வெள்ளி, 24 ஜூலை, 2020

மார்க்சியம் என்று சொன்னாலே அது மண்ணுக்கு ஏற்ற,
மக்களுக்கு ஏற்ற, சமுக அமைப்புக்கு ஏற்ற மார்க்சியம்
என்றுதான் பொருள்படும். எனவே தனியாக மண்ணுக்கு
ஏற்ற மார்க்சியம் என்று சொல்லத் தேவையில்லை.

வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து,
பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து வேறுபட்ட
சமூக அமைப்பைக் கொண்டது அன்றைய ஜாரின் ரஷ்யா.
மேற்கூறிய மூன்று நாடுகளுடன் ஒப்பிடும்போது,
ஜாரின் ரஷ்யா பின்தங்கிய உற்பத்தி முறையைத்தான்
கொண்டிருந்தது. எனவே அங்கு மார்க்சியத்தைப்
பிரயோகிப்பது எப்படி என்ற கேள்வி எழுந்தபோது
அதற்கு விடை கண்டார் லெனின்.

அதுதான் குறிப்பான நிலைமைகளுக்கு ஏற்ப குறிப்பாகப்
பிரயோகிப்பது என்ற லெனினின் கொள்கை.
Concrete analysis of the situation and concrete application of Marxism
என்று லெனின் கூறியது இதுதான்.  ஸ்தூலமான
பிரயோகம் என்பது இதுதான்.

இந்திய நாட்டுக்கென்று மாலெ கட்சியின் ஒரு
வேலைத்திட்டம் வகுத்துக் கொள்கிறோம் அல்லவா?
அதன் பெயர் என்ன? அதன் பொருள் என்ன?
அதுதான் ஸ்தூலமான பிரயோகம் (concrete application) ஆகும்.
இந்த ஸ்தூலமான பிரயோகம்தான் மண்ணுக்கேற்ற
மார்க்சியம் ஆகும். எப்போது லெனினியம் வந்ததோ,
அப்போதே மண்ணுக்கேற்ற மார்க்சியம், நாட்டுக்கேற்ற
மார்க்சியம் இவையெல்லாம் வந்து விட்டன.

ஜாரின் ரஷ்யாவுக்கு போல்ஷ்விக் கட்சி ஒரு
வேலைத்திட்டத்தைத் தயாரித்தது. அதையா நாம்
இந்தியாவுக்கு அப்படியே வைத்துக் கொண்டோம்?
இல்லையே!

இந்தியாவுக்கென்று தனியாக ஒரு வேலைத்திட்டத்தைத்
தயாரித்தோம் இல்லையா? அந்தத் தனியான
வேலைத்திட்டம்தானே மண்ணுக்கேற்ற  மார்க்சியம்!
இதற்கு மேலும் தனியாக மண்ணுக்கேற்ற மார்க்சியம்
என்று ஏதாவது உள்ளதா? இல்லையே!

எனவே இதற்கப்புறமும் மண்ணுக்கேற்ற மார்க்சியம்
என்று பேசுவது ஒன்று அறியாமையாக இருக்க
வேண்டும்; அல்லது கிரிமினல் நடவடிக்கையாக
இருக்க வேண்டும். அவ்வள்வுதான்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக