ஞாயிறு, 31 மார்ச், 2019

விண்வெளி யுகமும்
விண்வெளியில் சேரும் குப்பைகளும்!
'மிஷன் சக்தி'யால்  விண்வெளியில்
குப்பை சேரவில்லை, எப்படி?
----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------
இருபதாம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதியில்
விண்வெளியுகம் தோன்றியது. 1957 அக்டோபர 4ல்
அன்றைய சோவியத் ஒன்றியம் (இன்றைய ரஷ்யா)
ஸ்புட்னிக்-1 என்ற செயற்கைக்கோளை விண்ணில்
செலுத்தியது. அந்த நாள் முதல் விண்வெளி யுகம்
(space age) தொடங்குகிறது.

இந்த பூமிக்கு வெளியே கால் வைப்பதற்கு இடம் கிடைத்தால்
நான் இந்த பூமியைப் புரட்டித்த தள்ளி விடுவேன் என்றார்
ஆர்க்கிமெடிஸ். சொன்ன காலம் பொது சகாப்தத்திற்கு முன்,
பொசமு 3ஆம் நூற்றாண்டில்.

மார்க்சிய மூல ஆசான்களின் காலத்தில் விண்வெளிக்கு
மனிதன் செல்ல முடியும் என்பது இருக்கட்டும், ஒரு
செயற்கைக்கோளை அனுப்ப முடியும் என்ற எண்ணமே
கிடையாது. மார்க்ஸ் 1883ல், எங்கல்ஸ் 1895ல்,
லெனின் 1924ல், ஸ்டாலின் 1954ல் மறைந்த போது
விண்வெளி யுகம் என்ற ஒன்றே தொடங்கி இருக்கவில்லை.

விண்வெளி யுகம் தொடங்கியதை அறிந்த ஒரே ஒரு
மார்க்சிய மூல ஆசான் மாவோ மட்டுமே. மாவோ
மறைந்தது 1976ல். விண்வெளி யுகம் தொடங்கி
19 ஆண்டுகளின் பின் மாவோ மறைந்தார்.

1961 ஏப்ரலில் முதன் முதலில் சோவியத் ஒன்றியத்தின்
யூரி ககாரின் விண்வெளியில் பறந்தார்.அப்போது
சோவியத் அதிபராக இருந்தவர் குருச்சேவ்.

விண்வெளி யுகத்தின் ஆரம்ப காலத்தில் அமெரிக்காவும்
சோவியத் ஒன்றியமும் விண்வெளியில் ஆதிக்கம்
செலுத்தின. பின்னர் சீனா இந்தியா ஆகிய நாடுகள்
விண்வெளியில் முன்னணிக்கு வந்தன.

விண்வெளி பற்றி அறிந்து கொள்ள வேண்டுமெனில்,
முதலில் விண்வெளி எப்படி வரையறுக்கப் படுகிறது
என்று தெரிந்து கொள்ள வேண்டும். எல்லாமே வெளிதான்
(space) என்றாலும், விண்வெளி என்பதற்கு தனித்த
அர்த்தம் உள்ளது

உலகிலேயே உயர்ந்த மலைச்சிகரம் எவரெஸ்ட் சிகரம்.
இதன் உயரம் என்ன? 8848 மீட்டர்! (எட்டு எட்டா நாலு எட்டு
என்ற வாக்கியத்தை நினைவில் கொள்க). 8848 மீட்டர்
என்பது ஏறத்தாழ 9 கிமீ அல்லது 29,000 அடி  ஆகும்.
எவரெஸ்ட் சிகரத்தை டென்சிங் நார்கே, பச்சேந்திரி பால்
ஆகியோர் எந்த விண்கலத்திலும் பறந்து செல்லாமல்,
மலையேற்றம் மூலமாகவே அடைந்துள்ளனர்.

 சாதாரணமாக ஆகாய விமானங்கள் எவ்வளவு உயரத்தில்
பறக்கின்றன? 35,000 அடி உயரம் என்பது மிகவும்
சம்பிரதாயமான உயரம். இந்த உயரத்தில் பறக்காமல்
இருந்தால் என்ன ஆகும்? 29,000 அடி உயரத்தில் இருக்கும்
இமயமலையில் விமானம் மோதி விடும்.

ஜெட் விமானங்கள் இன்னும் அதிகமான உயரத்தில்
பறக்க வல்லவை. போர் விமானங்கள் சர்வ சாதாரணமாக
50,000 அடி உயரத்தில் பறக்கும். புள்ளி விவரங்களின்படி,
1976ல் ஒரு விமானம் 85,135 அடி உயரத்தில் பறந்திருக்கிறது.
எனினும் ஒவ்வொரு விமானமும் அனுமதிக்கப்பட்ட
உயரத்தில் மட்டுமே (certified altitude) பறக்க வேண்டும்
என்பது விமானப் போக்குவரத்து விதி.

ஏனெனில் விமானத்தில் உயரே செல்லச் செல்ல
1) காற்றின் அடர்த்தி குறைந்து கொண்டே செல்லும்
2) எனவே காற்றில் உள்ள ஆக்சிஜனும் குறைந்து கொண்டே
செல்லும். 3) காற்றின் அழுத்தமும் குறைந்து கொண்டே
செல்லும்.

மேற்கூறிய 3 மட்டுமின்றி இன்னொன்றும் உயரம்
அதிகரிக்க அதிகரிக்கக் குறையும். அது எது?
வாசகர்கள் விடை சொல்ல வேண்டும். சொல்ல
மாட்டீர்கள். எனவே நானே சொல்லி விடுகிறேன்.

வெப்பநிலையும் குறையும் (temperature will decrease).
வெப்பநிலை ஏன் குறைகிறது? அழுத்தம் குறையும்போது
வெப்பநிலையும் குறைய வேண்டும் அல்லவா?
அழுத்தமும் வெப்பநிலையும் ஒன்றுக்கொன்று நேர்விகிதப்
பொருத்தத்தில் உள்ளவை அல்லவா?

அழுத்தம் வெப்பநிலை இரண்டையும் தொடர்பு படுத்தும்
இயற்பியல் விதி என்ன? 9ஆம் வகுப்பில் படித்த
இயற்பியல் பாடம் நினைவுக்கு வருகிறதா?
பாயில் விதி மற்றும் சார்லஸ் விதி (Boyle's law and Charles' law
பற்றிப் படித்ததை நினைவுகூருங்கள். Ideal Gas equation எனப்படும்
PV = nRT என்பதையும் நினைவுகூருங்கள்.

விமானங்கள் பறக்கும் உயரத்தை கிலோமீட்டரில்
கணக்கிடுவோம்.
35,000 அடி என்பது 10.7 கிமீ.
40,000 அடி என்பது 12 கிமீ.
50,000 அடி என்பது 15 கிமீ.
பொதுவாக விமானங்கள் 10 கிமீ முதல் 12 கிமீ
வரையிலான உயரத்தில் பறக்கும்.

இந்த இடத்தில் பூமியின் வளிமண்டலம் (atmosphere) பற்றிய
புரிதல் அவசியம். பூமியின் வளிமண்டலம் அடுக்கடுக்காக
இருக்கிறது. இது பூமியின் மீது போர்த்தப்பட்ட ஒரு கனத்த
கம்பளிப் போர்வையைப் போல பூமியைப் பாதுகாக்கிறது.

வளிமண்டலத்தில் 78 சதம் நைட்ரஜன் மற்றும் 21 சதம்
ஆக்சிஜன் ஆக இவ்விரண்டும் சேர்ந்து மொத்தம் 99 சதம்.
மீதி 1 சதத்தில் பெரும்பகுதி ஆர்கான் என்னும் வாயு.

வளிமண்டலம் 5 அடுக்குகளாக உள்ளது. வளிமண்டலத்தின்
மொத்த நிறையில் ஏறத்தாழ முக்கால் பகுதி முதல் அடுக்கான
troposphere என்ற அடுக்கில் உள்ளது. இந்த அடுக்கு தொடுவானம்
முதல் 12 கிமீ உயரம் வரை பரவி உள்ளது. விமானங்கள்
இந்த அடுக்கில்தான் பறக்கின்றன.

வெளி (space) என்பது பொதுவான பெயர். outer space என்றும்
deep space என்றும் வெளியைப் பிரித்துக் கொள்கிறோம்.
வளிமண்டலத்தையும் விண்வெளியையும் கார்மன் கோடு
(Karman line) என்ற கற்பனைக்கோடு பிரிக்கிறது.இது
100 கிமீ உயரத்தில் வரையப் பட்டுள்ளது.  



சரி, இப்போது விண்வெளிக்  குப்பைக்கு (space debris) வருவோம்.
Every activity in space generates debris.    


  
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக