சனி, 5 செப்டம்பர், 2015

(2) சுரபுன்னை மரங்களும்  
பிரியமானவளின் மலச்சிக்கலும்! 
 (உலகத்தரம் வாய்ந்த கவிதைகளின் வரிசை!)
-------------------------------------------------------------------------
கவிஞ்சர் ஜமுனா பிரமீளன் 
---------------------------------------------------------------------------
பிரியமானவளே 
கடந்து சென்ற இரண்டு நாட்களாக 
உனக்கு மலச்சிக்கல் 
என்று அறிந்த அந்த நொடியிலேயே 
என் செவிகளில் ஒலித்துக் கொண்டிராத 
அந்த லப்-டப் ஓசை நின்று போனது.
**
அப்பல்லோ புறப்பட்டேன் 
மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை பெற.
**
அப்பல்லோ ஏன் போகிறாய் 
பக்கத்துப் பெட்டிக் கடைக்குப் போ 
ரெண்டு வாழைப்பழம் வாங்கிக் கொடு 
எல்லாம் சரியாய்ப் போகும் என்ற 
மூத்தோரின் அறிவுரையை வெறுத்தேன்.
**
தங்கள் குடில்களில் கழிப்பறை இல்லாத 
நெய்தல் நிலத்துப் பரதவப் பெண்கள் 
சுரபுன்னை மரங்களின் நிழலில் 
மலம் கழிக்கும் காட்சியும் 
அதன் மாட்சியும் 
நெஞ்சில் பொறாமையைத் தூண்டின.
**
மன்னர்களின் அந்தப்புரத்துப் பெண்டிரின்
மலச்சிக்கல் 
உலக வரலாற்றைப் புரட்டிப் போட்டதை 
கருத்துமுதல்வாத அறிஞர்களின் 
கனத்த புத்தகங்களில் படித்த நான்
தீர்க்கமான முடிவு எடுத்தேன்.
**
வெடி வைத்துத் தகர்த்தாவது 
வெளியே கொண்டு வந்து விடுவது 
என்ற முடிவுதான் அது.
****************************************************** 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக