புதன், 9 செப்டம்பர், 2015

மார்க்சிய மதவாதிகளுக்கு உடம்பு முழுவதும்
சூடு போடுகிற புத்தகம்!
------------------------------------------------------------------------
காரல் மார்க்ஸ் கூறிய ஆசிய உற்பத்தி முறை
(Asiatic mode of production) என்பது தமிழகத்தில் நிலவவில்லை
என்று ஆதாரத்துடன் நிறுவி இருக்கிறார் தோழர் ராமசாமி.
இந்நூலை NCBH நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்நிறுவனம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த நிறுவனம் ஆகும்.
**
ஆசிய உற்பத்தி முறை உலகில் எங்குமே நிலவவில்லை
என்று தோழர் ஸ்டாலின் தெளிவாகக் கூறி உள்ளார்.
தோழர் ராமசாமியின் நூல் ஸ்டாலின் கூறி, பல முறை
நிரூபிக்கப் பட்ட உண்மையை தமிழகச் சூழலில் மீண்டும்
ஒரு முறை நிரூபிக்கிறது. இதன் மூலம், மார்க்சியத்தை
இஸ்லாமைப் போல ஒரு மதமாகக் கருதும் மார்க்சிய
மதவாதிகளுக்கு உடம்பு முழுவதும் சூடு போடுகிறது.
**
மார்க்சியம் தேங்கிப்போன குட்டையாகக் ஆகி விடக் கூடாது;
அது தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற எமது
சரியான கருத்தை நிகழ்வுகள் மெய்ப்பிக்கின்றன.
----மார்க்சிய சிந்தனைப் பயிலகம்--------      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக