இந்தப் புத்தகத்தை அது வெளிவந்த போதே
படித்தேன். அதில் வைகுண்டராஜனைப் பற்றி
என்ன பெரிதாக எழுதி இருக்கிறார்?
மாமன் அடிச்சானா மல்லிகைப் பூச்செண்டாலே
அத்தை அடிச்சாளோ அரளிப் பூச்செண்டாலே
என்கிற ரீதியில் வைகுண்டராஜனை மிக
மென்மையாகக் கடிந்துள்ளார்.
2012, 2013 ஆண்டுகளில் தாது மணல் கொள்ளை
பற்றிய, ஆதாரத்துடன் கூடிய ஒரு வீடியோவை
என் நண்பர் வழக்கறிஞர் சந்திரபோஸ் தயாரித்து
இருந்தார். அதை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு
டிவியாகச் சுற்றினோம். யாரும் அதை ஒளிபரப்பத்
தயாராக இல்லை. அப்போது வின் டிவியில்
நெறியாளராக இருந்த சி ஆர் பாஸ்கரன் இரண்டு
நிகழ்ச்சிகளில் எனக்கு வாய்ப்புத் தந்தார்.
ஆனால் எங்களின் வீடியோவை ஒளிபரப்பத்
தயாராக இல்லை.
தூத்துக்குடியை மாசுபடுத்தும் வைகுண்டராஜனின்
ஆலைகளை எதிர்த்தோ அல்லது புற்று நோயை
உண்டாக்கும் அவரின் டைட்டானியம் பிக்மென்ட்ஸ்
நிறுவனத்தை எதிர்த்தோ முகிலன் போராடுவாரா?
இன்றைய குட்டி முதலாளித்துவம் போராட முன்வராது.
ஆனால் போராடுவது போல் நடிக்கும். அப்படிப்பட்ட
ஒரு நல்ல நடிகர் முகிலன். அவர் மீது சேற்றை வாரி
இறைப்பதாகப் பேசுவதெல்லாம் பெரும் அபத்தம்.
பாதுகாப்பான விஷயங்களைத் தேர்ந்தெடுத்து
பாதுகாப்பாகப் போராட்டம் செய்து, போராளி என்ற
பெயர் வாங்குவது முகிலனின் வழக்கம்.
சாராய ஆலை அதிபர்கள் ஜகத் ரட்சகன், டி ஆர் பாலு,
டிடிவி தினகரன் ஆகியோரை எதிர்த்துப் போராட
முகிலன் தயாரா? முதுகுத் தொலியை உரித்து
விடுவார்கள் என்று தெரியும். அது பாதுகாப்பற்ற
போராட்டம் என்று தெரியும். எனவே அது போன்ற
போராட்டங்களை அவர் கனவில் கூட நினைக்க
மாட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக