செவ்வாய், 1 செப்டம்பர், 2015

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராகச் சாட்சி
சொன்னார் கங்கை அமரன். இதனால் ஜெயாவும் தண்டிக்கப் பட்டார்.
இதன் காரணமாக ஜெயாவின் பகைக்கு ஆளானார் கங்கை அமரன்.
இந்நிலையில், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, மத்திய ஆளும்
கட்சியான  பாஜகவில் போய்ச் சேர்ந்தார்.
**
இந்துத்துவா தத்துவத்தால் ஈர்க்கப்பட்டா கங்கை அமரன்
அங்கு போனார்? இல்லை என்பது கண்கூடு. பாஜகவுக்கும்
அவருக்கும் எவ்விதத் தத்துவப் பிணைப்பும் கிடையாது.
இது வெறும் வணிக உறவுதான். பாஜகவால்  அவருக்குப்
பாதுகாப்புக் கிடைக்கும். அவரை பாஜக பயன்படுத்திக்
கொள்ளும். கணிசமான தொகை நன்கொடையாகவும்
பாஜகவுக்கு கிடைக்கும். ஆக, இது வெறும் வணிக உறவு.
**
இந்நிலையில், தோழர் மதிமாறன் மீது அவதூறு செய்வது
அடிமூடத்தனம் ஆகும். மதவெறிக்கு எதிராக உறுதியுடன்
நிற்கின்ற மதிமாறன் போன்ற தோழர்களின் மீது சேறு
வீசுவது, ஆர்.எஸ்.எஸ்.சின் கரங்களையே வலுப்படுத்தும்.
**
போற்றுவார் போற்றட்டும்
புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும்
என்ற மனப்பாங்குடன், மதிமாறன் தொடர்ந்து வேலை
செய்யட்டும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக