செவ்வாய், 26 மார்ச், 2019

4G அலைக்கற்றை BSNL இடம் இல்லையா?
உண்மை நிலவரம் என்ன?
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------
1) இந்தியாவில் மொபைல் சேவை 1995ல் அறிமுகம் ஆனது.
முதன் முதலில் மொபைல் தொலைபேசியில் பேசிய
பெருமைக்கு உரியவர்கள் பின்வரும் இருவர்:
மேற்கு வாங்க முதல்வர் ஜோதி பாசு
தொலைத்தொடர்பு அமைச்சர் சுக்ராம்.
காலம்: ஜூலை 1995.
அப்போது நடந்தது காங்கிரஸ் ஆட்சி.
பிரதமர் நரசிம்ம ராவ்.

2) இந்த மொபைல் சேவைக்காக 2G அலைக்கற்றை
வழங்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள் மட்டுமே
மொபைல் சேவையில் அனுமதிக்கப் பட்டன.

3) அப்போது BSNL நிறுவனம் உருவாகவில்லை. அது
01.10.2000ல்தான் உருவாக்கப் பட்டது. BSNL உருவானபோது
பிரதமராக இருந்தவர் வாஜ்பாய்.

4) தொலைபேசி சேவை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்
பட்டது. அ) Basic services  ஆ) value added services.
மொபைல் சேவையானது value added services என்ற பிரிவின்
கீழ் வந்தது. தனியார் நிறுவனங்கள் மட்டுமே VASல்
அனுமதிக்கப் பட்டன.

5) பின்னர் இந்தியாவில் 3G அலைக்கற்றை (2100 MHz)
ஏலம் விடப்பட்டது. ஏலம் விட்ட அமைச்சர் யார் தெரியுமா?
இந்தக் கேள்விக்கு நியூட்டன் அறிவியல் மன்றத்தைத்
தவிர எல்லாருமே தவறான பதிலைத்தான் சொல்வார்கள்.
ஆ ராசா அவர்கள்தான் 3G அலைக்கற்றையை ஏலம்
விட்டவர்.

6) 2010ல் நடந்த மேற்கூறிய 3G அலைக்கற்றை ஏலம்
இந்திய அரசுக்குப் பெரும் வருவாயை ஈட்டித் தந்தது.
ரூ 30,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று அரசு
எதிர்பார்த்தது. Base price was fixed by DOT and TRAI at
Rs 30,000 crore. ஆனால் இந்த 3G ஏலத்தின் மூலம்
அரசுக்கு 67000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.
எதிர்பார்த்த வருமானம் = ரூ 30,000 கோடி.
கிடைத்த வருமானம் = ரூ 67,000 கோடி.

7) இந்த 3G ஏலத்தில் BSNL பங்கெடுக்கவில்லை.
எனினும் BSNLக்கு 3G அலைக்கற்றை வழங்கப்
பட்டது. இதற்காக BSNL எவ்வித upfront paymentம்
செலுத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால்
3G ஏலம் நடப்பதற்கு பல மாதங்கள் முன்னரே
BSNLக்கு 3G அலைக்கற்றை வழங்கப் பட்டது.

8) என்றாலும் BSNL நிறுவனத்தால் 3G சேவையை
வழங்க இயலவில்லை. (But the roll out of 3G service was not
made by BSNL). இக்கட்டுரை ஆசிரியர் பங்கேற்ற ஒரு
கூட்டத்தில், அன்றைய சென்னைத் தொலைபேசியின்
பொது மேலாளர் (Chief General Manager) மதிப்புக்குரிய
சுப்பிரமணியன் BE M.Tech ITS அவர்கள், " இன்னும்
நம்மால் 3G  சேவை roll out செய்ய முடியவில்லை;
3G அலைக்கற்றையை வாங்கி ஊறுகாய் போட்டு
இருக்கிறோம்" என்று கூறியது நினைவில்
நிழலாடுகிறது.

9) சரி, இப்போது 4Gக்கு வருவோம். BSNL இடம் 4G இல்லை
என்று  யார் யாரெல்லாமோ கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் உண்மை இல்லாமல் இல்லை. அதே நேரத்தில்
4G விவகாரத்தில் ஒரு உண்மையை அனைவரும்
தெரிந்து கொள்ள வேண்டும்.

10) இந்தியாவிலேயே முதன் முதலில் 4G அலைக்
கற்றையைப் பெற்றது BSNL நிறுவனம்தான். எந்தவித
upfront paymentம் செலுத்தாமல் மத்திய அரசு BSNLக்கு
4G அலைக்கற்றையை வழங்கி இருந்தது. இதுதான்
உண்மை.

11) இந்தக் கட்டுரையை எழுதுகிற நானும் படிக்கிற
நீங்களும் உயிரோடு இருப்பது எவ்வளவு உண்மையோ
அவ்வளவு உண்மை BSNLஇடம் 4G இருந்தது என்ற விவரம்.

12) BSNLக்கு வழங்கப்பட்ட 4G அலைக்கற்றை Wimax spectrum
என்ற பெயரிலான அலைக்கற்றை ஆகும். இது BWA spectrum
என்று அழைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தை
நடத்தியவர் யார் தெரியுமா? வேறு யார்? ஆ ராசாதான்.
வழக்கம் போல ஏலத்தில் பங்கெடுக்காமலும்
upfront payment செலுத்தாமலும் BSNLக்கு இந்த
அலைக்கற்றை வழங்கப் பட்டது.

13) WiMax = Worldwide Interoperability of Microwave access.
bandwidth = 3500 MHz.

14) Spectrum என்பது குறித்தும் LTE technology என்பது
குறித்தும் வளமானதும் ஆரோக்கியமானதுமான
புரிதல் வாசகர்களுக்கு இருத்தல் வேண்டும்.
அப்போதுதான் இந்தக் கட்டுரையைப் புரிந்து
கொள்ள முடியும். (LTE = Long Term Evolution)

15) தலைமுறை சார்ந்த அலைக்கற்றைகளுக்கு
பரிணாம வளர்ச்சி உண்டு. உதாரணமாக 2Gயில்
இருந்து 3G பின்வரும் கட்டங்களைக் கடந்து வந்தது.
2G, GPRS, EDGE, UMTS (3G).

16) தன்னிடம் இருந்த WiMax அலைக்கற்றையைப்
பயன்படுத்தி BSNL நிறுவனம் 4G சேவையைத்
தொடங்கி இருக்க வேண்டும். சில LSAகளில்
தொடங்கியது. ஆனால் தொடர்ந்து நடத்தவில்லை.

17) ஒரு கட்டத்தில் BSNL நிறுவனமானது இந்த
அலைக் கற்றையை அரசிடம் திருப்பி ஒப்படைத்து விட்டது.
Yes, the spectrum was returned by BSNL.

18) வாசகர்கள் இதை நம்பத் தயங்கலாம். அவர்கள்
இணைக்கப்பட்டுள்ள அல்லது முதல் கமென்டில்
கொடுக்கப்பட்ட இணைப்பைப் படிக்கலாம்.
Bharat Sanchar Nigam has offered to surrender the broadband spectrum it bought from the Government last year. The PSU, after having failed to launch wireless broadband services, has asked the Government to refund the money it paid for acquiring the spectrum.
Confirming the move Mr R K Upadhyay, Chairman, BSNL, told Business Line, “We want to give the spectrum back because we are using it to offer services only in rural areas. The government can take back the spectrum and own it while we can continue to meet the social obligation of connecting the rural areas.”
(Business Line September 30, 2011.)
-------------------------------------------------------------------------------------------------------  
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக