வெள்ளி, 3 ஜூலை, 2020

ராஜகோபாலன் சொல்கிறார்!
செங்கோட்டையன்  செய்கிறார்!
----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
ப்ளஸ் டூ வகுப்பில் (11,12 வகுப்புகளில்) தற்போது
ஆறு பாடங்கள் உள்ளன. இரண்டு மொழிப்பாடங்கள்
மற்றும் நான்கு subjects ஆக மொத்தம் ஆறு.

இதில் புழுவினும் இழிந்த தற்குறி செங்கோட்டையன்
கத்தியைப் போட்டு விட்டார். ஆறு பாடங்களை
ஐந்தாகக் குறைத்து விட்டார். உயிர் வாழத் தகுதியற்ற
கயவர்கள் கல்வியில் விளையாடுகிறார்கள்.

எனினும் புழுவினும் இழிந்த செங்கோட்டையனின்
இக்கீழ்மையின் வேர்கள் மூத்த கல்வியாளர்
எஸ் எஸ் ராஜகோபாலன் அவர்களிடம் இருந்தே
கிளம்புகின்றன.

பள்ளி மாணவர்களுக்கு அதிகமான பாடச்சுமை
இருப்பதாக அண்மையில் மூத்த கல்வியாளர்
எஸ் எஸ் ராஜகோபாலன் கட்டுரை எழுதியது
பலருக்கும் நினைவு இருக்கலாம். புத்தகங்களின்
பக்க அளவுகளைக் குறிப்பிட்டு "சுமை"யைச்
சுட்டிக் காட்டி இருந்தார் எஸ் எஸ் ராஜகோபாலன்.

இவரின் கட்டுரையைப் படித்த செங்கோட்டையன்
ஆறு பாடங்களை ஐந்து பாடங்களாகக் குறைத்து
விட்டார். அதாவது தற்போது உள்ள subject பாடங்கள்
நான்கு. அதாவது Maths, Physics, Chemistry,Biology.

இனி நாலுக்குப் பதில் மூன்றுதான். அதாவது
Maths, Physics,Chemistry அல்லது
Biology, Physics, Chemistry என்பதாக மூன்றுதான்.

ராஜகோபாலன் நினைத்தார்!
செங்கோட்டையன் செய்து காட்டி விட்டார்.

மதிப்புக்குரிய மூத்த கல்வியாளர் மற்றும்
முன்னாள் பள்ளித் தலைமையாசிரியர்
எஸ் எஸ் ராஜகோபாலன் அவர்களுக்கு
வயது மிக அதிகம். I think he is an octogenarian.
அவர் நிறையப் படித்தவரும்கூட.

துரதிருஷ்டம் என்னவெனில், அவர் காலத்தில் அவர்
M.Sc Mathsல் படித்த பல பாடங்கள் இன்று ப்ளஸ் டூவில்
12ஆம் வகுப்பில் வந்து விட்டன.

வெக்டர் அல்ஜிப்ராவை அவர் பட்டப் படிப்பில்தான்
படித்தார். இன்று 12ஆம் வகுப்பில் அது தவிர்க்க
இயலாத பாடம்.

Probability Distribution பற்றிய பாடம் 12 ஆம் வகுப்பில்
இருப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார்
ராஜகோபாலன். பாவம், அதை அவர் MScயில்தான்
படித்தார்.

Discrete mathematicsல் வரும் Group, Abelean group பற்றியெல்லாம்
அவர் MScயில்தான் படித்தார். இன்று அது XIIல் உள்ளது.
இது போன்ற விஷயங்களை அவரால் ஜீரணிக்க
முடியவில்லை. எனவே ப்ளஸ் டூவுக்கு பாடச்சுமை
அதிகம் என்ற முட்டாள்தனமான முடிவுக்கு வந்து
சேருகிறார்.

இது அவருடைய குற்றம் அல்ல. அது காலத்தின் குற்றம்.
நாடு சுதந்திரம் அடையும் முன்னரே MSc முடித்தவர்கள்,
அதாவது அந்த செட்டைச் சேர்ந்தவர்கள் என்ன படித்தார்கள்
என்றால், இன்றைய ப்ளஸ் டூ பாடங்களுக்கு மேல்
ஒன்றும் படிக்கவில்லை என்றுதான் கூற இயலும்.
இது முழு உண்மை என்று சொல்ல இயலாவிடினும்
தோராயமான உண்மைதான் இது.

அதிர்ஷ்டவசமாக 1940கள் 1950கள் காலக்கட்டத்தின்
BA, MA கணித சிலபஸ் எனக்குக் கிடைத்தது. அக்காலத்தில்
அறிவியல் பாடங்களுக்கும் BA, MA என்றுதான் பட்டம்
வழங்கப்படும். நான் அவற்றைப் படித்தவன் என்ற
தைரியத்தில்தான் இந்த உண்மையைச் சொல்கிறேன்.

DEO தெரியும்! DBEO தெரியுமா? District Board Educational Officer
என்று பொருள். ஒருமுறை எங்கள் பள்ளிக்கு இன்ஸ்பெக்சன்
வந்த DBEO என்னுடைய கணிதப் புத்தகத்தைப்
பார்த்தார். XI std Elective subject Algebra and Geometry பாடப்
புத்தகம் அது. என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார்.

அப்புறம் HMஇடம் கூறினார்: "பிச்சாண்டி, நான் MScயில்
படித்ததை எல்லாம் உமது பையன் SSLCயிலேயே
படிக்கிறான்" என்றார்.

எனவே எஸ் எஸ் ராஜகோபாலன் போன்ற மூத்தவர்களின்
ஆலோசனை சமூகத்திற்குப் பயன்படாது.
அவர்கள் நன்கு ஒய்வு எடுக்கட்டும். பாடத்திட்டம்
பற்றி கருத்துக் கூறுவதைக் கைவிடட்டும்.
***************************************************



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக