ஞாயிறு, 19 ஜூலை, 2020

ஒபிபிசி 

ஆண்டு 1986 - அந்த காலகட்டம் வரை மாநில அரசு மருத்துவ கல்லூரிகளில் 100% இருக்கைகளும் மாநில அரசால் அம்மாநில மாணவர்கள் கொண்டு நிரப்பப்பட்டது. அவ்வாண்டு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பு: இந்த மருத்துவ சேர்பு நடைமுறை நல்லதல்ல எனவும். ஆல் இந்தியா கோட்டா (AIQ) என உருவாக்கி அதில் MBBS மற்றும் BDS படிப்பிற்கான 15% இருக்கைகளையும் MD மற்றும் MS படிப்பிற்காக 25% இருக்கைகளையும் மத்திய அரசிடம் ஒப்படைத்து விட வேண்டும் எனவும் அவ்விருக்கைகளுக்கு நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் இடஒதுக்கீடு இல்லாமல் போட்டி போட்டு பெற்றுக் கொள்ளலாம் என தீப்பு வழங்கியது.
🔥குறிப்பு: மத்திய கோட்டாவில் எந்த வித இடஒதுக்கீடும் இல்லாமல்!
______________________________________________
ஆண்டு 2005: அவ்வாண்டு மன்மோகன் சிங் தலைமையிலான அரசு MD மற்றும் MS படிப்பிற்கான இருக்கைகளை 25%ல் இருந்து 50% ஆக மத்திய அரசின் கோட்டாவுக்கு (AIQ) ஒப்படைத்து விட ஆணையிட்டது
🔥குறிப்பு: இன்றய நீட் போராளிகள் அன்று கோமாவில் இருந்த காலம். மத்திய கோட்டாவுக்கு ஏன் 25% அதிக இருக்கைகளை விட்டு கொடுக்க வேண்டும் என யாரும் போராடவில்லை. திமுக வும் அந்த அரசில் அங்கம் வகித்தது நியாபகம் இருக்கலாம். இன்னொரு குறிப்பு இது வரை மத்திய கோட்டாவுக்கு (AIQ) இட ஒதுக்கீடு கிடையாது
______________________________________________
ஆண்டு 2007: அவ்வாண்டு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வேறொரு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி முதல் முதலாக மத்திய கோட்டாவில் SC பிரிவினர்களுக்கு 15% மும் ST பிரிவினருக்கு 7.5%மும் இடஒதுக்கீட்டை வழங்க ஆணையிடுகிறது. ஆனால் அந்த தீர்ப்பில் OBC ஒதுக்கீடு குறித்து எந்த ஆணையும் இல்லை.
🔥குறிப்பு: இது வரையிலுமே மத்திய கோட்டாவில் OBCக்கு இட ஒதுக்கீடு கிடையாது
______________________________________________
ஆண்டு 2015: அவ்வாண்டு சலோனி குமார் என்பவர் OBC பிரிவினர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என உச்சநீதிமன்றத்தை நாடுகிறார். அந்த Case இன்று வரை விசாரணையில் உள்ளது
🔥குறிப்பு: இது வரையிலுமே மத்திய கோட்டாவில் OBC க்கு இட ஒதுக்கீடு கிடையாது
______________________________________________
ஆண்டு 2020: தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி அந்த மத்திய கோட்டாவில் OBC பிரவிருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளனர். இந்த Caseல் விளக்கம் அளித்த மத்திய அரசு குறியது: 2015ல் தொடுக்கபட்ட சலோனி குமார் வழக்கு இன்னும் விசாரணையில் இருப்பதாகவும். அந்த வழக்கின் இறுதி தீர்ப்பில் உச்சநீதிமன்றம் OBC பிரிவினருக்கும் எத்தனை சதவிகிதம் தர வேண்டும் என்ற பரிந்துரையை கூறுவார்கள் என்று எதிர்பார்பதாகவும் அதன் அடிப்படையில் OBC வகுப்பினருக்கான இட ஒதுக்கீடை உறுதி செய்வோம் என குறி இருக்கிறது நடுவன் அரசு. அந்த தீர்ப்பு வரும்வரை இடைக்காலமாக OBC பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு தரவும் ஒப்புக்கொண்டுள்ளது மத்திய அரசு. ஆனால் தமிழக கட்சிகளோ, மாநில கோட்டாவில் நாங்கள் OBC பிரிவினர்களுக்கு 50% இட ஒதுக்கீடு உறுதி செய்திருப்பதால் அதே போல் மத்திய அரசும் மத்திய கோட்டாவில் OBC பிரிவினர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற வாதத்தை வைத்துள்ளது. இந்த வழக்கு இன்றும் விசாரணையில் இருக்கிறது.
🔥குறிப்பு: அடுத்த ஆண்டு தேர்தல் வர இருப்பதினால் தமிழக கட்சிகளுக்கு இந்த வருடம் அக்கறை பொங்கி வருவது இயல்பு தான். இத்தனை வருடங்கள் மத்திய அரசில் பங்குதாரர்களாக இருந்தும் வராத நியாணோதயம் இப்பொழுது பிறந்திருக்கிறது. 1986 ஆண்டு முதலே OBC பிரிவினர்களுக்கு மத்திய கோட்டாவில் இட ஒதுக்கீடு இல்லை என்பதை மறந்து விட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக