வெள்ளி, 11 செப்டம்பர், 2015

லெஸ்பியன் பெண்ணுக்குப் பிடித்தமான
தியாகராஜ கீர்த்தனை!
---------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
------------------------------------------------------------------------
பீனிக்ஸ் பறவைகளைக்
கூண்டில் அடைத்து வளர்க்கும்
லேடீஸ் ஹாஸ்டல்
லெஸ்பியன் பெண்களில் ஒருத்தி
எனக்குச் சிநேகிதி.
**
சோடோமி பட்டணத்தை
கர்த்தர் அழித்தது தவறு
என்று வாதிட்டாள்  என்னிடம்.
**
குழுப் புணர்ச்சிக்காக அவளை
அழைக்கச் சென்றிருந்தேன்
விருப்பத்துடனோ அல்லது தயக்கத்துடனோ
அவள் ஒத்துக் கொள்ள
நாங்கள் கிளம்பினோம்.
**
சீர ஸாகர சயன நன்னு
சிந்தல  பெட்ட வலனா ராமா
யேசுதாசின் பாடல்
அவளின் ரிங் டோனாய் இருந்தது
தியாகய்யரே வந்து பாடினாலும்
யேசுதாசின் முன் நிற்க முடியாது என்றாள்.
**
உக்கிரமான குழுப்புணர்ச்சி
மெல்லென வடியும் நேரத்தில்
அவளிடம் ஒரு கேள்வி கேட்டேன்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை
புல்லாற்றூர் எயிற்றியனார்
பாடி இருக்கிறாரா என்று.
**
அவள் என்னுடையதை
இறுகப் பிடித்துத் தள்ளி விட்டாள்
அதை விவரிக்க மறுக்கிறேன்
ஏனெனில் 
பக்குவமற்ற தமிழ்ச் சமூகம்
அதை ஏற்றுக் கொள்ளாது.
*****************************************************************   
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக