செவ்வாய், 26 மார்ச், 2019

முகிலனின் தலைமறைவுக்கும்
அவரின் அகத்துறை நடத்தைக்கும் இடையிலான
CAUSE AND EFFECT relationship பற்றி!
 அவிழும் மர்மங்கள்!
-------------------------------------------------------------
கலையியல் நிறைஞர் புலவர்
வீரை பி இளஞ்சேட்சென்னி
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------
ஒதியமரத் தின்கீழே முத்து மாமா கோழி
ஒன்றையொன்று பார்ப்பதென்னே முத்துமாமா
எதுசெய்ய நினைத்தனவோ முத்துமாமா-நாமும்
அதுசெய்ய அட்டியென்ன முத்துமாமா.

முதல்மனைவி நானிருக்க முத்துமாமா
அந்த மூளியை நீ எண்ணலாமா முத்துமாமா?
...........................................................................................
----------- பாவேந்தர் பாரதிதாசன்.

முக்கோணக் காதல் கதைகள் இலக்கிய உலகத்திற்குப்
புதியன அல்ல. நாவல்களிலும் திரைப்படங்களிலும்
இக்கருப்பொருள் பற்றி நிறையவே பேசப்பட்டுள்ளது
என்பதை அறிவார்ந்த வாசகர்கள் அறிவார்கள்.

சமகால இந்திய சமூகத்தின் பாலியல் ஒழுக்கம்
ஒருவனுக்கு ஒருத்தி (one to one concept) என்ற கோட்பாட்டை
அடித்தளமாகக் கொண்டது. நமது நீதி நூல்களும்
இதையே வலியுறுத்துகின்றன.

பிறனில் விழையாமை என்று ஓர் அதிகாரத்தையே
எழுதி உள்ளார் வள்ளுவர்.
(பிறனில் விழையாமை = பிறன் மனைவியை விரும்பாமை)
கடவுள் ராமன் ஏகபத்தினி விரதனாகச் சித்தரிக்கப்
படுகிறார்.

"ஒக்க மாட்ட ஒக்க பாணமு
ஒக்க பத்னீ விரதுடே மனஸா"
என்கிற பிரபலமான தியாகராஜ கீர்த்தனையை
இசையறிவு உடையோர் அறிந்திருக்கக் கூடும்.   

புத்தரும் இதே ஒழுக்கத்தையே தீவிரமாக வலியுறுத்துகிறார்.
பிறன் மனைவியை விரும்புதல் " பிழையுறு காமம்"
என்கிறார் அஷ்டாங்க மார்க்கத்தில் புத்தர்.

கிறித்துவத்திலும் இதே ஒழுக்கம் வலியுறுத்தப்
படுகிறது. மோசேயின் பத்துக் கட்டளைகளில்
ஆறாவது கட்டளை " Thou shalt commit adultery" என்பதாகும்.
இதற்கும் தமிழில் பொருள் கூற வேண்டியிருப்பது
எரிச்சலை ஏற்படுத்துகிறது. யாராவது பாதிரியாரிடம்
சென்று விளக்கம் பெறவும்.

சட்டமும் இதே கோட்பாட்டின் (one to one concept)
அடிப்படையில்தான் எழுதப் பட்டுள்ளது. பலதார மணம்,
இருதார மணம் ஆகியவற்றை சட்டம் தடை செய்துள்ளது.

திருமண பந்தத்திற்கு அப்பாற்பட்ட உடலுறவு (extra marital sex)
adultery என்று வரையறுக்கப்பட்டு இந்திய தண்டனைச்
சட்டத்தால் தடுக்கப் பட்டுள்ளது. (பார்க்க: IPC பிரிவு 497).
அண்மையில் செப்டம்பர் 2018ல் உச்சநீதிமன்றத்தின்
ஐந்து பேர் கொண்ட அமர்வு மேற்கூறிய பிரிவு 497ஐ
ரத்து செய்து தீர்ப்பளித்தது.

திராவிடத் தற்குறிக்கும் புரியும்படி சொல்ல
வேண்டுமென்றால், அடுத்தவன் பொண்டாட்டியோடு
படுத்தால் (இருவரின் சம்மதத்துடன்), அது சட்டப்படி
குற்றமல்ல. இந்த உறவு  consensual sex என்று அழைக்கப்
படுகிறது. சம்மதம் இல்லாமல் உறவு கொண்டால்,
அது rape என்ற வகையில் வரும். வாசகர்கள் adultery,
consensual sex, rape ஆகியவை பற்றிய சட்ட அறிவை
உரிய நூல்களை படித்துப் பெறவும்.

சொல்ல வந்த விஷயத்தை எடுத்த எடுப்பில் நேரடியாகச்
சொல்ல இயலவில்லை. தமிழ் வாசகச் சூழலின்
புரிதல் மட்டத்தைக் கணக்கில் எடுக்காமல் எதையும்
கூற முனைவது புரிதலின்மையை ஏற்படுத்தக் கூடும்.

இந்தச் சூழலின் பின்னணியில் முகிலன் ஆட்பட்டுள்ள
முக்கோண விவகாரத்தை அணுக வேண்டும்.
முதலிலேயே ஒன்றை வலியுறுத்த விரும்புகிறோம்.
முகிலனின் ஒழுக்கமோ பாலியல் நடத்தையோ
இக்கட்டுரையின் பேசுபொருள் அல்ல. தமிழ்ச் சமூகமும்
அது பற்றிக் கிஞ்சித்தும் அக்கறை கொள்ளவில்லை.

முகிலன் ஏகபத்தினி விரதனாக இருக்கிறாரா அல்லது
உமனைசராக இருக்கிறாரா என்பது குறித்து இங்கு
யாருக்கும் அக்கறை இல்லை. முகிலனுக்கு
நெருக்கமானவர்கள், அவரின் நலம் விரும்பிகள்,
சுற்றத்தார், உறவினர் ஆகியோருக்கு முகிலனின்
நடத்தை குறித்து அக்கறை இருக்கக் கூடும். அல்லது
இல்லாமலும் இருக்கக் கூடும். எமக்கு அறவே இல்லை.
இதுதான் உண்மை.

எனினும் முகிலனின் ஒழுக்கம் குறித்து இன்று சமூகத்தில்
பேசப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் ஒழுக்கம்
குறித்த அக்கறையோ அல்லது முகிலனின் நலம்
விரும்புதலோ அல்ல. பின் ஏன் முகிலனின் பாலியல்
விவகாரங்கள் சமூகத்தில் அலசப் படுகின்றன?

முகிலன் தலைமறைவாக இருப்பதற்கும் அவரின்
பாலியல் நடத்தைக்கும் இடையிலான cause and effect
உறவு காரணமாகவே முகிலனின் பாலியல்
ஒழுக்க மீறல்கள் சமூகத்தின் அக்கறைக்கு
உரியதாகி விட்டன.

நடிகர் கமல் ஹாசன் நடித்து வெளியான ஒரு திரைப்படம்
நாம் விவாதிக்கும் விஷயத்தைக் கருப்பொருளாகக்
கொண்டது. "பாபநாசம்" என்ற அத்திரைப்படத்தில்
ஒரு உயர் போலீஸ் அதிகாரியின் இளவயது மகன்
காணாமல் போய்விடுவான். பாலியல் பிறழ்வால்
பிஞ்சிலேயே பழுத்துவிட்ட அந்த இளைஞன் ஒரு
இளம்பெண்ணிடம் அத்து மீறும்போது அடித்துக்
கொல்லப் படுவான். போலீஸ் நிலையத்தின்
புதிய கட்டிடத்தின் அடியிலேயே அவன் கொன்று புதைக்கப்
போட்டிருப்பான். படம் முடியும் வரை அவன் என்ன ஆனான்
என்றோ எங்கு புதைக்கப் பட்டான் என்றோ யாருக்கும்
தெரியாது. இப்படியாக பாபநாசம் படத்தின் கதை போகும்.

Truth is stranger than fiction! ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின்
கொலை குறித்த மர்மங்கள் ஏன் இன்னும் மர்மங்களாகவே
இருக்கின்றன? செல்வாக்கு மிக்க பாதிக்கப்பட்ட
 அந்தக் குடும்பம் கூட ஏன் இன்னும் அமைதி காக்கிறது?
உண்மை அனைவரும் அறிந்ததே! உண்மைகள் அதிகார
பூர்வமாக வெளியிடப் படவில்லை. அவ்வளவே.
மேற்படி பிரமுகரின் கதை ஒரு திரைப்படமாகவே
எடுக்கப்பட்டது. இளைஞர்களும் ஸ்ரீராமஜெயம் எழுதும்
இளம்பெண்களும் அப்படத்தைப் பார்த்திருக்கக் கூடும்.

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடியுறைந் தற்று.

எனவே முகிலனின் தலைமறைவுக்கும் அவரின்
பாலியல் நடத்தைப் பிறழ்வுக்கும் இடையில்
ஒரு cause and effect relation ship உள்ளது என்று நியூட்டன்
அறிவியல் மன்றம் கூறுகிறது. இதற்கான
நிகழ்தகவு 0.8 என்றும் நியூட்டன் அறிவியல் மன்றம்
quantify செய்துள்ளது. இதை எவரும் challenge
செய்யலாம். அவ்வாறு challenge செய்யப்படும் பட்சத்தில்
எமது நிகழ்தகவுக் கணக்கீடு சரியானதே என்று நியூட்டன்
அறிவியல் மன்றம் நிரூபிக்கத் தயாராக உள்ளது.

நிகழ்தகவுக் கோட்பாட்டின்படி, நிகழ்தகவானது
பூஜ்யத்துக்கும் 1க்கும் இடையில் உள்ளது. The probability
of any event always lies between 0 and 1 (both inclusive). The maximum
probability =1 and the minimum probability = 0.

எனவே ஏனைய வாய்ப்புகளுக்கான நிகழ்தகவு
0.2 என்ற அளவில் இருக்கிறது என்பதையும் நியூட்டன்
அறிவியல் மன்றம் ஏற்கிறது.

சில குட்டி முதலாளித்துவ அன்பர்கள், "முதலில் முகிலன்
வரட்டும்; அவர் வந்த  பிறகு அவரின் பாலியல் பிறழ்வு
குறித்து விவாதிக்கலாம்" என்று ஒரு அபத்தத்தை
முன்வைக்கிறார்கள். This proposal is apparently intelligent
but actually foolish!

முகிலன் காணாமல் போனதற்கு அவரின் பாலியல்
பிறழ்வு காரணம் என்பதாலேயே அவரின் பாலியல்
நடத்தை குறித்து சமூகம் அக்கறை கொள்கிறது.
மற்றப்படி அவரின் பாலியல் பிறழ்வுகள் குறித்து
இச்சமூகத்திற்கு எவ்வித அக்கறையும் இல்லை.
அப்படி இருக்கையில் இச்சமூகம் முகிலன் வந்த பிறகு
அவரின் பாலியல் பிறழ்வு குறித்து விவாதிக்க வேண்டிய
தேவை என்ன?

காரல் மார்க்ஸ் ஓரிடத்தில் கூறுவார்:
"அரசன் பெண்பித்தனாக இருப்பதற்கும் அரசனின்
குதிரை லாயக்காரன் பெண்பித்தனாக இருப்பதற்கும்
வித்தியாசம் உண்டு" என்பார் மார்க்ஸ்.

அரசன் பெண்பித்தனாக இருந்தால், அதனால்
நாட்டுக்கோ மக்களுக்கோ பாதிப்பு ஏற்படும்.
ஆனால் அரசனின் குதிரைலாயக்காரன்
பெண்பித்தனாக இருந்தால் அதனால் அவன்
பொண்டாட்டிக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும். எனவே
குதிரை லாயக்காரனின் பெண்பித்து என்பது
சமூகத்தின் விவாதப் பொருளாக இருக்காது.
இங்கு முகிலன் ஒரு குதிரை லாயக்காரன்!

ஈட்டுபுகழ் நந்தி பாண நீ எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும் காட்டில் அழும்
பேயென்றாள் அன்னை பிறர் நரியென்றார் தோழி
நாயென்றாள் நீயென்றேன் நான்.
----------நந்திக் கலம்பகம்
(சந்தி பிரித்து எழுதப் பட்டுள்ளது)
*************************************************

         




  






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக