செவ்வாய், 15 செப்டம்பர், 2015

குவான்டம் சிகிச்சை என்றால் என்ன?
மார்க்சிய சிந்தனைக் குள்ளர்களிடம் இருந்து
மறுப்பு வருமா?
-----------------------------------------------------------------------------
இன்றைய ஆங்கில இந்து இதழில் பேராசிரியர் பி எம் ஹெக்டே
எழுதிய Some thoughts on Quantum healing என்ற கட்டுரை வந்துள்ளது.
(15.09.2015 The Hindu, பக்கம்-18 OPEN PAGE) இன்னும் படிக்கவில்லை.
**
பகுத்தறிவு என்று அறியப்படும் கடவுள் மறுப்பு, மார்க்சியத்தின்
பொருள்முதல்வாதம் என்னும் தத்துவம் ஆகியவற்றுக்குச்
சவால் விடும் கட்டுரை. எனவே இக்கட்டுரை கூறும்
கருத்துக்களுக்கு வன்மையான மறுப்பு மார்க்சியர்களிடம்
இருந்து வர வேண்டும்.
**
ஆனால் இக்கட்டுரையின் கருத்துக்களை மறுக்கும் அளவுக்கு
வலிமை வாய்ந்த தத்துவ அறிவு படைத்த மார்க்சியர்,
தமிழ்நாட்டில் எவரும் இல்லை ஒரே ஒருவரைத் தவிர.
**
மார்க்சிய முகாம் என்பது சிந்தனைக் குள்ளர்கள் அடையும்
பட்டியாக உள்ளபோது, ஹெக்டே அவர்களின் கட்டுரைக்கு
ஒரு பயலிடம் இருந்தும் மறுப்பு வராது.
**
அடுத்து ஏதேனும் எழுதுவதற்கு முன்னால், ஹெக்டேயைப்
படித்து விடுகிறேன்.
***************************************************************     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக