வியாழன், 21 மார்ச், 2019

ஒரு தொகுதியில் 384 பேர் போட்டியிட்டாலும்
மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் மூலமே
தேர்தல் நடக்கும்!
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
1) 2019 நாடாளுமன்றத் தேர்தலில், நாடு முழுவதும் உள்ள
543 தொகுதிகளிலும் EVM மூலமாகத் தேர்தல் நடைபெற
உள்ளது.

2) EVMகள் மூன்று வகையானவை. அவை: M-1, M-2, M-3 ஆகியவை. 
2014 தேர்தல் வரை M-1 மற்றும் M-2 வகை எந்திரங்கள்
பயன்படுத்தப் பட்டன. ஆனால் 2019 தேர்தலில் M-3 வகை
எந்திரங்கள் மூலம் தேர்தல் நடக்கும்.

3) இந்திய நாடு முழுவதும், நாடாளுமன்றத் தேர்தலில்
சுமார் 10.6 லட்சம் வாக்குச் சாவடிகள் (Polling Booths)
அமைக்கப் பட உள்ளன. இவற்றில் பயன்படுத்திட
பின்வரும் EVM யூனிட்டுகள் தயாராக உள்ளன.

6) வாக்களிக்கும் பகுதி (Ballot Unit) = 22.3 லட்சம் (M-3 வகை)
கட்டுப்பாடு யூனிட் (Conttrol Unit) = 16.3 லட்சம் (M-3 வகை)
VVPAT = 17.3 லட்சம் (M-3 வகை)
என்ற எண்ணிக்கையில் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம்
EVMகள் உள்ளன. இவை அனைத்தும் M-3 வகை
எந்திரங்கள் ஆகும்.

7) M-1 மற்றும் M-2 வகை எந்திரங்கள் 2019 நாடாளுமன்ற மற்றும்
சட்டமன்றத் தேர்தல் பயன்பாட்டில் இல்லை. அவை
தேர்தல் ஆணையத்தின் பரணில் அடுக்கப் பட்டுள்ளன.

8) M-3 வகை எந்திரங்களில், ஒரு தொகுதியில் 384 வேட்பாளர்
வரை நிற்கலாம். ஒரு பாலட் யூனிட்டில் 16 வேட்பாளர்கள்
வரை இடம் பெறுவர். 24 பாலட் யூனிட்களை ஒன்றிணைப்பதன்
மூலம் 384 வேட்பாளர்கள் வரை (நோட்டா உட்பட )
(24 x 16 = 384) ஒரு தொகுதியில் உள்ளடக்கலாம்.

9) பழைய M-1 மற்றும் M-2 வகை எந்திரங்களில் ஒரு
தொகுதியில் EVM பயன்படுத்தப்பட வேண்டும் என்றால்,
வேட்பாளர்களின் எண்ணிக்கை 64 அல்லது 64க்குள்
இருக்க வேண்டும். அனால் இந்த M-3 வகை எந்திரங்களில்
வேட்பாளர்களின் எண்ணிக்கை 384 வரை இருந்தாலும் ,
EVM மூலமாகவே தேர்தல் நடத்த முடியும்.

10) அறிவியல் ஒளி பெப்ரவரி 2019 சிறப்பு மலரில்
வெளியாகி உள்ள நியூட்டன் அறிவியல் மன்றம்
எழுதியுள்ள மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில்
மோசடி செய்ய இயலுமா என்ற கட்டுரையை
ஒவ்வொருவரும் படிக்க வேண்டும்.
***********************************************

11) MP தேர்தலுக்கான டெபாசிட் தொகை எவ்வளவு?
பொதுத்தொகுதியாக இருந்தால் ரூ 25000. தனித்
தொகுதியாக இருந்தால் ரூ 12500.

12) 385 வேட்பாளர்களை நிறுத்தினால்தான் வாக்குச்சீட்டு
முறைக்கு மீண்டும் போக முடியும். அப்படியானால்,
385 வேட்பாளர்களுக்கும் டெபாசிட் தொகையாக
எவ்வளவு செலுத்த வேண்டி இருக்கும்?
ரூ 25000 x 385 =  ரூ 9,625,000 அதாவது ரூ 96 லட்சம்
வேண்டும். அதாவது ரூ 1 கோடி வேண்டும்.
***************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக