வெள்ளி, 31 ஜூலை, 2020

இந்திய அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள
எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகள்!  ரகுபதி

தேசிய மொழிகள் என்று அவை சொல்லப் படவில்லை.
அரசமைப்புச் சட்டப்படி, இந்தியாவில் எந்த ஒரு
மொழியுமே தேசிய மொழி இல்லை. இந்தி அலுவல்
மொழிதானே தவிர தேசிய மொழி இல்லை.

தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, குஜராத்தி உட்பட
மேற்கூறிய 22 மொழிகளும் தேசிய மொழிகளாக
அறிவிக்கப் பட வேண்டும் என்பது என் கருத்து.
இதற்கெல்லாம் குரல் கொடுக்க வேண்டும்.

இந்தியாவில் 22 மொழிகள் இருந்தும், ஒரு மொழி கூட
தேசிய மொழி இல்லை என்பது கேவலம்; கெளரவக்
குறைச்சல்.

இந்தியை தேசிய மொழியாக அறிவிக்க மகாத்மா காந்தி
தலைகீழாக நின்றார். ஆனால் இந்திக்கு ஆதரவே இல்லை.
இந்தியின் லட்சணம் அவ்வளவுதான் என்பது இன்றைய
தலைமுறைக்குத் தெரியாது.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக