செவ்வாய், 29 செப்டம்பர், 2015

வின் டி.வி.யில் அறிவியல் விவாதம்!
------------------------------------------------------------------
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு!
----------------------------------------------------------------------------
29.09.2015 செவ்வாய்க்கிழமை இரவு 7 to 8மணி
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்கிறது.
************************************************
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
பித்தலாட்ட ஏர்டெல்லின் குறுக்குவெட்டுத் தோற்றம்!
---------------------------------------------------------------------------------------
அலைக்கற்றை பற்றிய அறிவியல் கட்டுரை (பகுதி-5)
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------------------ 
ஏர்டெல் நிறுவனத்தின் 4G பித்தலாட்டம் குறித்த எமது 
கட்டுரை வாசகர்களின் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுவரை 1430 பேர் அக்கட்டுரையைப் பகிர்ந்துள்ளனர்.
இது எதைக் காட்டுகிறது?  ஏர்டெல் மீதான வாடிக்கை
யாளர்களின் கடும் அதிருப்தியைக் காட்டுகிறது.

கிராமத்தில் ஒன்று சொல்வார்கள், "மடுவைக் கறந்து பால் 
சாப்பிடலாம், மடுவை அறுத்துப் பால் சாப்பிடலாமா?" என்று. 
அதைப்போல், ஏர்டெல் மடுவை அறுத்துப் பால் சாப்பிடும்
 நிறுவனம். 800 ரூபாய் பிளான் என்று நம்ப வைத்து, 
ஏர்டெல் பிராட்பேன்ட்டில் நம்மைச் சேர்ப்பார்கள். 
பில் வரும்போது 1500 ரூபாய்க்கு வரும்.

மறைமுகக் கட்டணங்களுக்குப் பெயர் பெற்றது ஏர்டெல்.
இவர்களின் Billing முறையில் வெளிப்படைத் தன்மை மிகவும் 
குறைவு. இவர்களின் billஐ விளக்க ஒரு பரிமேலழகரோ 
கோனாரோ தேவைப்படுவார்கள்.

கிராமத்தை எட்டியும் பார்க்காத ஏர்டெல்!
------------------------------------------------------------------ 
நகர்ப்புறங்களில் மட்டும் இவர்கள் பிராட்பேண்ட் சேவை 
அளிப்பார்கள்; கிராமப்புறங்களை எட்டியும் பார்க்க மாட்டார்கள்.
ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். நெல்லை மாவட்டம்,
அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள வீரவநல்லூர் 
20000 மக்கள்தொகையைக் கொண்டது. இது ஒன்றும் 
பட்டிக்காடோ அல்லது கிராமமோ அல்ல; சிறு நகரம்.
இங்குள்ளது தேர்வுநிலைப் பேரூராட்சி ஆகும். இந்த ஊரில்
BSNL மட்டுமே பிராட்பேண்ட் சேவையை அளிக்கிறது. 
இதுபோன்ற சிறு நகரங்களை ஏர்டெல் எட்டியும் 
பார்ப்பதில்லை. BSNL இல்லாவிட்டால் வீரவநல்லூரில் 
ஒரு பிரவ்சிங் சென்ட்டர்கூட இருக்காது. 

பிராட்பேன்ட்டைப் பொறுத்த மட்டில், கிராமப்புறச் சேவையை 
குறைந்த அளவிலேனும் வழங்க வேண்டும் என்பது  எல்லா நிறுவனங்களுக்கும் அரசு விதிக்கும் நிபந்தனை. இந்த 
நிபந்தனையை ஏர்டெல் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் 
நிறைவு செய்வதில்லை;அரசும் இதைக் கண்டுகொள்வதில்லை.

BSNL இல் நஷ்டம்! ஏர்டெல்லில் லாபம்!
------------------------------------------------------------------
சேவையே எங்கள் குறிக்கோள் (Service is our motto) என்று 
இயங்கும் BSNL நஷ்டம் அடைவதும், லாபமே எங்கள் 
குறிக்கோள் (profit is our motto) என்று இயங்கும் ஏர்டெல் போன்ற 
தனியார் நிறுவனங்கள் கொழுப்பதும் இந்த சமூக 
அமைப்பின் சாபக்கேடு.   

BSNL சிறுகக் கட்டிச் சிறுக வாழும் நிறுவனம். பெருக வாழத்
தெரியாத, இயலாத நிறுவனம். சுரண்டத் தெரியாத நிறுவனம்.
பிராட்பேன்ட் (wired) சேவையில், இன்றும் சந்தையில் 
60 சதத்துக்கு மேல் வாடிக்கையாளர்களைக் கொண்ட 
நிறுவனம். மிகச் சிறந்த பிராட்பேண்ட் சேவை வழங்குநர்
என்ற விருதை (CNBC AWAAZ Awards) பெற்ற நிறுவனம்.
கொள்ளை அடிக்காத நிறுவனம். என்றாலும், ஏர்டெல் 
மீது கடும் அதிருப்தியில் இருக்கும் வாடிக்கையாளர்கள்  
எவரும் BSNLஐத் திரும்பியும் பார்ப்பதில்லை.

BSNLஇல் இல்லாதது ஏர்டெல்லில் இருக்கிறதா?
----------------------------------------------------------------------------- 
என்ன காரணம்? வாடிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.
பிராட்பேண்ட் சேவை வேண்டும் என்று BSNLஇல்  பதிவு 
செய்யவே பயம். ஏனென்றால், பதிவு செய்தால் எப்போது 
சேவை கிடைக்கும் என்று தெரியாது. ஒரு வாரம் ஆகலாம்; 
கூடவும் ஆகலாம். ஆனால், ஏர்டெல்லில் காலையில் 
பதிவு செய்தால் மாலைக்குள் கனெக்ஷன் கொடுத்து விடுவார்கள்.

அடுத்து, பழுது நேர்ந்தால், ஏர்டெல்லில் சொன்னவுடனே 
வந்து விடுவார்கள்; பழுது பார்ப்பார்கள். BSNL என்றாலோ,
பழுது  நேர்ந்தால் நம் கதை முடிந்தது. பழுதைச் சரிசெய்ய 
பல நாட்கள் ஆகும். இதுதான் வாடிக்கையாளர்களின் 
மனதில் BSNL பற்றிப் பதிந்திருக்கும் சித்திரம்.

1) தனியாரை விடஅதிகமான  தொழில்நுட்பத் தரம் 
2) குறைந்த கட்டணம் 3) வெளிப்படையான  billing
என்று சாதகமான அம்சங்கள் பல இருந்தும்,  BSNL 
ஏர்டெல்லிடம் தோற்கக் காரணமே மேற்கூறியவைதான்.    

ACT Fibernet நிறுவனத்திடம் எச்சரிக்கை தேவை!
------------------------------------------------------------------------------
சென்னையில் புதிதாகக் கடை விரிக்க வந்திருக்கும் ACT 
Fibernet செயல்படத் தொடங்கும்போது ஏர்டெல்லின் கொட்டம்
அடங்கும் என்று வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள்.
ACT Fibernetக்கு கட்சிமாறத் தயாராக இருக்கிறார்களே தவிர  
தாய்க்கழகத்துக்குத் திரும்ப, BSNLக்கு வரத் தயாராக இல்லை. 

யார் இந்த ACT Fibernet? இது ஒரு ஆந்திர நிறுவனம்.
ஹைதராபாத்திலும் பெங்களூருவிலும் பிராட்பேண்ட் 
(wired) சேவை வழங்கி வரும் நிறுவனம். இது ஒரு non-telco
நிறுவனம். அதாவது மொபைல் சேவை எதுவும் வழங்காத 
நிறுவனம். நகரங்கள், அதுவும் தலைநகரங்கள் மட்டுமே 
இவர்களின் குறி. சதைப்பற்று மிகுந்த நகர்ப்புற வாடிக்கை 
யாளர்களை இவர்கள் கவர்ந்து சென்று விடுவார்கள்.
அப்புறம் BSNLஇன் கதி? கிராமங்களோடு முடங்க 
வேண்டியதுதான்!   

ஏர்டெல்லின் 4G பித்தலாட்டத்தை நாங்கள் அம்பலப் 
படுத்தி விட்டதில் சிலருக்கு எங்கள் மீது வருத்தம்.
அதை நேரடியாகச் சொல்லாமல், நாம் ஆதரிக்கும் BSNL 
மீது குற்றப்பட்டியலை வாசிக்கிறார்கள் அந்த சிலர்.
BSNL மீது ஆயிரம் குறைகளைக் கூறுங்கள். அவை 
உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் ஒன்றை 
உறுதியாகக் கூற முடியும் எங்களால்: BSNL ஒருநாளும் 
உங்களை பிக்பாக்கட் அடிக்காது.அடித்ததும் கிடையாது.  

நீங்களே சோதனை செய்து உண்மையை உணருங்கள்!
--------------------------------------------------------------------------------------
ஏர்டெல்லின் 4G பித்தலாட்டத்தை வாசகர்கள் தாங்களே 
நேரடியாகச் சோதித்துப் பார்த்து அறியலாம். சர்வதேச 
தொலைதொடர்புச் சங்கத்தின் (ITU-Radio sector) இலக்கணப்படி 
4G என்றால் 100 Mbps வேகம் இருக்க வேண்டும். LTE என்றால் 
குறைந்தது 30 Mbps வேகம் இருக்க வேண்டும். ஏர்டெல்லின் 
பித்தலாட்ட 4G (LTE) எவ்வளவு வேகம் தருகிறது என்று நீங்களே 
சோதித்துப் பாருங்கள். இந்த சோதனை மிக மிக எளிது. இந்த 
இணையதள முகவரியைக் கீழே தந்துள்ளோம்.
http://www.speedtest.net/

வாஷிங்டன்னில் உள்ள speedtest.net என்ற இணையதளம் 
இந்த வேகச்சோதனையை நடத்துகிறது. 2006 தொடங்கி 
இன்று வரை 700 கோடி speed testகளை நடத்தி உள்ளது 
இந்த நிறுவனம்.( wire,wireless, mobile, fixed). நீங்களே இந்த 
டெஸ்ட் செய்து பார்த்தவுடன் ஒரு முடிவுக்கு வருவீர்கள்;
அது இதுதான்: Airtel 4G is neither 4G nor LTE.      
-----------------------------------------------------------------------------------------------
தொடரும் 
********************************************************************           
  
   
    



       

   

திங்கள், 28 செப்டம்பர், 2015

ஈண்டு வக்காணம் அல்லது ஆளத்தி என்பது ஆலாபனை என்று 
பொருள்படும். இன்றும் மலையாளத்தில் "யேசுதாஸ் இப்போது 
பாடுவார்" என்பதனை யேசுதாஸ் ஆலாபிக்குன்னு என்று 
கூறுவதை அன்பர்கள் அறிந்திருக்கக் கூடும்.
**
பாடும்போது, குரலை உயர்த்தியும், குரலை இறக்கியும்,
உயர்த்திய குரலைப் படிப்படியாக இறக்கித் தாழ்நிலைக்குக் 
கொண்டு வருதலும் பாடுவோர் புரியும் வினைகள். இவை 
எடுத்தல், படுத்தல், நலிதல் என்று தமிழிசையில் அழைக்கப்படும்.
இவ்வாறு எடுத்தும் படுத்தும் நலித்தும் பாடுதல் பாடுவோர் 
இயல்பாக மேற்கொள்ளும் செயல்களே.        
முத்தமிழாய் வழங்கப்பட்ட தமிழில் இசையும் நாடகமும்
தமிழில் இருந்து விலகி நிற்கின்றன. எனினும், இன்றும்
முத்தமிழையும் ஏற்றியும் போற்றியும் வருபவர் முத்தமிழறிஞர்
கலைஞர் அவர்களே. முத்தமிழறிஞர் என்ற அடைமொழி அவருக்கு
ஆயிரம் விழுக்காடு பொருந்தி நிற்கிறது.
**
கலைஞரின் போர்வாளும் பூவிதழும் என்ற நாட்டிய நாடகம்
பார்த்தீர்களா? சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்த நிகழ்வுக்கு நேரில்
சென்று முத்தமிழையும் பருகியவன் யான். அது YouTubeஇல்
கிடைக்கக் கூடும். தேடிப்பார்க்கலாம்.
**
இசைத்தமிழ் குறித்து ஆழ்ந்த அறிவு படைத்தவர்கள் இன்றைய
தமிழகத்தில் இருவரே. கலைஞரும் மம்மது அவர்களுமே.
**
சிலம்பு குறித்து எழும் ஐயங்களுக்கு கலைஞரிடமே,
அவரது முகநூல் பக்கத்தில் சென்று விளக்கம் கேட்கலாம்
என்று கருதுகிறேன்.    
பாலைப்பண்  குறித்து.....
----------------------------------------
தமிழ் என்றுமே ஒற்றைத் தமிழாக இருந்ததில்லை.
இயல் இசை நாடகம் ஆகிய இம்மூன்றும் கொண்டு 
முத்தமிழாகவே வளர்ந்தது. சிலப்பதிகாரம் இசைத்தமிழுக்கு 
இளங்கோவடிகள் அளித்த பெருங்கொடை. சிலம்பின் இசையைப் 
புரிந்துகொள்ள, அடியார்க்கு நல்லார் உரையைப்  (அல்லது அரும்பத 
உரைகாரரின் உரை) படித்தல் வேண்டும். புலியூர்க் கேசிகன் உரை 
ஓர் எளிய அறிமுகத்தை மட்டுமே தர வல்லது.
**
பண் எனில் இசை என்று பொருள்படும். தற்காலத்தில் ராகம் 
என்று கூறப்படுவதே பண் ஆகும். சுரங்கள் பொருத்தமுறத்
தொகுக்கப் பட்டமையே பண்  ஆகும். (ஏழ் சுரங்கள் அனைவரும் அறிந்தவையே)
**  
இஃது நால்வகைப்படும். மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை 
ஆகிய நான்கும் பெரும்பண்கள் ஆகும். இவற்றில் இருந்தே 
பிற பண்கள் உருவாகின்றன. (தற்போதைய மேளகர்த்தா 
ராகங்களை ஒப்பு நோக்குக)
**
நால்வகைப் பெரும்பண்களிலும் பாலைப்பண்ணே, பாடுவோர் 
விரும்பும் வண்ணம் விரித்துப் பாட உகந்தது. எனவேதான் இங்கு 
மாதவியின்  பாலைப்பண் சிறப்பிக்கப் படுகிறது.
**
தமிழிசை குறித்து விரிவாக ஆராய்ந்த தமிழறிஞர் 
திரு மம்மது அவர்களே. நெல்லை ம.தி.தா இந்துக் 
கல்லூரியில் எழுபதுகளில் படித்தவர். எனக்கு மூத்தவர்.
முழுமையான விவரங்களுக்கு திரு மம்மது அவர்களே 
தகுதியானவர்.         

ACT reveals new brand identity, claims largest non-telecom ISP in India with 5 lakh subscribers

share this on
By Tarachand Wanvari Posted on : 26 Jul 2014 03:21 pm
BENGALURU: ACT (Atria Convergent Technologies) Broadband claims that it is now the largest non-telecom ISP and the fourth largest ISP in the wired broadband category in India with its subscriber base of five lakh that it crossed last month.  Only public sector telecom companies BSNL and MTNL and the private sector communications giant Airtel are ahead of ACT, the company claims.
 
ACT is a triple play service provider which claims a subscriber base of 10 lakh of Fibernet (Internet over fiber optics), digital TV and IPTV consumers. The company is headquartered in Bengaluru and its services are spread over towns and cities of Karnataka, Andhra Pradesh and Tamil Nadu.
 
The company also announced a strategic move in the industry – the launch of its new broadband brand ACT Fibernet.  ACT says that its new brand underscores its continued commitment to offer fastest, most consistent and unparalleled internet experience through the scalable technology of fiber optics. The company announced the fastest speed currently provided by any service provider to the retail segment of 60 mbps.
 
What is remarkable about ACT’s achievement is that, while the top three players and most of the other ISPs in the country have a pan-India presence, ACT has  achieved its milestones in Karnataka and Andhra Pradesh, with Chennai coming under its footprint only last year.
 
“Over the next two years, we are confident of doubling the broadband subscriber base to 10 lakh,” said ACT managing director Sunder Raju.
 
“We have been setting benchmarks in the industry since we began six years ago – when the industry in India considered 256 kpbs as broadband, our benchmark was 512 mbps, our new bench mark is going to be 5 mbps to the industry’s 1 mbps,” says ACT Group CEO Bala Malladi. “Right from the beginning, we have been laying fiber optic wires up to the last mile and hence scaling up to 1 gbps with small changes to the existing infrastructure should not be a problem for us in the future,” added Malladi.
 
“There is ample scope for us to double our subscriber base within our current catchment area, but we will definitely look at bringing other towns and cities under our footprint,” said Malladi.
 
The company has announced a high decibel marketing campaign with the tagline ‘Incredibly fast’ across print, outdoor, digital, newspaper inserts, handbills, bus shelters, metro pillars, kites, parking boards etc., over the next three months within their catchment areas. Minimum spend is on Television advertising. Company sources revealed that the campaign costs would be in the range of Rs 10 crore. RK Swamy BBDO is the creative agency and RK Swamy Hansa group handles the media buying duties and Madison PR handles public relations.
 
The company has received funding from India Value Fund Advisers (IVFA) which would be used for doubling the subscriber base, an industry source reveals to www.indiantelevision.com that ACT had invested around Rs 600 crore in the current phase, of which IVFA funding was between Rs 350 crore to Rs 400 crore.  Last year, the company had raised privately placed non-convertible debenture (NCD) funding of Rs 180 crore.
 
“ACT would need funding to the extent of around Rs 500 crore for further expansion. This should not be a problem, considering the fact that ACT has crossed Rs 500 crore in revenue a couple of years ago and has seen operating profits in recent years as compared to many other companies that have been bleeding. The company should be reporting profits in the next two or three years,” says an industry source who works for an MSO and who did not want to be named.
 
Keeping its current consumers in mind, the brand has upgraded its entire subscriber base in Bengaluru to new fast plans at no extra cost starting 24 July. An ACT broadband consumer confirmed that his fair usage policy has been upgraded to 50 GB from the 40 GB that he enjoyed earlier.
மொபைல் பயன்படுத்தும் அனைவரும் 
நன்றி செலுத்த வேண்டியது யாருக்கு?
வயர்லெஸ்சின் தந்தையான ஜே.சி.போசுக்கே!   
---------------------------------------------------------------------------------------
அலைக்கற்றை குறித்த அறிவியல் கட்டுரை (பகுதி-4)
-----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------------------------  
இன்ஸ்பெக்டர்: சார், குற்றவாளி Xஐக் கைது செய்து 
விட்டேன்; ஓவர்.
கமிஷனர்: அப்படியா, எங்கே, எப்போது; ஓவர்.
இன்ஸ்பெக்டர்: சற்று முன்பு; பம்பாய் VTயில்; ஓவர்.
கமிஷனர்: உடனே அவனை K-12க்குக் கொண்டு வாங்க; ஓவர்.
  
நிஜ வாழ்க்கையிலோ அல்லது திரைப்படத்திலோ 
இதுபோன்ற உரையாடலைப் பலரும் கேட்டிருக்கக் கூடும். 
இது என்ன ஓவர்? ராமபக்தர்கள் ஸ்ரீராமஜெயம் எழுதுவது 
போல, வயர்லெஸ் பக்தர்கள் ஓவர் என்று அடிக்கொருதரம் 
சொல்ல வேண்டுமா? இது என்ன நேர்த்திக் கடனா?

ஆரம்பகால  வயர்லஸ் உரையாடல் இது. (இது இன்னமும் 

உலகின் பல்வேறு இடங்களில் பயன்பாட்டில் இருக்கிறது)
இந்த வயர்லஸ் ஒருவழிச் சேவை (one way working) ஆகும்.
அதாவது, ஒரே நேரத்தில் இருவரும் பேச முடியாது.
அப்படிப் பேசினால், குரல் கேட்காது; இரைச்சல்தான் 
கேட்கும் (noise instead of voice). எனவே உரையாடலில் 
தனது ஸ்பெல் முடிந்து விட்டது என்பதை  உணர்த்தும் 
பொருட்டு, ஒவ்வொரு ஸ்பெல் முடிவின்போதும்  ஓவர் 
என்று சொல்லியாக வேண்டும்.

மொபைல் சேவை ஒரு வயர்லெஸ் சேவை. என்றாலும் 

அதற்கு முன்பே வேறு வடிவில் வயர்லெஸ் சேவை 
உலகெங்கும் இருந்தது. முதன் முதலில் வயர்லெஸ் 
செய்திப் பரிமாற்றத்தைச் சாத்தியம் ஆக்கியவர் இந்திய 
விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ்தான். ஆனால் அதற்குரிய 
காப்புரிமைக்கு அவர் உரிமை கோராமல் இருந்ததால், 
இத்தாலிய விஞ்ஞானி மார்க்கோனி அந்தப் பெருமையைத் 
தட்டிச் சென்றார். நோபல் பரிசும் பெற்றார்.

முதன்முதலில் இருந்த வயர்லஸ் சேவை கார்கள், 

காவல்துறை மற்றும் ராணுவ வாகனங்களில் இருந்தது.
டிரான்ஸ்மீட்டர், ரிசீவர் இரண்டும் வாகனத்தின் தலையில் 
பொருத்தப் பட்டு இருக்கும். செல் தொழில்நுட்பத்துக்கு 
முந்திய வயர்லஸ் சேவை இது. இது பூஜ்யம் தலைமுறை 
(Zero Generation) அதாவது 0G எனப்படுகிறது.

மொபைல் வயர்லெஸ்சின் முதல் தலைமுறை, 

செல் தொழில்நுட்பத்தைக் கொண்டது (Cellular technology).
சேவை வழங்கப்படும் ஏரியாக்கள் சிறு சிறு 
சிற்றறைகளாகப் பிரிக்கப் படுவதால் செல் என்ற பெயர் 
வந்தது. இந்த 1G,  அனலாக் (analog) முறையில் ஆனது.
அதாவது, இம்முறையில் பேசப்படும் சொற்கள் 
எவ்வித ரகசியக் குறியீடுகளாகவும் மாற்றப் படாது.
(No encoding and  hence no decoding).

2G முதற்கொண்டு தொடர்ந்த எல்லாத் தலைமுறைகளும் 

டிஜிட்டல் முறையிலானவை. இம்முறையில், பேசப்படும் 
சொற்கள் பைனரி குறியீடுகளாக (Binary code) மாற்றப்படும்.
உதாரணமாக, "12" என்பது அனலாக் முறையில் 12 என்றே 
டிரான்ஸ்மிட் செய்யப்படும். டிஜிட்டலில் 12 என்பது
பைனரியாக மாற்றப்பட்டு 1100 என்று டிரான்ஸ்மிட் 
செய்யப்படும். தற்காலத்தில், கீழ் வகுப்புகளிலேயே 
பைனரி கற்றுக் கொடுக்கப் படுவதால், இன்றைய 
தலைமுறை இது குறித்து நன்கு அறிந்திருப்பர்.

வணிக ரீதியிலான 1G சேவை முதன் முதலில் 1981இல் 

சவூதி அரேபியாவில் தொடங்கியது. 1980இன் பத்தாண்டுகள் 
முழுவதும் 1G செயல்பட்ட காலம். தரநிர்ணயப்படி, 1G 
என்பது NMT -450 (Nordic Mobile Telephony) என்று அழைக்கப் 
பட்டது. (நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து, ஐஸ்லாந்து,
டென்மார்க் ஆகியவையே நார்டிக் நாடுகள். இங்குதான் 
1G உருவாக்கப் பட்டது. எனவேதான் NMT என்ற பெயர்).
1G அளித்த வேகம் (speed provision) 2.4 kbps மட்டுமே.

1990இன் பத்தாண்டுகள் 2Gயின் காலம். 1990-91இல் 2G

சேவை தொடங்கியது. இது அளித்த வேகம் 64 kbps வரை.  
2Gயின் பிரபல தொழில்நுட்பங்கள் GSM, CDMA, IS-95
ஆகியவை ஆகும். இவற்றில் CDMA மற்றும் IS-95 ஆகிய 
இரண்டும் CDMA தொழில்நுட்பங்கள். இவ்விரண்டும் 
அமெரிக்காவில் பிரபலமாக இருந்தன. அமெரிக்கா
தவிர்த்த உலகின் பிற நாடுகளில் GSM தொழில்நுட்பமே 
செல்வாக்குப் பெற்றது.

GSM என்பது Global System of Mobile communication ஆகும்.
CDMA என்பது Code Division Multiple Access ஆகும்.

GSMஇல் ரேடியோ அதிர்வெண் அலைக்கற்றையானது
(Radio Frequency Spectrum) பல்வேறு சானல்களாகப்
பிரிக்கப் பட்டு, FD அல்லது TD (frequency division or time division)
முறையில் பயன்படுத்தப்படும்.

CDMAயில் இவ்வாறு பிரிக்கத் தேவையில்லாமல், மொத்த 
அலைக்கற்றையுமே பயன்படுத்தப் படும். இது spread spectrum 
டெக்னாலஜி ஆகும். CDMA சேவைக்கென்றே 
பிரத்தியேகமான மொபைல் ஃபோன்கள் உண்டு. இத்தகைய 
CDMA ஃபோன்கள் GSM சேவையில் பயன்படாது.
(CDMA handsets do not have interchangeability)
-------------------------------------------------------------------------------------------------------
படங்கள்: இடமிருந்து வலம்; 
ஜகதீஷ் சந்திர போஸ் (இந்தியா) (1858-1937)
மார்க்கோனி (இத்தாலி) (1874-1937)
--------------------------------------------------------------------------------------------------
தொடரும் 
*************************************************************************         

     



  
   
  
        
          


      

சனி, 26 செப்டம்பர், 2015

1000 ரூபாய் ஹெர்குலிஸ் சைக்கிளில் தொடங்கி  
ஒரு கோடி ரூபாய் பி.எம்.டபிள்யு கார் வரை! 
1G முதல் 5G வரை ஓர் அறிவியல் பயணம்!
அலைக்கற்றை குறித்த அறிவியல் கட்டுரை (பகுதி-3)
-----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------------------------  
2G ,3G போன்ற தலைமுறை மாற்றங்கள் எல்லாம் 
வயர்லெஸ் எனப்படும் கம்பியில்லா மொபைல் 
சேவைக்கு மட்டுமே பொருந்தும். நிலைத்த 
தொலைபேசியான  நிலவழித் தொலைபேசியில் 
(Landline Telephone) இத்தகைய தலைமுறை 
மாற்றம் எதுவும் கிடையாது.

உலகம் முழுவதும் 4G பெருவாரியான நாடுகளில் 
பயன்பாட்டில் உள்ளது. கடந்த மாதம் (ஆகஸ்ட் 2015) 
இந்தியாவில் நாடு தழுவிய அளவில் 4G சேவையை 
(4G LTE எனப்படும் 4G யை விடக் குறைந்த சேவை)
ஏர்டெல் நிறுவனம் அறிமுகப் படுத்தியதால், இந்தியாவும் 
4G பயன்பாட்டுக்கு நெருக்கமாக வந்து விட்டது.

ஐந்தாம் தலைமுறை வந்து விட்டதா? உலகில் 
எங்கெல்லாம் 5G இருக்கிறது என்கிற கேள்விகள் 
எழுவது இயற்கையே.
உலகில் எங்கும் 5G இல்லை என்பதே இதற்கு விடை.

2010-2011 காலக்கட்டத்தில் 4G வளர்த்தெடுக்கப் பட்ட 
உடனேயே, 5Gயை உருவாக்கும் பணிகள் தொடங்கி 
விட்டன. ஐரோப்பியத் தொலைதொடர்பு தரநிர்ணயக் 
கழகம் (European Telecomn Standards Institute) என்ற அமைப்பு 
5Gயை வளர்த்தெடுத்து அதற்கான தரநிர்ணயத்தை 
உருவாக்கும் பணியில் தீவிரமாக உள்ளது. பல்வேறு 
மொபைல் ஃபோன் உற்பத்தி நிறுவனங்களும் மொபைல்  
சேவை நிறுவனங்களும் இப்பணியில் துணை புரிந்து 
வருகின்றன.

2019இல் 5Gக்கான தரநிர்ணயம் இறுதியாகும் என்றும்,
அவ்வாறு இறுதியானால் 2020-2021  ஆண்டுகளில் 
5G சேவை தொடங்கும் ( Commercial Rollout of 5G service)
என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. எப்படிப் பார்த்தாலும் 
உலகில் 5G வருவதற்கு இன்னும் 6,7 ஆண்டுகள் ஆகும்.

அப்படியானால் இந்தியாவில் 5G வருவதற்கு இன்னும் 
எத்தனை ஆண்டுகள் ஆகும்? கால தாமதம் ஆகுமோ 
என்றெல்லாம் நாம் கவலைப்பட வேண்டாம். ஏர்டெல் 
இருக்கும்போது கவலைப் படலாமா? இருக்கிற ஒண்ணே 
முக்கால் ஜி, ரெண்டேமுக்கால் ஜி ஆகியவற்றை 
வைத்துக் கொண்டு 5G, 6G என்று சேவை வழங்கத்தான் 
ஏர்டெல் தயாராக இருக்கிறதே! பின் ஏன் கவலை? 

5G என்பது பிக்காசோவின் நவீன ஓவியம்!
--------------------------------------------------------------------
ஆண்டுதோறும் பார்சிலோனா நகரில் உலக மொபைல் 
காங்கிரஸ் (World Mobile Congress) நடைபெறும். வயர்லெஸ் 
தொழிலில் உள்ள அனைவரும் இங்கு கூடி, தங்களின் 
கருவிகள் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பகிர்ந்து 
கொள்வர். கடந்த மார்ச் 2015இல் நடைபெற்ற காங்கிரசில் 
பேசிய ஒரு தொழில் (நுட்ப) அதிபர், 5Gயை பிக்காசோவின் 
நவீன ஓவியத்துக்கு ஒப்பிட்டார்.

(ரவிவர்மா மரபான ஓவியர்; பிக்காசோ நவீன ஓவியர்.
மரபான ஓவியம் என்பது பார்த்ததை அப்படியே வரைவது.
நவீன ஓவியம் என்பது பார்த்ததை வரையாமல் 
உணர்ந்ததை வரைவது. இது நவீன ஓவியத்திற்கான ஒரு 
இலக்கணம் என்பதை ஓவிய ஆர்வலர்கள் அறிந்திருக்கக் 
கூடும்).

5G யின் ராட்சச வேகம்!
----------------------------------------
5G வரும்போது, அதன் வேகம் அசுரத்தனமாக இருக்கும்.
10 Gbps வரையிலான வேகம் கிடைக்கும். இதுவரையிலான
2G, 3G, 4G சேவைகளில் நாம் உணர்ந்த வேகம் Kbps மற்றும் 
Mbps தான். 5Gஇல்தான் Gbps வேகத்தை உணரப் போகிறோம்.

தொழில்நுட்ப விவரங்களைத் தவிர்த்து விட்டு,
சராசரி நுகர்வோர் 5Gயை எப்படிப் புரிந்து கொள்வது?   
ஒரு முழுநீள ஹாலிவுட் சினிமாவை பதிவிறக்கம் 
செய்து முடிப்பதற்கு, 3Gயில் பல மணி நேரம் ஆகும்.
4Gயில் பல நிமிடங்கள் ஆகும். 5Gயில் சில நொடிகள் 
ஆகும்.

இன்னும் எளிமையாகச் சொல்வதானால், 
2G என்பது சைக்கிள்.
3G என்பது ஸ்கூட்டர்.
4G என்பது  மாருதி ஏ.சி கார்.
5G  என்பது பி.எம்.டபிள்யு கார். 
1000 ரூபாய் சைக்கிளில் தொடங்கிய அறிவியலின் 
பயணம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள BMW காரில்
தொடர இருக்கிறது.
-------------------------------------------------------------------------------------
தொடரும் 
***************************************************************        

    


              

        

   

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

சவாலுக்கு அழைத்த ஏர்டெல் 4G சந்தி சிரித்த கதை!
-----------------------------------------------------------------------------------
(2) இந்தியாவில் 3G படுதோல்வி!
4G என்பது மெய்யான 4G அல்ல!
அலைக்கற்றை குறித்த அறிவியல் கட்டுரை!(பகுதி-2)
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------
மொபைல் நாயகன் ஏர்டெல் கடந்த மாதம் (ஆகஸ்ட் 2015)
இந்தியாவின் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு
சவால் விடுத்தது. ஏர்டெல் 4Gயை விட அதிகமான வேகம்
உள்ள எந்த நெட்வொர்க்காவது உண்டா என்று கேட்டது.
அப்படி இருப்பதாக நிரூபித்தால், நிரூபித்தவரின் வாழ்நாள்
முழுமைக்குமான  மொபைல் செலவுகளை ஏற்கத் தயார்
என்றது. ஏர்டெல் சவால் ( AirTel challenge) என்ற புகழ்பெற்ற
இந்த விளம்பரத்தை, தொழில்நுட்ப விஷயங்களில்  அக்கறை
உள்ள வாசகர்கள் அறிந்திருக்கக் கூடும்.

 இந்தியாவில் 4G சேவையை நாங்கள்தான் முதன்முதலில்
கொண்டு வந்தோம் என்று மார் தட்டுகிறது ஏர்டெல். ஏப்ரல் 
2012இல் கொல்கத்தாவில் ஏர்டெல்லின் 4G சேவையை அன்றைய
தொலைதொடர்பு அமைச்சர் கபில் சிபல் தொடக்கி வைத்தார்.
கொல்கத்தாவில் மட்டுமே இந்த சேவை கிடைத்தது. 
(Kolkatta is the launch pad of AirTel 4G)  தொடர்ந்தும் அடுத்தடுத்தும் 
51 நகரங்களுக்கு இந்த சேவை விரிவடைந்தது.
(beta launch in 51 towns)

4G உலகில் நுழைந்தது இந்தியா!
----------------------------------------------------
தற்போது, 2015 ஆகஸ்ட் 6 முதல் நாடு முழுவதும் 4G சேவையை
ஏர்டெல் வழங்குகிறது. பன்னிரண்டு தொலைதொடர்பு 
வட்டங்களில் உள்ள 296 நகரங்களில் 4G சேவையை  ஏர்டெல்
வழங்குகிறது. அதாவது நடப்பாண்டில் (2015ஆம் ஆண்டில்) 
மொத்த இந்தியாவும் 4G சேவையைப் பெறுகிறது.

இந்தக் கட்டுரை எழுதப்படும் இந்த நிமிடம் வரை, ஏர்டெல்லைத்  
தவிர வேறு எந்த நிறுவனமும் 4G சேவையை வழங்கவில்லை.
2015 டிசம்பரில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ 
மற்றும் ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் 4G சேவையை வழங்கப் 
போவதாக அறிவித்து உள்ளன. BSNL நிறுவனம் எங்கோ 
கிடக்கிறது.  


மெய்யான 4Gஅல்ல!  LTE தொழில்நுட்பம்தான்!
--------------------------------------------------------------------------
ஏர்டெல் வழங்கும் 4G சேவை மெய்யான 4G தொழில்நுட்பம் 
கொண்டதல்ல. இது LTE (LONG TERM EVOLUTION) எனப்படும் 
தொழில்நுட்பம் ஆகும். 4G சேவை என்றால், 4G அலைக்கற்றை 
(4G Spectrum) வேண்டும் அல்லவா? ஆனால், இந்திய அரசு 
இதுவரை 4G அலைக்கற்றையை ஏலம் விடவோ ஒதுக்கீடு 
செய்யவோ முன்வரவில்லை என்னும்போது, 4G சேவை 
என்று உரிமை கோருவது சரிதானா? .

LTE தொழில்நுட்பம் என்பது இருக்கின்ற 3G அல்லது WiMAX 
அலைக்கற்றையை வைத்துக் கொண்டு அதில் தேவையான 
மேம்பாடுகளைச் செய்வதன் மூலம் 3Gயை விட அதிகமான 
வேகத்தைத் தருவது என்பதுதான். கொல்கத்தாவில் 4G சேவை 
வழங்கியதாக உரிமை கோரிய ஏர்டெல் நிறுவனம், சீனாவின் 
மொபைல் உற்பத்தி நிறுவனமான ZTE நிறுவனத்துடன் சேர்ந்து 
TD-LTE தொழில் நுட்பத்தில் சேவையை வழங்கியது. (TD என்றால் 
Time Division என்று பொருள். Time Division, Code Division, Frequency Division 
ஆகியவை தொலைதொடர்பின் தொழில்நுட்பங்கள் ஆகும்).

ஏர்டெல் வழங்கும் 4G சேவை மற்றும் பிற நிறுவனங்கள் 
வழங்க இருக்கும் 4G சேவை உட்பட, இவை யாவும் LTE 
தொழில்நுட்பச் சேவையே அன்றி மெய்யான 4G சேவை அல்ல.
LTE என்பது 3Gயை விட மேலான ஆனால் 4Gயை விடக்குறைந்த 
சேவை ஆகும். அதாவது 3Gக்கும் 4Gக்கும் இடைப்பட்ட சேவை 
ஆகும். (It is a rational number between 3 and 4 but well beyond 3.5)        

மெய்யான 4G எது? இதை அறிவிக்கும் அதிகாரம் யாருக்கு?
----------------------------------------------------------------------------------------------
ஐ.நா.வின் சார்பு அமைப்பான (agency) ITU (International 
Telecommunications Union) எனப்படும் சர்வதேச தொலைதொடர்புச் 
சங்கம் என்ற அமைப்புதான், உலகளவில் 2G, 3G, 4G ஆகிய 
தொழில்நுட்பங்களை வரையறுத்து, வகை பிரித்து,
அடையாளப்படுத்தி அறிவிக்கும் அதிகாரம் படைத்த ஒரே 
அமைப்பாகும். வேறு எவருக்கும் இந்த அதிகாரம் கிடையாது.
கபில் சிபல், சுனில் மிட்டல், வினோத் ராய் உள்ளிட்ட எவர் 
ஒருவருக்கும் இந்த அதிகாரம் கிடையாது. யார் இந்த 
வினோத் ராய்? ஞாபகம் வருகிறதா! பாழாய்ப்போன 
முன்னாள் CAG (தலைமைக் கணக்கு அதிகாரி)தான் இவர்!

பொய்யாய்ப்போன ஏர்டெல் விளம்பரம்!
--------------------------------------------------------------
எங்களை விட வேகமான நெட்வொர்க் இருப்பதாக நிரூபித்தால் 
உங்களின் ஆயுட்காலம் முழுமைக்குமான மொபைல் 
கட்டணத்தை நாங்களே செலுத்துவோம் என்ற ஏர்டெல் 
விளம்பரம் இந்தியாவுக்குப் பொருந்தாது. ஏனெனில், 
இந்தியாவில், இதில் ஏர்டெல்லுடன் போட்டி போட எவரும் 
இல்லை. மற்ற எந்த நிறுவனமும் இன்னும் LTE சேவை 
வழங்கவில்லை. எனவே களத்தில் இருப்பது ஏர்டெல் 
மட்டும்தான். போட்டியே இல்லாதபோது, சவால் விடுவது 
எப்படிப் பொருந்தும்?

சர்வதேச அளவில் ஏர்டெல் வழங்கும் LTE சேவையின் வேகம் 
என்ன என்று பார்ப்போம். ஒப்பன் சிக்னல் (Open Signal) என்ற 
நிறுவனம் உலக அளவில், 68 நாடுகளில் இயங்கும் 183 LTE 
நெட்வொர்க்குகளைப் பரிசோதித்து அவற்றின் வேகத்தைக் 
கண்டறிந்தது. 

நடப்பாண்டின் மூன்றாவது கால் பகுதிக்கான 
(Third quarter of 2015) பரிசோதனை முடிவுகளின்படி, ஏர்டெல் 
நிறுவனம் பதிவிறக்க வேகத்தைப் பொறுத்து (download speed)
147ஆம் இடத்தில் இருக்கிறது. மொத்தம் 183 நெட்வொர்க்களில்
ஏர்டெல் 147ஆவது இடம். முதலிடத்தில் நியூசிலாந்து 
36 Mbps வேகத்துடனும், இரண்டாம் இடத்தில் சிங்கப்பூர் 
33 Mbps வேகத்துடனும் உள்ளன. எனவே, எங்களை விட 
வேகம் யாருக்காவது உண்டா என்று ஏர்டெல் இந்தியாவில் 
மட்டும்தான் கேட்க முடியும். உலகத்தை நோக்கிக் கேட்டால் 
என்ன ஆகும்? அத்தனை பேரின் மொபைல் கட்டணத்தைச் 
செலுத்த முடியாமல் ஏர்டெல் திவால் ஆகும்!

தெருப் பொறுக்குவது பற்றிய தொலைக்காட்சி விவாதங்கள்!
-------------------------------------------------------------------------------------------------
ஆகஸ்ட் 6, 2015 அன்று இந்தியா 4G தொழில்நுட்பத்தில் 
நுழைந்து விட்டது. என்றாலும் 127 கோடி மக்களுக்கு 
இந்தச் செய்தி எட்டியதா? இல்லை. படித்த அறிவாளிப் 
பகுதியினருக்கே இந்தச் செய்தி இன்னும் போய்ச்சேரவில்லை.
ஆங்கில ஏடுகளில்கூட 4G தொழில்நுட்பம் குறித்த 
கட்டுரைகள் எழுதப்படவில்லை,வணிக நோக்கில் 
வெளியான கட்டுரைகளைத் தவிர. 
முகநூல் வாசகர்களுக்காக எழுதப்பட்ட இந்தக் 
கட்டுரைதான் 4G குறித்த முதல் தமிழ்க் கட்டுரை என்று
எங்களால் அடித்துக்கூற இயலும். இந்த நிலையில்தான் 
அறிவியல் உள்ளது.

தெருப்பொறுக்குவது எப்படி, அதில் உள்ள நுட்பங்கள் என்ன 
என்று மணிக்கணக்கில் விவாதம் நடத்தும் தமிழ் டி.வி 
சேனல்கள், முக்கியத்துவம் வாய்ந்த இந்த 4G குறித்து 
விவாதம் நடத்த முன்வருவார்களா? ஒருநாளும் 
மாட்டார்கள்! நாடு முன்னேறிவிடக் கூடாது என்று 
மூச்சிரைக்க இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கும் 
ஊடகங்கள் இதைச் செய்வார்களா, என்ன?
***************************************************************************    
பின்குறிப்பு:முதல் படம்: 2012 ஏப்ரல் 10, கொல்கத்தாவில்
ஏர்டெல் 4G தொடக்கவிழா.
2ஆம் படம்: ஆகஸ்ட் 6, 2015 தேசிய அளவில் ஏர்டெல்
4G LAUNCH  at குர்கான்.
****************************************************************************