சனி, 30 மார்ச், 2019

மானுட சமூகத்தின் நீண்ட நெடிய வரலாற்றில்
ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் (1950 முதல் இன்று வரை
மற்றும் நாளையும் சிறிது காலத்திற்கு) உலகப்போரைத்
தடுத்து நிற்பது அணுகுண்டுகளே. இவை ஒரு அச்சுறுத்தியாக
(deterrent) செயல்படுகின்றன.

நவீன ராணுவப் போர்த்தந்திர சாஸ்திரத்தில் (modern military strategy)
இது தெளிவாக விளக்கப்பட்டு உள்ளது (The role of nuclear boms as a
deterrent). MAD policy என்று ஒரு கொள்கை உள்ளது.
இதை அணுஆயுத நாடுகள் கடைப்பிடிக்கின்றன.
MAD = Mutually Assured Destruction என்பதே MAD policy ஆகும்.
பரஸ்பரம் சர்வ நாசம் என்பது இதன் பொருள்.

எனவேதான் அணுஆயுத நாடுகள் அனைத்தும் Nash Equilibrium
என்னும் சமநிலையைக் கடைப்பிடிக்கின்றன. இங்கு நாடுகள்
என்பது state actorsஐ மட்டும் அதாவது இறையாண்மை
உடைய அரசுகளை மட்டுமே குறிக்கும்.

பயங்கரவாதிகள், உதாரணமாக ISIS போன்றோர்
Non state actors என்ற வகைமையில் வருவர். இவர்களிடம்
அணுஆயுதங்கள் சிக்கி விடக்கூடாது என்பதே உலக
நாடுகளின் கவலை.
---------------------------------------------------------------------------------------
2019 நாடாளுமன்றத் தேர்தல்!
வெற்றி யாருக்கு? கருத்துக் கணிப்பு!
20 தொகுதிகளின் கருத்துக் கணிப்பு!
அன்புமணி ஜெயிப்பாரா? ஓ பி எஸ் மகன் என்ன ஆவார்?
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------
எமது கருத்துக் கணிப்பின் முதல் பகுதியாக
40 தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு மட்டும்
கருத்துக் கணிப்பு வெளியிடப் படுகிறது.
இந்த 20 தொகுதிகளுக்கு மட்டுமே களத்தில் இருந்து
எமக்கு உரிய தரவுகள் வந்துள்ளன.

இது முதல்நிலை கருத்துக்கணிப்பு ஆகும்.
எனவே இடையில் நிகழும் மாற்றங்கள் மற்றும்
இறுதி நேர மாற்றங்களுக்கு உட்பட்டது.

எமது கருத்துக் கணிப்புகளின்
நம்பகத் தன்மை (confidence level)= 95.2 சதம் ஆகும்.
சரித்தன்மை மற்றும் துல்லியம் = 97.4 சதம் ஆகும்.
quantum uncertainty = 2.6 சதம் ஆகும்.

இனி 20 தொகுதிகளின் கணிப்பைப் பார்க்கலாம்.

1) தஞ்சாவூர் ... பழனி மாணிக்கம் திமுக வெற்றி.
2) திருச்சி ..........திருநாவுக்கரசர் காங்கிரஸ் வெற்றி
3) தருமபுரி .......டாக்டர் அன்புமணி பாமக வெற்றி.
4) தேனி.............. தங்க தமிழ்ச்செல்வன் அமமுக வெற்றி.
5) புதுச்சேரி.......வைத்தியலிங்கம் காங்கிரஸ் வெற்றி.

6) திருநெல்வேலி மனோஜ் பாண்டியன் அதிமுக வெற்றி.
7) திண்டுக்கல்  பி வேலுச்சாமி திமுக வெற்றி.
8) விருதுநகர் மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் வெற்றி.
9) விழுப்புரம் வடிவேல் ராவணன் பாமக வெற்றி.
10) கரூர் தம்பி துரை அதிமுக வெற்றி.

11) மத்திய சென்னை தயாநிதி மாறன் திமுக வெற்றி.
12) வடசென்னை கலாநிதி வீராச்சாமி திமுக வெற்றி.
13) தென்சென்னை அதிமுக வெற்றி.
14) கோயம்புத்தூர் சி பி ராதாகிருஷ்ணன் பாஜக வெற்றி.
15)  

கருத்துக்கணிப்பு மேற்கொண்ட முறை:
--------------------------------------------------------------
மரபார்ந்த கருத்துக்கணிப்புக் கோட்பாடுகளின்
(psephological principles) அடிப்படையில் இக்கணிப்பு
மேற்கொள்ளப் படவில்லை. மாறாக, quantum predictions
என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இக்கணிப்பு
மேற்கொள்ளப் படுகிறது. quantum predictions என்ற
கோட்பாடு நியூட்டன் அறிவியல் மன்றம் சொந்தமாக
உருவாக்கியுள்ள கோட்பாடாகும்.

மனித சிந்தனையை ஒரு cognitive variableஆக எடுத்துக்
கொண்டு, வாக்களிப்பது என்னும் decision makingஐ
ஒரு cognitive processஆக எடுத்துக் கொண்டு, இவை
அனைத்தும் quantum theoryக்கும், அதன் inherentஆக உள்ள
quantum uncertaintyக்கும் உட்பட்டவை என்ற அடிப்படையை
வைத்துக் கொண்டு, physical eventsஐ இவற்றுடன் பொருத்திப்
பார்த்து இந்தக் கணிப்பு மேற்கொள்ளப் படுகிறது.

மனிதகுல வரலாற்றிலேயே quantum predictions என்ற
கோட்பாட்டின் அடிப்படையில் கருத்துக் கணிப்பை
மேற்கொள்ளுவது நியூட்டன் அறிவியல் மன்றமே.    

அடுத்தடுத்த பட்டியல்களை களத்தில் இருந்து
தரவுகள் வெளியானவுடன் காணலாம்.
***************************************************

விண்வெளியில் குப்பை சேரவில்லை!
----------------------------------------------------------
இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது;
News 18ல் ஊடகச் செய்தியாளர்கள் அறிவியல்
அறியாதவர்கள். தாழ்நிலை புவிச் சுற்றுப்பாதையில்
வெறும் 274 கிமீ உயரத்தில் (altitude) நடைபெற்றதுதான்
இந்த நிகழ்வு.

விண்வெளியில் ஒரு நிலையத்தை நிறுவி இருக்கிறோம்.
1998ல் நிறுவப்பட்ட இந்த நிலையம் (International Space Station)
300 கிமீ உயரத்தில் உள்ள ஒரு சுற்றுப்பாதையில் சுற்றி
வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான விண்வெளிச்
சோதனைகள் நிகழ்த்தப் படுகின்றன. இதனால்
ஏற்படாத குப்பைகள் ஒரு kinetic kill நிகழ்வால்
ஏற்படுகிறது என்பது அறிவீனம்.

274 கிமீ உயரத்தில் உண்டாக்கப்படும் குப்பைகள்
விண்வெளியில் மிதக்கக் கூடியவை அல்ல. அவை
பூமிக்கு வந்து சேர்ந்து விடும். அல்லது வரும் வழியிலேயே
எரிந்து சாம்பலாகி விடும். எனவே விண்வெளியைக்
குப்பை ஆக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
பூமியின் ஈர்ப்புவிசை 274 கிமீ உயரத்தில் மட்டுமல்ல.
அதற்கு மேலும் ஆட்சி செலுத்துகிறது. எனவே 274கிமீ
உயரத்தில் உண்டாக்கப்பட்ட குப்பை விண்வெளியில்
மிதந்து கொண்டு இருக்க முடியாது.

அருள்கூர்ந்து அறிவியலுக்கு எதிரான கருத்துக்களை
வெளியிடும் செய்திகளை புறக்கணிக்குமாறு
வேண்டுகிறோம்.

தோழமையுள்ள,
நியூட்டன் அறிவியல் மன்றம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக