வியாழன், 3 செப்டம்பர், 2015

ஆட்சியில் பங்கு கேட்பது அவசரக் குடுக்கைத்தனம்!
பிஞ்சில் பழுத்தால் வெம்பிப் போகும்!
-------------------------------------------------------------------------------------
தமிழகத்தில் 2016 தேர்தலுக்குப் பிறகு, திமுக ஆட்சி
அமைந்தால், அந்த ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்குப் 
பங்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை சில அரசியல் 
கட்சிகளால் முன்வைக்கப் பட்டுள்ளது.
**
தமிழக அரசியலில் இந்தக் கோரிக்கை அவசரக் குடுக்கைத் 
தனமானது. It is highly pre-matured. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ 
அடிப்படையிலான தேர்தல் நடந்தால் மட்டுமே இந்தக் 
கோரிக்கையை எழுப்ப முடியும். அப்போதுதான் அது 
பொருந்தும். தற்போது எழுப்புவதால் பயனில்லை.
**
இரண்டாவதாக, இந்தக் கோரிக்கையானது கலைஞரை 
நோக்கி மட்டுமே எழுப்பப் படுகிறது. ஜெயலலிதாவிடம் 
இந்தக் கோரிக்கையை எழுப்ப, ஈரேழு பதினாலு லோகத்திலும் 
ஒரு பயலுக்கும் தைரியம் கிடையாது.
**
அண்மையில் நடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் 
பாருங்கள். அங்கு விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் 
தேர்தல் நடைபெற்றது. ஆட்சியில் பங்கு கேட்கும் கட்சிகள் 
இந்தியாவிலும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் 
தேர்தல் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப 
வேண்டும். போராட வேண்டும். போராடி அதை அடைய 
வேண்டும். 
**
அதைச் செய்யாமல், ஆட்சியில் பங்கு கேட்பது, காலம் 
கனியும் முன்பு எழுப்பும் கோரிக்கையாகும். இது பிஞ்சில் 
பழுக்க முயற்சி செய்வதாகும். இது வெம்பிப் போகும்.
************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக