செவ்வாய், 26 மார்ச், 2019

பிற்போக்குக் கருத்தை வெளியிட்ட
போலிப்பெண்ணியவாதி மருத்துவர் ஷாலினி!
ஆங்கிலம் தெரியாத முட்டாள்கள் என்று
தமிழர்களைச் சாடிய ஷாலினியே,
ஆங்கிலப் புலமைக்கான போட்டிக்கு வரத் தயாரா?
------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------
திராவிட இயக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் திருமதி/செல்வி
ஷாலினி அண்மையில் ஒரு முகநூல் பதிவை
எழுதி இருந்தார். உண்மையில் அது ஒரு பகிரப்பட்ட
பதிவு.

பிரபல பிளாக் மெயிலர் சவுக்கு சங்கர் என்பவரின்
பதிவைப் பகிர்ந்திருந்த திருமதி/செல்வி ஷாலினி
அதில் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு வாசகம்
அவருக்குப் பெருஞ்சிக்கலை ஏற்படுத்தி விட்டது.

"தேன் ஒழுகப் பேசும் ஆண்களிடம் பெண்கள் வீழ்ந்து
விடுகிறார்கள் என்பதே மானுடத்தின் துயரம்".
இதுதான் அவ்வாசகத்தின் பொருள்.
மூல ஆங்கில வாசகம் இதுதான்:
Women falling for the SweetTalkingMale is the tragedy of Humankind!!   

இந்த வாசகத்துடன் சீமானின் நாம் தமிழர் கட்சியின்
20 பெண் வேட்பாளர்களின் படங்களும் வெளியிடப்
பட்டிருந்தன. சீமானின் ஏமாற்று வேலைக்கு இந்தப்
பெண்கள் பலியாகி விட்டார்கள் என்பதே ஷாலினி
உணர்த்தும் பொருள்.

ஷாலினியின் இந்தக் கருத்து அடிமுட்டாள் தனமானது.
கடைந்தெடுத்த பிற்போக்குத் தனமானது.
ஷாலினி ஒரு போலிப் பெண்ணியவாதி என்பதை
அவரே தமது வாசகம் மூலம் நிரூபித்து இருக்கிறார்.

புழுவினும் இழிந்த ஷாலினியின் இந்தப் பிற்போக்குக்
கருத்து சமூகத்தின் கண்டனத்தைச் சம்பாதித்தது.
எதிர்ப்பு வலுத்தது.

டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியினர்
மட்டுமே ஷாலினியின் பிற்போக்குக் கருத்தை
வரவேற்றனர். நைச்சியமாகப் பேசும் ஆண்களிடம்
பெண்கள் ஏமாந்து நாடகக் காதல் வலையில் சிக்கி
விடுகின்றனர் என்ற பாட்டாளி மக்களின் கட்சியின்
கருத்தைத்தான் ஷாலினி வெளிப்படுத்தி இருக்கிறார்.

தனது போலிப் பெண்ணியம் அம்பலம் ஆகி விட்டதால்
அதிர்ச்சி அடைந்த புழுவினும் இழிந்த ஷாலினி
மன்னிப்புக் கேட்கவோ தமது கருத்தைத் திரும்பப்
பெறவோ தயாராக இல்லை.

மாறாக, தான் சரியாகத்தான் எழுதி இருப்பதாகவும்
ஆங்கிலம் தெரியாத முட்டாள்கள் தான் எழுதிய
வாசகத்தின் பொருளைப் புரிந்து கொள்ள முடியாமல்
தன்னை எதிர்ப்பதாகவும் ஒரு பதிவை எழுதினார்.
அவர் எழுதிய பதிவு வருமாறு:-
" ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருக்கும்
உதாரணம்: falling for என்றால் காதலிப்பது மட்டுமல்ல
[fall for something] to believe that a trick or a joke is true
எக: How could you fall for such an obvious trick?" 

கடைந்தெடுத்த கயமைத்தனத்துடன் எழுதப்பட்ட
இந்தப் பதிவை மொத்தத் தமிழ்ச் சமூகமும்
வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒரு தற்குறி இயக்கத்தைச் சேர்ந்தவருக்கு இவ்வளவு
திமிர் இருக்கக் கூடாது. இதைத் தட்டிக் கேட்காமல்
விட்டால், என்ன ஆகும்? மு க அழகிரியும் மு க ஸ்டாலினுமே
ஆங்கிலப் புலமையில் தமிழ் நாட்டில் தலைசிறந்து
விளங்குபவர்கள் என்று நாளையே இந்தப் புழுவினும்
இழிந்த பிற்போக்குக் கசடுகள் மக்களை நம்ப வைக்கும்.

எனவே நியூட்டன் அறிவியல் மன்றம் திருமதி/ செல்வி
ஷாலினியை ஆங்கிலப் புலமைக்கான ஒரு போட்டிக்கு
அழைக்கிறது. இந்தப் போட்டியில் நியூட்டன் அறிவியல்
மன்றத்தின் தலைவர் தோழர் பி இளங்கோ சுப்பிரமணியன்
அவர்கள் பங்கேற்று திருமதி/செல்வி ஷாலினியுடன்
நேரடியாகப் போட்டி இடுவார்.

தகுதி வாய்ந்த நடுவர்களைக் கொண்டு தக்கோர்
இப்போட்டியை நடத்த முன்வர வேண்டும். இல்லையேல்
நியூட்டன் அறிவியல் மன்றமே இப்போட்டியை .நடத்தும்.
இப்போட்டியில் எவர் வெல்கிறார் என்று தமிழ்ச்
சமூகம் அறியட்டும்.

திருமதி/செல்வி ஷாலினிக்கு தமது ஆங்கிலப் புலமையில்
நம்பிக்கை இருந்தால் அவர் என்னுடன் போட்டிக்கு வரட்டும்.
நான் தயார்.

NB: This post may sound like a heresy but the anti feminist character
of this strumpet is to be exposed.
*********************************************************
பின்குறிப்பு: இந்தியப் புரட்சிக்குத் தலைமையேற்று
வழிநடத்திக் கொண்டிருந்த மார்க்சிய லெனினியக்
கட்சியின் PC மற்றும் CC அமைப்புகளின் தேவைக்கேற்ற
இருவழி மொழிபெயர்ப்புப் பணியில் திறன்பெற்ற ஒருவர்
இழிந்தவொரு குட்டி முதலாளித்துவ scumஉடன்
பொருதுவது துரதிருஷ்டவசமானது. எனினும் இச்சூழலில்
தவிர்க்க இயலாதது.
*****************************************************
 

 


        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக