திங்கள், 21 செப்டம்பர், 2015

புரட்சியும் சீர்திருத்தமும்!
-----------------------------------------
புரட்சி என்பது மாபெரும் சமூக மாற்றம். சமூக அமைப்பை
அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போடுவது புரட்சி. ஆனால்,
சீர்திருத்தம் என்பது அப்படியல்ல. இருக்கின்ற சமூக அமைப்பை
மாற்றாமல், அதை அப்படியே வைத்துக் கொண்டு, அதில்
சில  எளிய மாற்றங்களைச் செய்வது.
**
ஆக, சீர்திருத்தம் என்பதில், சமூக அமைப்பு மாறுவதில்லை.
அது அப்படியே இருக்கும். பெரியாரும் அம்பேத்காரும்
அண்ணாவும் மாபெரும் சீர்திருத்தவாதிகள் (Great Reformists).
**
சீர்திருத்தவாதத் தத்துவங்கள் எல்லாமே குட்டிமுதலாளித்துவத்
தத்துவங்களே. அவை சமூக மாற்றத்தை, அடிப்படை மாற்றத்தைக் கோருவதில்லை. எனவே, திராவிட இயல் பெரியாரியல் உள்ளிட்ட
சித்தாந்தங்கள் குட்டி முதலாளித்துவ சித்தாந்தங்களே.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக