சனி, 25 ஜூலை, 2020

கணிதத்துக்கான பரிசுகள்
------------------------------------------
கணிதத்துக்கு நோபெல் பரிசு இல்லை என்ற குறையைத்
தீர்க்கும் பொருட்டு,  கணிதத்துக்கு மட்டுமேயான பரிசாக
ஏபெல் பரிசு (Abel prize) 2003ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு
வருகிறது. நார்வே நாட்டுக் கணித மேதையான நியல்ஸ் ஹென்ரிக்
ஏபெலின் பெயரால், (Niels Henrik Abel 1802-1829) நார்வே அரசு
இப்பரிசை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இது கணிதத்தின்
நோபல் பரிசு என்று கருதப்படுகிறது.

இஸ்ரேல் நாடு ஆறு துறைகளில் உல்ஃப் பரிசை (Wolf prize)
அநேகமாக ஆண்டுதோறும் வழங்குகிறது. இவற்றுள்
கணிதத்திற்கான உல்ஃப் பரிசு பெரும் கெளரவம்
உடையதாகும். 1978 முதல் இப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

கணிதத்திற்கான பரிசுகளில் அடுத்துச் சிறப்பிடம்
பெறுவது பீல்டு மெடல் (Fields medal) ஆகும். கனடா நாட்டின்
கணித மேதை ஜான் சார்லஸ் ஃபீல்ட்ஸ் என்பவரின்
(John Charles Fields 1863-1932) பெயரால் அமைந்தது
இப்பதக்கம். 40 வயதுக்கு உட்பட்ட இளம் கணித
மேதைகளில் அதிகபட்சம் நான்கு பேருக்கு
நான்காண்டுக்கு ஒருமுறை இப்பரிசு வழங்கப்
படுகிறது. 

சதுரங்க வீரர்களும் கணித மேதைகளே. எனவே கணித
மேதைகளின் பட்டியலில் அவர்களும் இடம் பெறத்
தக்கவர்களே. 1935ஆம் ஆண்டிற்கான  உலக சதுரங்க
சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றவர்
மாக்ஸ் யூவ் என்ற கணித நிபுணரே (Max Euwe 1901-1981)
என்பது வரலாறு.  காரி காஸ்பரோவ், விஸ்வநாதன் ஆனந்த்
ஆகிய இருவரும் இன்றைய சதுரங்க  வீரர்களில் தலைசிறந்த
கணித நிபுணர்கள் ஆவர். 

இமானுவேல் லஷ்கர் தெரியுமா? ஜெர்மனியின் கணித மேதை.
இவர் சதுரங்க சாம்பியனும்கூட.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக