புதன், 1 ஜூலை, 2020

லீலாவதியில் இருந்து ஒரு கணக்கு!
--------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
12ஆம் நூற்றாண்டின் இந்தியக் கணித நிபுணர்
பாஸ்கராச்சார்யர் எழுதிய லீலாவதி என்னும்
கணித நூலில் இருந்து ஒரு கேள்வி!
மிக மிகஎளிய கேள்வி!
வாசகர்கள் விடையளிக்க வேண்டும்.

ஒரு நெக்லஸ் அறுந்து விட்டது. அதனுள் இருந்த
முத்துக்கள் சிதறி விட்டன. ஆறில் ஒரு பங்கு
முத்துக்கள் தரையிலும், ஐந்தில் ஒரு பங்கு முத்துக்கள்
படுக்கையிலும் கிடந்தன. மூன்றில் ஒரு பங்கு
முத்துக்களை அந்தப் பெண்ணும், பத்தில் ஒரு பங்கு
முத்துக்களை அப்பெண்ணின் கணவனும்
பிடித்து வைத்துக் கொண்டனர்.
நெக்லசோடு ஆறு முத்துக்கள் ஒட்டிக் கொண்டிருந்தன.
எனில் நெக்லசில் இருந்த மொத்த முத்துக்கள் எத்தனை?

விடையளியுங்கள்!
**************************************************
இதை மனக் கணக்காகச் செய்யலாம்.  அபி
12ஆம் நூற்றாண்டின் கணக்கு.
1/6 plus 1/5 plus 1/3 plus 1/10 = (5 + 6+10+3)/30
= 24/30 which implies the total pearls = 30.

சரியான விடை = 30 முத்துக்கள்.

லீலாவதி நூலில் உள்ள  இந்தக் கணக்கின்
மொழிபெயர்ப்பும் தழுவலுமே கணக்கதிகாரத்தில்
உள்ள கணக்கு.

கணக்கதிகாரம் என்ற நூல் சம்ஸ்கிருத நூல்களில்
உள்ள கணக்குகளின் மொழிபெயர்ப்பே என்று
கணக்கதிகாரத்தை எழுதிய காரி நாயனார்
கூறுகிறார். இரண்டு செய்யுட்கள் நூலின் பாயிரத்தில்
உள்ளன. இதை நேற்றே  எழுதி இருந்தேன்.

பாயிரம் என்றால் என்ன என்று பொருள் தெரியாதவன்
தமிழ்நாட்டில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

மொழிபெயர்ப்பு என்பதன் ஒப்புதல் வாக்குமூலம்!
--------------------------------------------------------------------------
கீழ் வரும் செய்யுள் கணக்கதிகாரம் நூலின்
பாயிரத்தில் உள்ளது.

ஆரிய மொழியால்முன்ன ரந்தண ரெடுத்துரைத்த
கூரிய கணிதநூலைக் குவலயந் தன்னில் யானும்
சூரியன் றனக்குநேரே தோன்றுமின் மினிப்புழுப்போல்

சீரிய தமிழாற் சொல்வேன் சிறந்தவரிகழாரம்மா




இரண்டாம் செய்யுள். இதுவும் பாயிரத்தில் உள்ளது.
இதுவும் தெளிவான ஒப்புதல் வாக்குமூலம்!

பன்னு வடசொற் பனுவறனை யிப்பொழுது
கன்னித் தமிழ் வாயாற் கட்டுரைத்தேன் - முன்ன
மகிழ்கின்ற வெண்ணின் வழிவந்த கணக்கெல்லா
மிகழ்வின்றி யேயுரைப்பேன் யான்.
(கணக்கதிகாரம், பாயிரம்)








   

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக