சனி, 12 செப்டம்பர், 2015

வியட்நாமில் சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்!
சீனாவே திரும்பிப் போ என்ற முழக்கங்கள்!
வன்முறை காரணமாக 3000 சீனர்களை 
திருப்பி அழைத்துக் கொண்டது சீனா!
-------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
------------------------------------------------------------------
வியட்நாமின் வயல் வெளியில், தரையில், கண்ணைக் கவரும் 
ஆரஞ்சு நிற 'மிட்டாய்'களை  அமெரிக்க விமானங்கள் போடும்.
குழந்தைகள் அதை ஆர்வத்துடன் எடுக்கும்போது, அந்த 
மிட்டாய் வெடிக்கும். குழந்தை சிதறும். ஏனெனில் அது 
மிட்டாய் போன்ற ரசாயனக் குண்டு. இவ்வாறு வியட்நாமை 
அழித்தது அமெரிக்கா.
**
இறுதியில், 1975இல் அமெரிக்கா தோற்றது. சின்னஞ் சிறிய 
ஏழை நாடான வியட்நாம் எப்படி அமெரிக்காவை வென்றது?
கம்யூனிஸ்ட் நாடுகளான ரஷ்யாவும்( அன்றைய சோவியத் 
ஒன்றியம்), சீனாவும், ஓரளவுக்கு கியூபாவும் வியட்நாமுக்கு 
உதவி செய்தன. உண்மையில், வியட்நாமுக்காக அந்தப் 
போரை நடத்தியதே ரஷ்யாவும் சீனாவும்தான்.
**
இன்று அது எல்லாம் பழங்கதை. சீனா வாழ்க என்று 
முழக்கமிட்ட வியட்நாம் மக்கள் இன்று சீனா ஒழிக 
என்று முழக்கம் இடுகிறார்கள்.
1975 வரை வியட்நாமின் முழக்கம் இதுதான்: 
அமெரிக்கா ஒழிக; சீனா வாழ்க!
**
இன்று 2015இல் வியட்நாமின் முழக்கம்:
அமெரிக்கா வாழ்க: சீனா ஒழிக!
**
தென் சீனக் கடலில், வியட்நாமுக்குச் சொந்தமான 
கடல் பகுதியில், எண்ணெய் தோண்டுவதற்காக, தன் 
துரப்பணக் கப்பலை நிறுத்தி இருக்கிறது சீனா. இந்த 
அநியாயமான ஆக்கிரமிப்பை எதிர்த்து வியட்நாம் 
முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் 
நடந்தன. வன்முறை வெடித்தது. 2014 மே 10 முதல்
சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மாதக்கணக்கில் நடந்தன. 
**
வியட்நாமில் உள்ள சீனத் தொழிற்சாலைகள் உடைத்து 
நொறுக்கப் பட்டன. சீனர்களுக்கு அடி உதை விழுந்தது.
இதனால் பயந்து போன சீனா,வியட்நாமில் இருந்த 
3000 சீனர்களைத் திருப்பி அழைத்துக் கொண்டது.
**
இது குறித்த படங்களையே இங்கு காண்கிறீர்கள்.
2014 மே 11 முதல் ஜூலை 15 வரை வியட்நாமில் 
சீன ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்தன. 
**
அன்று நண்பனாக இருந்த சீனா இன்று எதிரியாக 
மாறிப் போனது ஏன்? கம்யூனிஸ்ட் வியட்நாமும் 
ஏகாதிபத்திய அமெரிக்காவும் பகையை மறந்து 
நண்பர்களாக இருக்க முடிகிறது.
**
ஆனால் கம்யூனிஸ்ட் வியட்நாமும், கம்யூனிஸ்ட் சீனாவும் 
எதிரிகளாக இருப்பது ஏன்? எப்படி? விடை காண்போம்!
******************************************************************
.       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக