சனி, 12 செப்டம்பர், 2015

(2) அமெரிக்க அதிபரின் வியட்நாம் விஜயம்!
கம்யூனிசமும் ஏகாதிபத்தியமும் கைகுலுக்கும் காட்சி! 
-----------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
---------------------------------------------------------------------------------------------
இங்கு சில படங்களை வெளியிடப்பட்டு உள்ளன.
அவற்றை நன்கு பாருங்கள். பல செய்திகளைச் சொல்லும்.
**
அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், வியட்னாம் நாட்டுக்கு 
நவம்பர் 16-19, 2000இல், நான்கு நாள் விஜயமாக வியட்நாம் 
சென்றார். அது குறித்த படங்களே இவை.
**
படம்-1: கிளின்டனுக்கு வியட்நாம் ராணுவம் வழங்கும் 
அணிவகுப்பு மரியாதை.
படம்-2: செங்கொடி பட்டொளி வீச, கிளின்டன் வியட்நாமின் 
ராணுவ மரியாதையை ஏற்கிறார். கூடவே வியட்நாம் அதிபர்.
**
படம்-3: வியட்நாமின் தேசத்தந்தை ஹோசிமின் அவர்களின் 
 திருவுருவப் படம் சாட்சியாக, அமெரிக்க-வியட்நாம் அதிபர்கள்
கலந்துரையாடல்.
படம்-4: வியட்நாம் மக்களின் அன்பு வெள்ளத்தில் 
ஏகாதிபத்திய அதிபர் கிளின்டன்.
**    
1955-1975 காலக் கட்டத்தில் வியட்நாம் மீது அமெரிக்கா 
அநீதியான ஆக்கிரமிப்புப் போர் நடத்தியது. இப்போரில் 
இருபது லட்சம் வியட்நாம் மக்கள் உயிர் இழந்தனர்.
**
ஆனால், அந்தப் பகை, காற்றில் எரிந்த கற்பூரம் போல்
காணாமல் போனது. இன்று அமெரிக்காவும் வியட்நாமும் 
நெருங்கிய நட்பு நாடுகள். 
**
ஏகாதிபத்திய எதிர்ப்பு, அமெரிக்க எதிர்ப்பு ஆகிய இந்தக் 
கொள்கைகள் எல்லாம் வியட்நாமில் சமாதி கட்டப் பட்டு 
விட்டன. இது ஏன்? இது சரியா? தொடர்ந்து காணலாம்.
*************************************************************** 

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக