இந்தப் பொதுவேலைநிறுத்தம் ஒரேநாளில் திட்டமிடப் பட்டதல்ல.
மையச் சங்கங்களின் கூட்டமைப்பில் BMSஉம் இடம் பெற்று
இருந்தது. BMSஉம் வேலைநிறுத்த அறைகூவல் விடுத்து
இருந்தது. ஒரு சில கோரிக்கைகளை மத்தியத் தொழிலாளர் நல
அமைச்சர் பந்தாரு தத்தாத்ரேயா ஏற்றுக் கொண்டதை அடுத்து,
BMS போராட்டத்தில் இருந்து விலகியது.
**
ஆனால் அதிமுக தொழிற்சங்கம் அதன் பிறவியிலேயே ஒரு
கருங்காலிச் சங்கம். தமிழ்நாட்டில் மேனன் முதல்வராக
இருந்தபோது, பல்வேறு தொழிலாளர் போராட்டங்களை
அவரின் அரசும் கட்சியும் உடைத்தன. எந்த வேலைநிறுத்தத்திலும்
பங்கேற்ற வரலாறு அதிமுக சங்கத்துக்குக் கிடையாது.
**
BMS அப்படியல்ல. பல்வேறு சந்தர்ப்பங்களில் அச்சங்கம்
வேலைநிறுத்தம் செய்திருக்கிறது. இதனால்தான் அச்சங்கம்
தனது உறுப்பினர் எண்ணிக்கையைத் தக்க வைத்திருக்க
முடிகிறது.
**
அகில இந்திய அளவிலான சங்கங்கள் பத்து லட்சம் உறுப்பினர்கள்
எண்ணிக்கையைப் பெற்று இருந்தால், அது ஒரு கௌரவமாகக்
கருதப்படும். ஒரு மாநிலக் கட்சியான திமுகவின்
தொழிற்சங்கமான தொமுச, பத்து லட்சம் என்ற இலக்கை
எட்டி, அந்தக் கௌரவத்தை அடைந்து உள்ளது.
இந்தியாவிலேயே ஒரு மாநிலக் கட்சியின் தொழிற்சங்கம்
பத்து லட்சம் என்ற இலக்கை அடைந்து இருக்கிறது
என்றால், அது தொமுச மட்டும்தான்.
**
ஆனால், பிறவிக் கருங்காலிச் சங்கமான அதிமுக சங்கம்
குறைவான உறுப்பினர் எண்ணிக்கையை மட்டும் கொண்டு
இருக்கிறது என்பதற்குக் காரணம், அதன் நிரந்தரக்
கருங்காலித் தனம்தான்.
**
கடந்த முப்பது ஆண்டுகளாக, மத்திய அரசு ஊழியர் சங்கம்,
தொலைதொடர்பு சங்கம், அஞ்சல்-தந்தி சங்கம், BSNL சங்கம்,
மத்தியப் பொதுத்துறை சங்கக் கூட்டமைப்பு ஆகியவற்றில்
பணியாற்றிய நாங்கள், BMS பல்வேறு கூட்டு இயக்கங்களில்
எங்களுடன் பங்கேற்று இருக்கிறது என்பதை உறுதியாகக்
கூற முடியும்.
**
இப்போது மோடி ஆட்சி என்பதனால் இந்த வேலைநிறுத்தத்தில்
இருந்து விலகி யுள்ளார்கள். ஆனால், கடந்த நீண்டகால
காங்கிரஸ் ஆட்சியின்போது BMS மற்றச் சங்கங்களுடன்
இணைந்து போராடி இருக்கிறது. எனவே BMS உம், அதிமுக
சங்கமும் ஒன்றல்ல.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக