சனி, 16 மார்ச், 2019

உதகமண்டலம் என்ற பெயர் எப்படி வந்தது?
--------------------------------------------------------------------
இன்று ஊட்டி என்று அழைக்கப்படும் ஊரில் முன்பு
பழங்குடி இனத்தவர் வாழ்ந்து வந்தனர். அவர்கள்
ஒரு குறிப்பிட்ட முறையில் வீடு கட்டுவர்.

ஒரு கல்லை நடுவில் வைத்து, அதைச் சுற்றி வீடு
கட்டுவது அவர்களின் பழக்கம். வீடு என்பதற்கு
பழங்குடியினரின் மொழியில் மந்து என்ற சொல்
இருந்தது. ஒற்றைக்கல்லைச் சுற்றிக் கட்டப்படும்
வீடுகள் அன்று, ஒத்தக்கல் மந்து என்று மக்களால்
அழைக்கப்பட்டு வந்தன.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது, குளிர் நிரம்பிய இடங்களில்
பிரிட்டிஷார் குடியேறினர். ஒத்தக்கல் மந்து என்ற சொல்லை
அவர்கள் ஒட்டக்கமண்ட் (ootacamund) என்று உச்சரித்தனர்.
200 ஆண்டு கால பிரிட்டிஷ் ஆட்சியில் ஒட்டக்கமண்ட் என்ற          
சொல் புழக்கத்துக்கு வந்து பெருவழக்காக ஆகிவிட்டது.

நம்மவர்கள் ஓட்டக்கமண்ட் என்ற சொல்லைத்
தமிழ்ப்படுத்தும்போது உதகமண்டலம் என்று
மாற்றி விட்டனர். இப்படித்தான் உதகமண்டலம் என்ற
சொல்லும் உதகை என்ற சுருக்கமும் புழக்கத்துக்கு
வந்தன.

ஊர்களின் பெயர்களின் தோற்றம் பற்றி இருபதாம்
நூற்றாண்டுத் தமிழறிஞர்கள் நிறையவே ஆராய்ச்சி
செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

சொல்லின் செல்வர் டாக்டர் ரா பி சேதுப்பிள்ளை அவர்கள்
எழுதிய ஊரும் பேரும் என்ற நூலைப் படிக்கலாம்.
**************************************************

பணத்திமிரும் அதிகாரத் திமிரும்!
---------------------------------------------------
பணத்திமிரும் அதிகாரத் திமிரும் உடைய
அரசியல்வாதிகளின் பிள்ளைகள்
ஒழுங்காக வளர்க்கப் படுவதில்லை!
அவர்கள் தங்களின் பாலியல் வக்கிரத்தை
SOFT TARGETஆக உள்ள பெண் குழந்தைகள் மீது
காட்டுகிறார்கள்.

அதிமுக கயவாளிகள் பொள்ளாச்சியில் பாலியல்
வக்கிரம் செய்தால், இதோ வால்பாறையில் திமுக
கயவாளி சிறு குழந்தையிடம் பாலியல் கொடுமை
செய்துள்ளான்.

இவன் நாளைக்கே ஜாமீனில் வந்து விடுவான்.
புகார் கொடுத்த குடும்பத்தைக் கொடுமைப்
படுத்துவான்.

அரசியல்வாதிகள் அனைவருமே ஒரே ரகம்.
அரசியல்வாதிகள் மீதான பொதுமக்களின்
அச்சமும், மரியாதையும் உடைத்தெறியப்பட வேண்டும்.
இதுவே முதலில் செய்ய வேண்டிய வேலை.

இந்த திமுக கயவாளிப்பயலை எதிர்த்து
கனிமொழி ஏதேனும் ஆர்ப்பாட்டம் கீர்ப்பாட்டம்
நடத்துவாரா?
--------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக