சனி, 30 மார்ச், 2019

அணுகுண்டுப் பூச்சாண்டி!
-----------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------
இரண்டாம் உலகப் போர் 1939-45 ஆண்டுகளில் நடந்தது.
தற்போது இந்த 2019ல் 73 ஆண்டுகள் கடந்து விட்டன இரண்டாம்
உலகப்போர் நடந்து.

ஏன் ஒரு மூன்றாம் உலகப்போர் நடக்கவில்லை?
நடக்காது. ஏனெனில் அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டு
விட்டன. உலகில் எட்டு நாடுகள் அணுகுண்டு வைத்து
இருக்கின்றன.

ஆம், உலக அமைதிக்குக் காரணம் அணுகுண்டுதான்.
பயங்கரமான பேரழிவு ஆயுதமான அணுகுண்டுதான்
உலகப்போர் வராமல் தடுத்து நிற்கிறது.

இந்த உண்மையை முதன் முதலில் சொன்னது
நியூட்டன் அறிவியல் மன்றம்தான். இதை விளக்கி
பல்வேறு கூட்டங்களில் பேசியுள்ளேன்.

நாஷ் சமநிலை (Nash equilibrium) உலகில் பேணப்படுகிறது.
எனவே எந்த நாடும் அணுகுண்டை ஒரு போரில்
பயன்படுத்தாது.

ஒருகாலத்தில் அணுகுண்டுத் தொழில்நுட்பம்தான்
உலகின் தலைசிறந்த முதல்தர தொழில்நுட்பமாக
இருந்தது. இன்று அதெல்லாம் காலாவதி ஆகிவிட்டது.

அப்படியானால், இன்று உலகின் முதல்தரத்
தொழில்நுட்பம் எது? வேறு எதுவும் இல்லை;
ஏவுகணைத் தொழில்நுட்பம்தான்.

இந்தியாவில் இதற்கு வித்திட்ட டாக்டர் அப்துல் கலாம் மிகப்
பொருத்தமாகவே missile man என்று அழைக்கப்
பட்டார்.

நியூட்டன் அறிவியல் மன்றம் இப்பொருளில் எழுதியுள்ள
கட்டுரைகளைப் படியுங்கள். தெளிவு கிடைக்கும்.
********************************************************      

முற்றிலும் தவறான செய்தி!
உண்மை அறியுங்கள் ஊடக நண்பர்களே!
----------------------------------------------------------------
ஒரு தொகுதியில் 384 பேர் போட்டியிட்டாலும்
மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் மூலமே
தேர்தல் நடக்கும்!
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
1) 2019 நாடாளுமன்றத் தேர்தலில், நாடு முழுவதும் உள்ள
543 தொகுதிகளிலும் EVM மூலமாகத் தேர்தல் நடைபெற
உள்ளது.

2) EVMகள் மூன்று வகையானவை. அவை: M-1, M-2, M-3 ஆகியவை. 
2014 தேர்தல் வரை M-1 மற்றும் M-2 வகை எந்திரங்கள்
பயன்படுத்தப் பட்டன. ஆனால் 2019 தேர்தலில் M-3 வகை
எந்திரங்கள் மூலம் தேர்தல் நடக்கும்.

3) இந்திய நாடு முழுவதும், நாடாளுமன்றத் தேர்தலில்
சுமார் 10.6 லட்சம் வாக்குச் சாவடிகள் (Polling Booths)
அமைக்கப் பட உள்ளன. இவற்றில் பயன்படுத்திட
பின்வரும் EVM யூனிட்டுகள் தயாராக உள்ளன.

6) வாக்களிக்கும் பகுதி (Ballot Unit) = 22.3 லட்சம் (M-3 வகை)
கட்டுப்பாடு யூனிட் (Conttrol Unit) = 16.3 லட்சம் (M-3 வகை)
VVPAT = 17.3 லட்சம் (M-3 வகை)
என்ற எண்ணிக்கையில் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம்
EVMகள் உள்ளன. இவை அனைத்தும் M-3 வகை
எந்திரங்கள் ஆகும்.

7) M-1 மற்றும் M-2 வகை எந்திரங்கள் 2019 நாடாளுமன்ற மற்றும்
சட்டமன்றத் தேர்தல் பயன்பாட்டில் இல்லை. அவை
தேர்தல் ஆணையத்தின் பரணில் அடுக்கப் பட்டுள்ளன.

8) M-3 வகை எந்திரங்களில், ஒரு தொகுதியில் 384 வேட்பாளர்
வரை நிற்கலாம். ஒரு பாலட் யூனிட்டில் 16 வேட்பாளர்கள்
வரை இடம் பெறுவர். 24 பாலட் யூனிட்களை ஒன்றிணைப்பதன்
மூலம் 384 வேட்பாளர்கள் வரை (நோட்டா உட்பட )
(24 x 16 = 384) ஒரு தொகுதியில் உள்ளடக்கலாம்.

9) பழைய M-1 மற்றும் M-2 வகை எந்திரங்களில் ஒரு
தொகுதியில் EVM பயன்படுத்தப்பட வேண்டும் என்றால்,
வேட்பாளர்களின் எண்ணிக்கை 64 அல்லது 64க்குள்
இருக்க வேண்டும். அனால் இந்த M-3 வகை எந்திரங்களில்
வேட்பாளர்களின் எண்ணிக்கை 384 வரை இருந்தாலும் ,
EVM மூலமாகவே தேர்தல் நடத்த முடியும்.

10) அறிவியல் ஒளி பெப்ரவரி 2019 சிறப்பு மலரில்
வெளியாகி உள்ள நியூட்டன் அறிவியல் மன்றம்
எழுதியுள்ள மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில்
மோசடி செய்ய இயலுமா என்ற கட்டுரையை
ஒவ்வொருவரும் படிக்க வேண்டும்.
***********************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக