வியாழன், 14 மார்ச், 2019

மொழிபெயர்ப்பு என்பது பெண்களைப் போல!
அழகானவை (மூலத்துக்கு) விசுவாசமாக இருப்பதில்லை!
விசுவாசமானவை அழகாக இருப்பதில்லை!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
ஹெரால்டு ராபின்சின் The Carpet Baggers  நாவலைப் படித்துக்
கொண்டிருந்தேன். இன்றல்ல, 1972ல். அப்போது எனக்கு
வயது 19. கோடை விடுமுறைக் காலம்.

ஒரு அத்தியாயத்தில்
"She doesn't require applause every time she farts"  என்ற வாக்கியம்
வந்தது. இதில் வரும் farts என்ற சொல்லுக்கு எனக்குப்
பொருள் புரியவில்லை. அது ஒரு verb என்பதும் third person singularல்
உள்ளது என்பதும் மட்டுமே எனக்குத் தெரிந்தது. எனவே fart என்ற
சொல்லுக்குப் பொருள் தேடி அகராதியைப் புரட்டினேன்.

fart என்பதற்கு emitting wind from the anus என்ற பொருளை அகராதி
கூறியது. இதிலும் anus என்ற சொல்லுக்கு எனக்குப் பொருள்
புரியவில்லை. நான் உயிரியல் மாணவன் அல்ல. பிறந்தது
முதலே படித்து வருவது maths and physicsதான். maths, physicsல்
anusக்கு இடமில்லை.

எனவே anusக்குப் பொருள் தேடி அகராதியைப் புரட்டியபோது,
ultimate portion of the alimentary canal என்ற பொருள் கிடைத்தது.
இதிலும் எனக்கு ஒரு சங்கடம். aliment என்ற சொல்லுக்கு
எனக்குப் பொருள் தெரிந்திருக்கவில்லை.

எனவே மீண்டும் அகராதியைப் புரட்டியபோது,
aliment = food என்ற பொருளை அறிந்தேன். இப்போது
மேற்கூறிய மூன்றுக்குமான பொருளைச் சேர்த்துப்
பார்த்து, fart என்பதன் பொருள் என்னவென்று அறிந்தேன்.

உங்களுக்கும் fart என்பதன் பொருள் தற்போது விளங்கி
இருக்கக் கூடும். பலருக்கு விளங்காமலும் இருக்கக்கூடும்.
" ஒவ்வொரு முறை fart பண்ணும்போதும் அவள் கைதட்டலை
எதிர்பார்ப்பவள் அல்ல" என்பதே ஹெரால்டு ராபின்ஸ்
எழுதியதன் பொருள். மிகுந்த அங்கதத்துடன் எழுதப்பட்ட
வாக்கியம் இது.

Never love a strangerல் தொடங்கி, Stone for Danny Fisher, Carpet Baggers,
Adventurers என்று ஹெரால்டு ராபின்சின் நாவல்கள்
அனைத்தையும் UG முடிவதற்குள் படித்து முடித்திருந்தேன்.

பின்னர் இர்விங் வாலஸ், லியான் அரிஸ், ஆர்தர் ஹெய்லி
என்று வளர்ந்தது ஆங்கில நாவல் வாசிப்பு. கென்னடி
கொலையை ஒட்டி எழுதப்பட்ட The Plot என்ற இர்விங் வாலஸின்
நாவல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த ஆங்கில
நாவல்களே எனது ஆங்கிலச் சொற்பெருக்கத்தை
(vocabulary) உருவாக்கின.

நான் படித்த physics, mathsல் ஆங்கில vocabularyக்கு ஏது இடம்?
பின்னர் மார்க்சிய நூல்களை ஆங்கிலத்தில் வாசிக்கத்
தொடங்கினேன். மார்க்சிய நூல்களின் தமிழ்
மொழிபெயர்ப்பு படுமோசமாக .இருந்ததே இதற்குக்
காரணம். What is to be done? என்ற லெனின் நூலை
" செய்யப்பட வேண்டியது என்ன?" என்று மொழிபெயர்த்து
இருந்தார்கள் தமிழ் முட்டாள்கள். ஆங்கில மூலத்தில்
passive voice இருப்பதால், தமிழாக்கத்திலும் passive voice
இருக்க வேண்டும் என்ற "அக்கறை"யுடன் செய்யப்பட
மொழிபெயர்ப்பு அது. புரிகிறதா?

ஆக எர்ல் ஸ்டான்லி கார்டனரில் தொடங்கி ஹெரால்டு
ராஐன்ஸ், இர்விங் வாலஸ் என்று வளர்ந்து மார்க்ஸ் எங்கல்ஸ்
என்று முதிர்ந்து சட்டம், உளவியல் என்று துறைவாரியாக
ஆங்கில நூல்களைப் படித்து, ஷேக்ஸ்பியர் மில்டன் கதே
பெர்னார்ட் ஷா என்று இலக்கியங்களுள் புகுந்து
அதன் விளைவாகக் கைவரப் பெறுவதே ஆங்கிலப் புலமை.

ஆங்கிலத்துக்கு இணையாகவும் அதற்கு மேலும்
தமிழ் இலக்கியங்களையும் படித்திருக்க வேண்டும்.
அப்போதுதான் மொழிபெயர்ப்புத் திறன் கைவரும்.

பாவம், தங்கபாலுவோ அல்லது வேறெந்த தமிழக
அரசியல்வாதியோ இதற்கெல்லாம் எங்கே போவார்கள்?
தற்குறிகள்தானே அரசியலில் இருக்கிறார்கள்!

காங்கிரஸ் பாஜகவுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-------------------------------------------------------------------------
ராகுல் காந்தியோ மோடியோ அல்லது தமிழ் தெரியாத
எந்த ஒரு வெளிமாநிலத் தலைவரோ தமிழகத்துக்கு
வந்து கூட்டங்களில் பேசும்போது, அவர்களின் ஆங்கிலப்
பேச்சுக்கு, உலகின் தலைசிறந்த தமிழ் மொழிபெயர்ப்பு
இவ்விடம் வழங்கப்படும்.

கட்டணம் = ஒரு மணி நேர ஆங்கிலப் பேச்சை
மொழிபெயர்க்க ரூ 50,000 மட்டுமே. அணுகுவீர்
நியூட்டன் அறிவியல் மன்றம்.
************************************************** 


              
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக