வியாழன், 3 செப்டம்பர், 2015

கிணற்றுத் தவளையாகத் தமிழன்!
ஐ.நா அலுவல் மொழியாக இந்தி!
------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
ஐ.நா.வில் கீழ்வரும் ஆறு மொழிகளும் அலுவல் மொழிகளாக
ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கின்றன.
1) ஆங்கிலம் 2) பிரெஞ்சு 3) சீனம் 4) ரஷ்யன் 5) அரபு 6) ஸ்பானிஷ்.
**
ஏழாவது மொழியாகத் தங்கள் மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும்
என்று பின்வரும் மொழிகள் சார்பாகக் கோரிக்கைகள் ஐ.நா.விடம்
சமர்ப்பிக்கப் பட்டுள்ளன.
1) இந்தி 2) வங்காளி 3) போர்ச்சுகீசிய மொழி 4) துருக்கி மொழி.
**
வங்காளி சார்பாக வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா  பேகம்
2009இல் இந்தக் கோரிக்கையை ஐ.நா.வில் முன்வைத்தார்.
அதே 2009இல் இந்திய அரசின் வெளிவிவகாரத்துறை இந்தி
சார்பாகக் கோரிக்கை வைத்தது (காங்கிரஸ் ஆட்சியின்போது)
**
வங்கதேசப் பிரதமரின் கோரிக்கையை ஆதரித்து, மேற்குவங்க
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஐ.நாவுக்கு அனுப்பப்
பட்டது.(மார்க்சிஸ்ட் ஆட்சியின் போது).அசாம் மாநிலமும்
திரிபுரா மாநிலமும் இக்கோரிக்கையை ஆதரித்தன. (அசாமில்
காங்கிரஸ் ஆட்சி; திரிபுராவில் மார்க்சிஸ்ட் ஆட்சி)
**
 யுனெஸ்கோ என்பது ஐ.நாவின் ஓர் உறுப்பு. யுனேஸ்கோவில்
இந்தி அலுவல்மொழியாக 2009 முதல் ஏற்கனவே இருந்து வருகிறது.
யுனெஸ்கோ ஒன்பது மொழிகளை அலுவல் மொழிகளாகக்
கொண்டுள்ளது.
**
கோரிக்கை வைத்த நான்கு மொழிகளில், துருக்கி மொழிக்கு
ஆதரவு மிகவும் குறைவு. போர்ச்சுக்கீசிய மொழிக்கு நான்கு
நாடுகள் ஆதரவு இருக்கிறது. வங்கதேசப் பிரதமர் மட்டுமே
வங்காளியை ஆதரிக்கிறார். ஆனால், இந்திக்கு 127 கோடி
மக்களைக் கொண்ட பெரிய நாடான இந்தியாவின் ஆதரவு
இருக்கிறது. மேலும் ஏற்கனவே யுனெஸ்கோவில் இந்தி
அலுவல் மொழியாக இருக்கிறது.
**
எனவே, இந்தி மொழியானது ஐ.நாவின் அலுவல் மொழியாவது
ஒன்றும் கடினம் அல்ல.
**
தமிழன் தற்குறியாகவும் கிணற்றுத் தவளையாகவும்
இருக்கிறான். கூடவே, படுபயங்கரமான போலியாகவும்
(HYPOCRITE) இருக்கிறான். முழுமுட்டாள் தனமானதும்
அறிவியலுக்கு எதிரானதுமான ஒரு மொழிக்கொள்கையை
இவன் கொண்டிருக்கிறான். காலத்திற்கேற்ப, மாறி வரும்
சூழலுக்கு ஏற்ப, தன்  மூடத்தனமான மொழிக் கொள்கையை
இவன் மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை.
**
விஷயம் என்பதை விடயம் என்று எழுதி விட்டால், தான்
மிகச் சிறந்த மொழிப்பற்றாளன் என்று கருதுகிறான் இந்த மூடன்.
செம்மொழியான தமிழ் ஐ.நாவின் அலுவல் மொழியாக வேண்டும்
என்று கனவிலும் கருதாத இந்தக் கிணற்றுத் தவளை
எங்கிருந்து அந்தக் கோரிக்கையை வைப்பான்?
**
ரஷ்யாவில் பல மொழிகள் உண்டு. எல்லா மொழிகளுக்கும்
அங்கு சமத்துவம் உண்டு. ஆனாலும் ஐ.நாவின் அலுவல் மொழி
என்று வரும்போது பெரும்பான்மை மொழியான ரஷ்ய மொழி
தான் அலுவல் மொழியானது. இது அன்றைய சோவியத்
ஒன்றியத்தின் அனைத்து மொழி பேசும் மக்களாலும் சரியென்று 
ஏற்றுக் கொள்ளப் பட்டது. காரணம் லெனின் கற்பித்த
மார்க்சியம்.
********************************************************************
       

 
   
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக