வெள்ளி, 31 ஜூலை, 2020

மாநிலங்கள் முரண்டு பிடிக்க வேண்டிய தேவை என்ன?
புதிய கல்விக் கொள்கை என்பது மாநிலங்களுக்கு
உடன்பாடானது. எனவே கற்பனைக்கெல்லாம்
இடமில்லை. ஏற்கனவே உள்ள பழைய கல்விக்
கொள்கைகளின் 80 சதம் இப்புதிய கொள்கையில்
உள்ளது.எனவே இதை மாநிலங்கள் எதிர்க்காது.    

இருமொழித் திட்டமும் பித்தலாட்டமும்!
---------------------------------------------------------------
தமிழ்நாட்டில் இருமொழித்திட்டம்தான் உள்ளது என்று 
அதிமுக அமைச்சர் சொல்வது பித்தலாட்டம் ஆகும்.
திமுக, அதிமுக என்று இரண்டு திராவிடக் கட்சிகளும்
இதே பித்தலாட்டத்தைத்தான் அரங்கேற்றி
வருகின்றனர்.

தனியார் பள்ளிகளில், மெட்ரிக் பள்ளிகளில் மும்மொழித்
திட்டம்தான் செயல்படுகிறது? பெரும்பாலான
குழந்தைகள் பிரெஞ்சு, ஆங்கிலம், இந்தி என்றுதானே
மூன்று மொழிகளைப் படிக்கிறார்கள். இது மும்மொழித்
திட்டம் அல்லாமல் வேறு என்ன?

கருணாநிதி இதைத் தடுத்து சட்டம் ஏதாவது போட்டாரா?
இப்போது ஆட்சியில் இருக்கும் பழனிச்சாமி, தனியார்
பள்ளிகளில் இரண்டு மொழிகளை மட்டுமே
கற்றுக் கொடுக்க வேண்டும் என்று சட்டம் போடுவாரா?

மு க ஸ்டாலினின் மகள் செந்தாமரை நடத்தும்
சன்ஷைன் பள்ளியில் மும்மொழித் திட்டம்
செயல்படுகிறதா அல்லது இருமொழித் திட்டமா?
திராவிடக் கழிசடைகள்  தனியார் மெட்ரிக் பள்ளிகளின்
அதிபர்களிடம் இருந்து காசு வாங்கிக் கொண்டு
அங்கெல்லாம் மும்மொழித் திட்டத்தை அனுமதிப்பார்கள்.

தமிழ்நாட்டில் இருமொழித் திட்டம்தான் உள்ளது
என்று மக்களை ஏமாற்றுவார்கள். முட்டாள்கள்
மட்டுமே இதில் ஏமாறுவார்கள்.
***********************************************
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக