வெள்ளி, 31 ஜூலை, 2020

22 மொழிகள் இருக்கின்றன!
---------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------
8ஆவது அட்டவணையில் 22 மொழிகள் உள்ளன.
இந்த 22 மொழிகளும் பள்ளிக் கல்வியில் 
12 வகுப்பு வரை, பயிற்று மொழி ஆக வேண்டும்.
இது 30 ஆண்டுகளுக்குள் அதாவது 2050 வாக்கில்
சாத்தியப் படுமென்றால், உண்மையிலேயே அது
பொற்காலம் ஆகும்.

அதற்கு மேல் 22 மொழிகளிலும் PhD வரை கல்வி
என்பது, மேற்கூறிய 22 மொழிகளும்
உற்பத்தி மொழிகளாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.
இந்தியாவில் 22 மொழிகளும் உற்பத்தி மொழிகளாக
இருப்பது நடைமுறை சாத்தியமற்றது.     


உற்பத்தியானது மென்மேலும் உலகமயம் ஆகிக்
கொண்டிருக்கிற ஒரு புறச்சூழ்நிலையில்,
அனைத்து மொழிகளும் உற்பத்தி மொழிகளாவது 
என்பது நடைமுறை சாத்தியமற்றது. எண்சாண்
உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பது போல
பற்பல மொழிகள் இருந்தாலும் உற்பத்தி மொழியே
பிரதானம் ஆகும். எல்லா மொழிகளும் உற்பத்தி
மொழியாக முடியாது என்ற யதார்த்தத்தின் மீது
காலூன்றி நின்று கொண்டுதான் மொழிக்கொள்கையை
வகுக்க வேண்டும்.
*********************************************** 
வாசகர்களுக்குச் சில கேள்விகள்!

1) டாக்டர் அம்பேத்கார் அரசமைப்புச் சட்டத்தை
எழுதி முடித்து அது செயல்பாட்டுக்கு வந்தபோது,
அதில் எத்தனை அட்டவணைகள் இருந்தன?

2) தற்போது 2020ல் எத்தனை அட்டவணைகள் உள்ளன?

3) இந்திய மொழிகள் பற்றிய அட்டவணை எது?

4) 22 மொழிகளில் புதிதாகச் சேர்க்கப்பட்ட
மொழிகள் எவை?

இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். எதையும்
தெரிந்து கொள்ளாமல் வாழும் வாழ்க்கையில்
தரம் (quality) இருக்காது.
****************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக