புதன், 16 செப்டம்பர், 2015

திருமதி சுப்புலட்சுமி எந்தக் குலத்தை (எந்த சாதியை) சேர்ந்தவர் 
என்று தமிழ்நாடு அறிந்திருக்கவில்லை என்று ஜெயமோகன் 
கூறுவது உண்மை அல்ல. சுப்பு லட்சுமியை அறிந்தோர் அனைவரும் 
அவர் இசைவேளாளர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்தே 
இருந்தனர். காலத்தால் பிற்பட்டவர்கள், இந்திரா, ராஜிவ் 
கொலைக்குப்பின் பிறந்தவர்கள் மட்டுமே இதை அறியாதோர்.
அவர்கள் சுப்புலட்சுமி பற்றியே அறியாதவர்கள். 1970இல் என் 
தமிழாசிரியர் வகுப்பில் கூறியதால் இதை அன்றே நான் அறிய 
முடிந்தது.
**
கலைஞர் முதல்வராக இருந்தபோது, 1970களின் தொடக்கத்தில்,
நீராரும் கடலுடுத்த பாடலைப் பாடித்தருமாறு எம்.எஸ் அவர்களை 
உரிமையுடன் கேட்டுக் கொண்டார். ஆனால் எம்.எஸ். அதற்கு 
இணங்கவில்லை. பின்னர் கலைஞர் எம்.எஸ்.விசுவநாதனை 
அணுகி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை உருவாக்கினார்.
**
கார் உள்ள அளவும் கடல் நீர் உள்ள அளவும் எம்.எஸ்.சின் 
பெயர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இணைந்தே நிற்கட்டும் 
என்ற உயர்ந்த நோக்கிலும், இசைவேளாளர் சமூகத்தைச் 
சேர்ந்த ஒரு இசை ஆளுமையான பெண்ணை உயர்த்துவது 
தம் இனிய கடமைகளில் ஒன்று என எண்ணி, கலைஞர் 
இம்முயற்சியை மேற்கொண்டார். ஆனால் பிரிவினை 
சார்ந்த பாடல் இது என்று கருதி, (திராவிட நாடு கேட்டவர்
கலைஞர் என்பதால்) எம்.எஸ் மறுத்து விட்டார். இது வரலாறு.
**
இது போன்ற பல சான்றுகள் உண்டு. திரு ஜெயமோகன் 
மலையாளியாக இருப்பதால், தமிழ் தேசிய இனத்து 
ஆளுமைகள் குறித்த அவரின் சொந்த அறியாமையை 
மொத்தத் தமிழ்நாட்டின் அறியாமையாக ஆக்குகிறார்.    
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக