புதன், 13 மார்ச், 2019

1959ல் கியூபாவில் காஸ்ட்ரோ
தனிச்சொத்துரிமையை ஒழித்தார்.
பெப்ரவரி 2019ல் தனிச்சொத்துரிமையை
அங்கீகரிக்கும் சட்டத்திருத்தம் வருகி றது.   ஏற்பு 

இது குறித்த விளக்கக் கட்டுரை பின்னர் வெளியாகும்.

ஒரு வாக்கெடுப்பு நடத்தி அரசமைப்புச் சட்டத் திருத்தம்
ஏற்கப்பட்டு விட்டது.

ஆச்சரியம்தான்! 1959ல் தனிச்சொத்துரிமை ஒழிப்பு!
தன் குடும்பத்தின் சொத்துக்களையும் அரசுடைமை
ஆக்கினார் காஸ்ட்ரோ. காஸ்ட்ரோவின் தாயார்
இதைக் கடுமையாக எதிர்த்தார். என்றாலும் தாயை மீறி
தன் சொந்தக் குடும்பத்தின் சொத்துக்களை அரசுடைமை
ஆக்கினார் காஸ்ட்ரோ.

இன்று 2019. இடையில் 60 ஆண்டுகள் மட்டுமே. இந்த
60 ஆண்டுகளில் கியூபாவில் தலைகீழ் மாற்றம்.
தனிச்சொத்துரிமையை அங்கீகரித்த பின்னர்
அது 100 சதம் மார்க்சியத்துக்கு எதிரானது.


2019 தேர்தலில் 33 சதம் பெண் வேட்பாளர்களை
நிறுத்தும் நவீன் பட்நாயக்!
41 சதம் பெண் வேட்பாளர்களை நிறுத்தும் மமதா!
இருவரின் காலிலும் விழுந்து வணங்குகிறேன்!  கு
 


இல்லை, இதுதான் பாசிசம்! தனிச்சொத்துரிமையை
ஒழித்தது நல்ல செயல். அது மார்க்சியம்.
இன்று ஒழிக்கப்பட்ட தனிச்சொத்துரிமையை மீட்டு எடுத்து
அதற்கு அங்கீகாரம் வழங்குவது தீய செயல். இதுதான்
பாசிசம்.

செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் உங்களுக்கு
வித்தியாசம் தெரியவில்லை. அதை நீங்கள்
அறிந்துகொள்ள நீங்கள் வணங்கும் கடவுள்
உதவட்டும். God bless you. 


தமிழ்நாட்டில் இது என்றாவது நடக்குமா?
இங்குள்ள அரசியல்வாதிகள் போலிப்பயல்கள்!


மிஸ்டர் வசந்தன், அருள்கூர்ந்து தமிழில் எழுதவும்.
இங்கு பலருக்கும் ஆங்கிலம் தெரியாது.

மனிதர்கள் வெவ்வேறான திறமையும் வெவ்வேறான
ஆற்றலும் கொண்டவர்கள் என்பதை மார்க்சியம்
அறிந்திருக்கிறது. இங்கு அது பேசுபொருள் அல்ல.
இங்கு தனிச்சொத்துரிமை கூடாது என்பதுதான்
பேசுபொருள். தனிச்சொத்துரிமை கூடாது என்பதும்
அனைத்தும் பொதுவுடைமை என்பதுமே கம்யூனிசம்.
அதற்கு எதிராக கியூபா இப்போது செயல்படுகிறது.
அதாவது கியூபா கம்யூனிசத்தைக் கைகழுவுகிறது.


உங்கள் விமர்சனங்கள் அனைத்துக்கும் உரிய பதில்
அளிக்கப்படும், பின்னர். தனிக்கட்டுரையாக. இப்போது
நேரமில்லை.

தனிச்சொத்துரிமை கூடாது என்பது மார்க்சியத்தின்
உயிர்நாடி. அதில் சமரசத்துக்கு இடமில்லை. பாசிசம்
என்பதன் இலக்கணம் வேறு. தனிச்சொத்துரிமையை
ஒழிப்பதற்குப் பெயர் பாசிசம் அல்ல.


இன்றைய உலகம் அனுபவிக்கும் அத்தனை தீமைகள்
கொடுமைகளுக்கு மூல வேர் தனிச்சொத்துரிமையே.
அதை ஒழிப்பது இன்றைய உலகின் தேவை. அதை
ஒழிக்காமல் சுரண்டலை ஒழிக்க முடியாது.
தனிச்சொத்துரிமையை அங்கீகரிக்கும் அளவுக்கு
உலக நிலைமைகள் என்றைக்கு மாறுமோ, அன்றைக்கு
தனிச்சொத்துரிமையை அனுமதிப்பது பற்றிப்
பேசலாம்.



மனிதகுல வரலாற்றிலேயே மார்க்சியர்கள் நடுவில்
இன்றைய நவீன உலகின் சிக்கல்களைப் பற்றிப்
பேசுவது எங்களின் நியூட்டன் அறிவியல் மன்றமே.
நீங்கள் உங்கள் விமர்சனங்களை யாரிடம் முன்வைக்க
வேண்டும் என்று அறிந்து கொண்டு அங்கு முன்வைக்கவும்.
மார்க்சியர்கள் என்ற பெயரில் உலவும் 170 ஆண்டுகளுக்கு
முந்திய சிந்தனையில் இருந்து மாறாத, மாறுவதற்கான
அறிவு இல்லாத போலி மார்க்சியக் கயவாளிப் பயல்களிடம்
உங்களின் விமர்சனங்களை வைப்பதே சரியானது.
புழுவினும் இழிந்த அந்தப் போலி மார்க்சியப் பிழைப்புவாத
மூடர்களிடம் உங்களின் விமர்சங்களை வைக்குமாறு
அனுப்புடன் வேண்டுகிறேன்.



தர்க்கபூர்வமாக உங்களின் கருத்தை நீங்கள்
முன்வைக்கலாம். அது பரிசீலனைக்கு ஏற்கப்படும்.
உரிய பதில் அளிக்கப்படும். தேவை தர்க்கம் (logic)
மட்டுமே.

மற்றப்படி, இங்கு அர்த்தமற்ற வாதப்பிரதிவாதங்களை
நான் ஏற்பதில்லை; அனுமதிப்பதில்லை. அது குட்டி
முதலாளிய அணுகுமுறை. சரிக்குச் சரியாக ஏட்டிக்குப்
போட்டியாக வார்த்தைகளை வீசிச் சுயஇன்பம்
அடைவதற்கு இது ஏற்ற இடமில்லை. அருள்கூர்ந்து
ஒத்துழைக்கவும்.

தர்க்கபூர்வமற்ற பின்னூட்டங்களை யார் எழுதினாலும்
அவர்களை உடனடியாக நான் block செய்து விடுவேன்.
இதுதான் என்னுடைய நடைமுறை. I will block anyone
including Karl Marx at the slightest discomfort.
உங்கள் விஷயத்தில் நான் இன்னும் உங்களை block
செய்யாமல் இருப்பதற்கு மகிழவும். தர்க்கபூர்வ
வாதங்களை முன்வைக்க கடவுள் உங்களுக்கு
அருள் புரியட்டும். EOM.
-----------------------------------------------------------------------
In wireless communication of written texts, EOM means End Of Message.
This is equivalent to "over" in oral communication. I know wireless and
worked in wireless communication and therefore the word EOM is
still fresh in my memory. There is an antonym to this EOM which is
MTF meaning More To Follow which is prohibited here.
------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக