வெள்ளி, 1 மார்ச், 2019

குட்டி முதலாளித்துவம்!
-------------------------------------
சொல்லப்பட்ட கருத்துக்களை மறுத்து
தர்க்கபூர்வமாக எதையும் முன்வைக்கவில்லை
தங்களின் பின்னூட்டம். வெறும் வசையை மட்டும்
கூறியுள்ளீர்கள். இதுதான் typical குட்டி முதலாளித்துவச்
செய்கை. வலுவான தர்க்கத்துடன் மறுப்பை முன்வைத்தால்
அது பரிசீலிக்கப்படும்.

குட்டி முதலாளித்துவத்தை எப்படி அணுக வேண்டுமோ
அப்படி அணுகுகிறது எனது கட்டுரை. தவறினால்,
குட்டி முதலாளித்துவம் தன்னுடைய அபத்தத்தை
மிகுந்த செருக்குடன் முன்வைக்கும்.

academic bankruptcy என்ற பதம் சிரிப்பூட்டுகிறது. இந்தக் கட்டுரை
academic பற்றியதல்ல. analytical bankruptcy என்பதோடு
நிறுத்திக் கொண்டிருந்தால், அதை ஒரு விமர்சனம்
என்ற அளவுக்கேனும் கருதலாம். இங்கு academic analysisக்கு
இடமே இல்லை. இது போர் குறித்த ஒரு அரசியல் கட்டுரை.
இது போரின் அரசியல் பற்றிப் பேசுகிறது. இதில் எங்கிருந்து
academic வருகிறது?

1) இப்போது போர் தேவையில்லை என்று எமது கட்டுரை
அடித்துக் கூறுகிறது. இந்த analysis தப்பு என்றால்,
இப்போது போர் செய்ய வேண்டும் என்பது தங்களின்
கருத்தாக அமைகிறது. அப்படியானால் அதை
நியாயப் படுத்தும் உங்களின் தர்க்கத்தை முன்வைக்கவும்.
அதைப் பரிசீலிப்போம்.

2) சமாதானம் என்பதைப் போர் மூலம்தான் பெற முடியும்
என்பது மார்க்சியக் கண்ணோட்டம். இதை மறுத்தவர் குருசேவ்.
அமைதி வழியில் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியும்
என்ற கொள்கையை குருசேவ் முன்வைத்தார். குருசேவின்
கொள்கை என்ன கதி ஆனது?

3) எனது கட்டுரையை எதிர்ப்பவர்கள் இரண்டு விஷயங்களை
எதிர்க்கிறார்கள். அ) இப்போது போர் தேவையில்லை என்பதை
எதிர்க்கிறார்கள். ஆ) அமைதி வழியில் சோசலிசம் என்ற
குருசேவை ஆதரிக்கிறார்கள். அவ்வளவுதான்.

அருள்கூர்ந்து வசைகளை வசவுகளை அவதூறுகளைத்
தவிர்க்கவும். அவற்றை நான் ஒருபோதும் சகிப்பதில்லை.
வசைகளை முன்வைக்கும் எவரும் தண்டிக்கப் படுவார்கள்.




I once again warn the petty bourgeois dogs not to come and bark here.
This is not the place meant for the unintelligent petty bourgeois dwarfs to express
their stupidity. If any petty bourgeois simpleton dares to cross his limits, his
skin will be peeled off.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக