செவ்வாய், 8 செப்டம்பர், 2015

குண்டி கழுவ மறந்த அபித குஜாம்பாளும்
வெண்ணிப் பறந்தலைப் போர்க்களமும்!
---------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
----------------------------------------------------------------------
அச்சம் கலந்த தண்ணீரால்
குண்டி கழுவும் பழக்கமுடைய 
அபித குஜாம்பாள்
முதலாம் பானிப்பட் போருக்குப் பின்னால்
குண்டி கழுவுவதை நிறுத்தி விட்டாள்.
**
வேளிர் குல சிற்றரசர்களின் அபிமானியான
குப்பம்மாளும்
வெண்ணிப் பறந்தலைப் போருக்குப் பின்னால்
குண்டி கழுவுவதை நிறுத்தி விட்டாள்
என்பது பற்றி
வரலாற்றியல் பி.ஹெச்டி மாணவர்களின்
ஆய்வடங்கல்கள் நிரம்பவே பேசுகின்றன.
**
குப்பம்மாள்தான் குஜாம்பாளோ
குஜாம்பாள்தான் குப்பம்மாளோ
கயிற்றரவோ
கிடந்து அலைபாய்கிறது மனசு.
**
ஆதிசங்கரரின் காலடி பட்ட இடம் தேடி
எத்தியோப்பியா முழுவதும் பயணிக்கிறேன்.
**
சதாசிவராயரின் படைகள்
தலைக்கோட்டை நோக்கி விரைகின்றன.
**
சதுரமான தோசைக்கல்லில்
முட்டையை உடைத்து ஊற்றுகிறார்
சரக்கு மாஸ்டர்
சாமிநாத சர்மா.
ஜாரே ஸஹாங் சே அச்சா.
**********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக