மிஷன் சக்தி மீது என்ன குறை காணலாம் என தேச விரோதிகள் சிலர் கேள்விகளை எழுப்புகிறார்கள், அதற்கு அடியேனின் விளக்கம்.
1) தாழ்வு நிலையில் சுற்றும் செயற்க்கை கோள்களை அழிப்பதில் என்ன பயன் ? ஜியோ ஸ்டேஷநரி எனப்படும் தொலை தூர செயற்க்கை கோள்களை அழிக்க இயலுமா ?
Low Earth Orbit எனப்படும் தாழ்வு நிலையில்தான் உளவு செயற்கைக்கோள்கள் செயல்படும், ஜியோ சாட்டிலைட்டுகள் அதிக சிக்னலை வெளிப்படுத்தும் தட்பவெப்ப மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்குதான் பயன்படுத்தப் படுகிறது. ஆகையால் "லோ எர்த் ஆர்பிட்" செயற்க்கைகோள்களை தாக்கி அழிப்பதுதான் இங்கு முக்கியம்.
2) ஏற்கனவே 5000 கிலோமீட்டர் செல்லும் அக்னி 5 ரக ஏவுகணை இருக்கையில் 380 கி.மீ சென்று தாக்குவதில் என்ன பெரிய சாதனை ?
லோ எர்த் ஆர்பிட் செயற்கைக்கோள்கள் மிக வேகமாக நகரக் கூடியவை. 380 கி.மீ உயரத்தில் கிட்டத்தட்ட 2000 கி.மீ பரப்பளவுக்கு மணிக்கு 25000 கிலோமீட்டர் வேகத்தில் நகரும். (ஆம் ஒரு ஃபைட்டர் ஜெட் கூட மணிக்கு 2000 கிலோமீட்டர் வேகத்தில்தான் செல்லும். உதாரணத்திற்கு "இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன்" எனப்படும் பன்னாட்டு விண்வெளி ஆய்வு மையம் 400 கி.மீ. உயரத்தில் மணிக்கு 28000 கி.மீ. வேகத்தில் செல்கிறது) அகண்ட வானத்தில் அசுர வேகத்தில் நகரும் ஒரு சிறு புள்ளியை சரியாக தாக்கி அழிப்பதற்கு மிகச்சிறந்த கனித அலாகிரதங்கள் தேவைப்படுகின்றன. மிக அதிக வேகம் தேவைப்படுகிறது. இது அசையாமல் நிற்கும் ஒரு இலக்கை அழிப்பது போல் இல்லை. மேலும் புவியீர்ப்பிற்கு எதிராக 380 கி..மீ. உயரத்தில் செல்வது என்பது குறுக்களவில் செல்லும் பல ஆயிரம் கிலோமீட்டருக்கு ஒப்பாகும்.
3) இதில் மோடிக்கு என்ன பெருமை ?
2007 ல் சீனா "ஏண்ட் சாட்டிலைட்' மிசைலை ஏவிய போது உலக நாடுகள் அனைத்தும் கண்டித்தன. ஆகையால் இந்த முயற்சியை எடுக்க மோடி அவர்களை போன்ற ஆளுமை கொண்ட தலைவர்களால் மட்டுமே இயலும். விஞ்ஞானிகளின் இந்த முயற்சிக்கு முழு ஒப்புதலை தந்து, ஊக்குவித்து இதை செயல்படுத்தி உள்ளார் மோடி அவர்கள். ஏற்கனவே இந்த தொழில்நுட்பத்தில் களமிறங்க விஞ்ஞானிகள் ஒப்புதல் கேட்ட போது ஒரு தெளிவில்லாமல் இதை மறுத்து விட்டது காங்கிரஸ் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
4) இதனால் என்ன பயன் ?
இனி வரும் காலங்களில் எல்லாமே மின்னணு போர்கள்தான். போர்களில் செயற்கை கோள்களின் பங்கு மிக முக்கியமானது. நம் இலக்குகளை துல்லியமாக அடையாளம் காணக்கூடிய எதிரி நாட்டு உளவு செயற்கைகோள்கள் நமக்கு மிக மிக அபாயகரமானவை. அவற்றை அவசியப்பட்டால் நம்மால் அழிக்க இயலும் என்பது மிகப்பெரிய தொழில்நுட்பத் திறன். இதை வார்த்தைகளால் விளக்க இயலாது. இதன் மூலம் 130 கோடி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர் நம் விஞ்ஞானிகள். அவர்கள் பாதம் பணிந்து நாம் மேலும் முன்னேறுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக