜூலை, 2020

பிரீத்தி ஜிந்தாவின் அலைநீளம் என்ன?
தீபிகா படுகோனின் அலைநீளம் என்ன?
விராத் கோலியின் அலைநீளம் என்ன?
கண்டு பிடிப்போம்!
-------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------
இவ்விடம் உயர்திணை அஃறிணை சார்ந்த அனைவருக்கும்
அலைநீளம் கண்டுபிடித்துத் தரப்படும்.

எலக்ட்ரானின் அலைநீளத்தைக் கண்டு பிடிப்பது
எப்படி என்று முந்திய பதிவில் பார்த்தோம்.
அதே methodல் மனிதர்களின் அலைநீளம் கண்டறியலாம்.
உரிய தரவுகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
வாசகர்கள் மனிதர்களின் அலைநீளம் கண்டறிந்து
விடையை கமென்ட் பகுதியில் எழுதுமாறு வேண்டுகிறோம்.

தரவுகள்:
------------- 
பிரீத்தி ஜிந்தா mass = 60 kg; velocity = 5 kmph.
தீபிகா படுகோன் mass = 50 kg; velocity = 7 kmph
விராத் கோலி mass = 70 kg; velocity = 12 kmph.

Given that
எலக்ட்ரானின் நிறை = 9.1 X 10^ (minus 31) kg
பிளாங்கின் மாறிலி (Planck,s constant)= 6.626 X 10^ (minus 34)
இந்தக் கணக்கைச் செய்யப் பயன்படும் சூத்திரம்
இதுதான்.
அலைநீளம் (lambda) = h/mv
h = Planck's constant; m = mass of electron; v = velocity of electron.
இப்போது கண்டுபிடியுங்கள்
 --------------------------------------------------------
வாசகர்கள் இந்தக் கணக்கைச் செய்ய வேண்டும்.
அடுத்து இந்திய தமிழக அரசியல் தலைவர்களின்
அலைநீளம் கண்டுபிடிக்கப் படும்.
-------------------------------------------------------------------------------- 
பொருளானது அலை வடிவில் இருக்கிறது என்ற
மகத்தான விஞ்ஞானி லூயி டி பிராக்லி முன்வைத்த
கோட்பாடு மூளையில் பதிய வேண்டும்.        

====================================================
காற்றில் ஒலி செல்லும்போது, அங்கு எதிர்கொள்ளப்படும்
மாற்றமானது isothermal வகையிலானது என்று
நியூட்டன் அனுமானித்தார்.

ஒரு சிஸ்டத்தில் மாற்றம் ஏற்படுகிறபோது
அதன் வெப்பநிலை மாறாமல் இருந்தால்
அத்தகைய மாற்றம் isothermal change எனப்படும்.

இதற்கு மாறாக, காற்றில் ஒலி செல்லும்போது,
அங்கு எதிர்கொள்ளப்படும் மாற்றம் adiabatic
வகையிலானது என்று லேப்லேஸ் அனுமானித்தார்.
ஒரு சிஸ்டத்தில் மாற்றம் ஏற்படுகிறபோது
heat transfer நிகழாமல் இருந்தால் அத்தகைய
மாற்றம் adiabatic change எனப்படும்.
----------------------------------------------------------
செய்வது எப்படி?
--------------------------
இதை மனக்கணக்காகச் செய்யலாம்.
Denominatorல் 10^(minus) 31 உள்ளது. இது Numeratorக்குப்
போகும்போது, மைனஸ் ப்ளஸ் ஆகி, 10^31 ஆகும்.

Numeratorல் ஏற்கனவே 10^(minus) 34உள்ளது. இத்துடன்
10^31 சேரும்போது 10^(minus) 3 ஆகிறது.

அடுத்து Denominatorல் velocity உள்ளது. அதாவது
வேகமாகிய 10^5 Denominatorல் உள்ளது. இது Numeratorக்குப்
போகும்போது, மைனஸ் ஆகி, 10^9(minus) 5 ஆகும்.
Numeratorல் ஏற்கனவே  10^(minus) 3 உள்ளது. இரண்டும்
சேரும்போது 10^(minus) 8 கிடைக்கிறது.

Numeratorல் 6.626ம் Denominatorல் 9.1ம் உள்ளது. On simplication
0.728  கிடைக்கும். இதையே 7.28 என்று எழுதினால்,
நமக்கு 10 to the power of minus 1 கிடைக்கும். Numeratorல்
ஏற்கனவே 10^ (minus) 8 உள்ளது. அத்துடன் இது
சேரும்போது 10^(minus) கிடைக்கிறது. இதை
நானோ மீட்டர் என்று சொல்லலாம்.

ஆக அலைநீளம் 7.28 நானோ மீட்டர் என்று விடை
கிடைத்து விடுகிறது.

இந்தக் கணக்கைச் செய்ய வேண்டும், வாசகர்கள்
செய்து பார்க்க வேண்டும் என்பதற்காக இவ்வளவும்
எழுதி இருக்கிறேன். யாராவது ஒருவருக்காவது
பயன்பட்டால் சரிதான்.
------------------------------------------------------------------------------.

கமலஹாசனின் பிக்பாஸ் நடந்து கொண்டிருந்த
நேரம். போன பிக்பாஸ் அல்ல; அதற்கும் முந்தியது.
அதில் ஜனனி ஐயர் என்ற ஒரு பெண் வருவார்.
அந்தப் பெண்ணின் அலைநீளத்தைக் கண்டு
பிடிக்கச் சொல்லி அப்போது ஒரு கணக்கு
கொடுத்திருந்தேன்.

ஏன் இப்படியெல்லாம் கணக்கு கொடுக்க
வேண்டி உள்ளது? லூயி டி பிராக்லி கண்டு பிடித்த
பொருளுக்கும் அலைப்பண்பு உண்டு என்ற
கொள்கையை பிரபலப் படுத்தவே.

இது புரியாமல் குவான்டம் தியரியை ஒருபோதும்
புரிந்து கொள்ள முடியாது.


சீன அரசு ஒரு பாசிச அரசு. சீனத்தின் பொருளாதாரம்
ஏகாதிபத்திய பொருளாதாரம். அதில் சோசலிசம்
கிடையாது. சேனா முதலாளித்துவ நாடாக இருந்து
ஏகாதிபத்தியமாக வளர்ச்சி அடைந்த நாடு.


அருள்கூர்ந்து தாங்கள் முதலில் தெளிவு அடையுங்கள்.
சீனா சோஷலிச நாடா இல்லையா என்பதில் முடிவுக்கு
வாருங்கள். கேள்விகளை எழுப்பிக் கொண்டு
இருக்காதீர்கள். ஒரு தெளிவுக்கு வந்த பிறகு
பேச ஆரம்பியுங்கள்.







            .   
  
        




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக