இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன்
2020ஆம் ஆண்டிற்கான வான் கார்மன் விருது பெறுகிறார்!
-------------------------------------------------------------------------------
விண்வெளி நிபுணர்களைக் கொண்டு செயல்படும்
அமைப்பு சர்வதேச விண்பயண அகாடமி
(International Academy of Astronautics) ஆகும். 1960ல் தொடங்கப்பட்ட
இவ்வமைப்பு விண்வெளிப்பயண அறிவியலை
முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு
வருகிறது. தற்போது 96 நாடுகள் இவ்வமைப்பில்
உறுப்பினராக உள்ளன.
இதன் முதல் தலைவராக இருந்தவர் தியடோர் வான் கார்மன்
(Theodore Von Karman 1881-1963) என்னும் ஹங்கேரிய-அமெரிக்க
இயற்பியலாளர். விண்வெளிப்பயண இயல், விண்ணூர்தி இயல்,
காற்றியக்க அறிவியல் ஆகியவற்றில் பெரும் சாதனைகள்
புரிந்தவர் வான் கார்மன். இவரின் பெயரால் வான் கார்மன்
விருது 1982ல் நிறுவப்பட்டு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அறிவியலின் எந்தப் பிரிவிலுமான தலைசிறந்த பங்களிப்பு மற்றும் வாழ்நாள் சாதனைக்காக இவ்விருது வழங்கப் படுகிறது.
பூமியின் வளிமண்டலத்தையும் விண்வெளியையும்
எப்படிப் பிரித்தறிவது? விண்வெளி எங்கு தொடங்குகிறது?
இக்கேள்விகளுக்கு விடையளித்தார் வான் கார்மன்.
பூமியின் கடல் மட்டத்தில் இருந்து (above Mean Sea Level)
100 கிமீ உயரத்தில் (altitude) ஒரு கற்பனைக் கோட்டை வரைந்தார்
வான் கார்மன். இக்கோடே வளிமண்டலத்தையும்,
விண்வெளியையும் பிரிக்கும் கோடு என்றும் விண்வெளி
அங்கிருந்து தொடங்குவதாகக் கருதலாம் என்றும் கார்மன்.
கூறினார். அவரின் பெயராலேயே அக்கோடு கார்மன் கோடு
(Karman Line) என்று வழங்கப் படுகிறது.
2020ஆம் ஆண்டிற்கான கார்மன் விருதுக்கு இஸ்ரோ தலைவர்
டாக்டர் கே சிவன் அறிவிக்கப் பட்டுள்ளார். இவருக்கு முன்பு
இரண்டு இந்திய விண்வெளி அறிஞர்கள் இவ்விருதைப்
பெற்றுள்ளனர். அவ்விருவரும் இஸ்ரோவின் தலைவர்களாக
இருந்தவர்கள்.
யு ஆர் ராவ், 2005க்கான கார்மன் விருதையும்,
கே கஸ்தூரிரங்கன் 2007க்கான கார்மன் விருதையும்
பெற்றுள்ளனர். தற்போது இவ்விருதைப் பெறும் மூன்றாம்
இந்தியராக கே சிவன் புகழ் பெறுகிறார்.
130 கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக இவ்விருதைப்
பெறும் பச்சைத் தமிழர் கே சிவன் அவர்களை
வாழ்த்துகிறோம்!
************************************************************
.
2020ஆம் ஆண்டிற்கான வான் கார்மன் விருது பெறும்
இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களை
நியூட்டன் அறிவியல் மன்றம் வாழ்த்துகிறது.
அறிவியல் ஒளி ஜூலை 2020 இதழில் டாக்டர் சிவன்
பெற்ற விருது குறித்தும் வான் கார்மன் குறித்தும்
எழுதப்பட்ட எனது கட்டுரை வெளியாகக் கூடும்.
அதை படித்து கார்மன் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
10, 15 ஆண்டுகளுக்கு முன்பு, பாமக சார்பு
தினசரியான தமிழ் ஓசை இதழில் "வானம் வசப்படும்"
என்ற தலைப்பில் ஒரு நடுப்பக்கக் கட்டுரை எழுதி
இருந்தேன். அக்கட்டுரையில் கார்மன் கோடு
(Karman line) பற்றிக் குறிப்பிட்டு விளக்கி இருந்தேன்.
கார்மன் கோடு பற்றி தமிழில் எழுதப்பட்ட முதல்
குறிப்பு அதுதான். உலக அளவிலேயே பலருக்கும்
தெரியாத கார்மன் கோட்டை 15 ஆண்டுகளுக்கு முன்பே
தமிழ் வாசகனுக்கு அறிமுகப் படுத்தியன் நான்தான்.
MUYARSI SEYKIREN
முயற்சி செய்கிறேன்..
இணைக்கப்பட்ட அறிவியல் விளக்க வீடியோவைப்
பார்க்கலாம். காரல் செகன் எழுதிய காஸ்மாஸ்
(The Cosmos) என்ற நூலில் கூறப்பட்டபடி இந்த வீடியோ
தயாரிக்கப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக