பாலைப்பண் குறித்து.....
----------------------------------------
தமிழ் என்றுமே ஒற்றைத் தமிழாக இருந்ததில்லை.
இயல் இசை நாடகம் ஆகிய இம்மூன்றும் கொண்டு
முத்தமிழாகவே வளர்ந்தது. சிலப்பதிகாரம் இசைத்தமிழுக்கு
இளங்கோவடிகள் அளித்த பெருங்கொடை. சிலம்பின் இசையைப்
புரிந்துகொள்ள, அடியார்க்கு நல்லார் உரையைப் (அல்லது அரும்பத
உரைகாரரின் உரை) படித்தல் வேண்டும். புலியூர்க் கேசிகன் உரை
ஓர் எளிய அறிமுகத்தை மட்டுமே தர வல்லது.
**
பண் எனில் இசை என்று பொருள்படும். தற்காலத்தில் ராகம்
என்று கூறப்படுவதே பண் ஆகும். சுரங்கள் பொருத்தமுறத்
தொகுக்கப் பட்டமையே பண் ஆகும். (ஏழ் சுரங்கள் அனைவரும் அறிந்தவையே)
**
இஃது நால்வகைப்படும். மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை
ஆகிய நான்கும் பெரும்பண்கள் ஆகும். இவற்றில் இருந்தே
பிற பண்கள் உருவாகின்றன. (தற்போதைய மேளகர்த்தா
ராகங்களை ஒப்பு நோக்குக)
**
நால்வகைப் பெரும்பண்களிலும் பாலைப்பண்ணே, பாடுவோர்
விரும்பும் வண்ணம் விரித்துப் பாட உகந்தது. எனவேதான் இங்கு
மாதவியின் பாலைப்பண் சிறப்பிக்கப் படுகிறது.
**
தமிழிசை குறித்து விரிவாக ஆராய்ந்த தமிழறிஞர்
திரு மம்மது அவர்களே. நெல்லை ம.தி.தா இந்துக்
கல்லூரியில் எழுபதுகளில் படித்தவர். எனக்கு மூத்தவர்.
முழுமையான விவரங்களுக்கு திரு மம்மது அவர்களே
தகுதியானவர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக