நாம் இன்றைக்கு நடத்தியிருக்கும் சோதனை ஆனது வான்வெளியிலே சுற்றிக்கொண்டிருக்கும் செயற்கை கோளை தாக்கி அழிப்பது.
செயற்கைகோளை தாக்கி அழிக்க அதிவேகத்திலே போய் மோதவேண்டும். அதுவும் சரியான நேரத்திலே. அங்கே குண்டெல்லாம் வீசி அது வெடிக்கட்டும் என காத்திருக்கமுடியாது.
ஏனென்றால் செய்ற்கைகோளும் நகர்ந்து கொண்டே இருக்கும். ஒர் நொடிக்கு 7.8 கிலோமீட்டர் வேகத்திலே நகர்ந்து கொண்டிருக்கும். மணிக்கு 28080 கிலோமீட்டர்கள். 90 நிமிடங்களிலே பூமியை சுற்றி வந்துவிடும்.
இப்படி மணிக்கு இருபத்தெட்டாயிரம் கிலோமீட்டர் வேகத்திலே நகரும் ஒரு பொருளை கீழிருந்து தாக்கி அழிக்க வேண்டும். செயற்கைகோள் என்பது நம்முடைய கார் அல்லது ஆட்டோ அளவுக்குத்தான் அகல நீளமும் இருக்கும். ஆக தாக்கவேண்டிய புள்ளியும் மிகவும் சிறியது.
ஏவுகணை தாக்குதலிலே ஒரு விஷயம் சொல்லுவார்கள். இலக்கை நோக்கி தாக்கும்போது எவ்வளவு சரியாக தாக்கும் என. பொதுவாக இது கிலோமிட்டர்களிலே இருக்கும். அதாவது ஒரு இடத்தை தாக்கினால் அதை சுற்றியுள்ள ஒரு கிலோமிட்டர் இடத்திலே எங்கு வேண்டுமானாலும் விழலாம்.
ஆனா முன்னேறிய நாடுகளோ இதை மீட்டர்களிலே வைத்திருக்கும். 200 மீட்டரிலே இருந்து 500 மீட்டர் வரை என. அமெரிக்காவின் சில ஏவுகணைகள் 90 மீட்டருக்குள் தாக்கும்.
ஆனால் செயற்கைகோளை தாக்கி அழிக்க சில மிட்டருக்குள் இது இருக்கவேண்டும். இல்லாவிடில் தாண்டி போய்விடும். இருபத்தி எட்டாயிரம் கிலோமிட்டர் வேகத்திலே செயற்கைகோள் நகர்ந்து கொண்டிருக்கிறது என ஞாபகம் வைங்க.
இதனால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சீனா இதை பலமுறை முயன்று 5 தடவையிலே தான் வென்றது.
நாமோ முதல் தடவையிலேயே வென்றிருக்கீறோம்.
இதே போல் செவ்வாய்க்கு கோள் அனுப்பிய போதும் ஒரே தடவையிலே வென்றோம் என ஞாபகம் வைங்க.
சரி இதை எதுக்கு செய்யனும்? மேலே சுத்தும் கோளை அழித்து என்ன பிரயோசனம் அப்படீனா இதே போல் வேகமாக நகரும் ஏவுகணைகளையும் இங்கே சுட்டு வீழ்த்தலாம். அது தான் இதன் முக்கியத்துவம்.
இப்போ சீனா ஒரு ஏவுகணை நம் மீது வீசினா அதை வானிலேயே சுட்டு வீழ்த்த முடியும். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எல்லாமே இந்த செயற்கை கோள் போல நம்முடைய காற்று மண்டலத்துக்கு வெளியே போய்விட்டு திரும்ப கீழிறிங்கி அடிக்கும்.
அதனால் தான் அவைகளை கீழேயே சுட்டு வீழ்த்துவது கடினம். அப்படியே சுட்டாலும் நம் மீதே விழும்.
பதிலுக்கு விண்வெளியிலே அடிச்சு உடைச்சிட்டா? கீழே விழும்போது சாம்பல் கூட இருக்காது.
இதிலே இன்னோர் வெற்றியும் இருக்கிறது.
இப்போதைய சோதனை 300 கிலோமீட்டர் தூரத்திலே செய்யப்பட்டது. மற்ற நாடுகளோ 50-100 கிலோமிட்டரிலே தான் செய்திருக்கின்றன.
உலகிலேயே மூன்று நாடுகளிலே இருந்தது நாம் இப்போது நான்காவது நாடாக சேர்ந்திருக்கிறோம்.
கடைசியாக இதையெல்லாம் மோடி தேர்தலுக்கு செய்கிறார் என்பவர்களிடம் ஆமாம் அதுக்கு என்ன இப்போ?
2007 சீனா இப்படி ஒரு சோதனையை நடத்திய போதும் நம்மிடம் இருப்பதாக சொல்லி சந்தோசப்பட்டார்களே ஒழிய நடத்திக்காட்டவில்லை.
மோடி நடத்திகாட்டியிருக்கிறார்.
இது பாக்கிஸ்தான் நம்மீது ஏவுகணைகளை வீசுவதாக சொன்னதற்கு பதிலடியாக செய்யபட்ட சோதனை.
ஏவுகணை கிளம்பினாலே அப்போதே சுட்டு வீழ்த்தப்படும் என மோடி பதில் சொல்கிறார்.
அது தேர்தலுக்கு என சொன்னால் அப்படி சொல்பவர்கள் யார் என மக்கள் உணரவேண்டும்.
நாட்டின் பாதுகாப்புக்கு செய்யப்படும் சோதனைகளையும் தேர்தல் கீர்தல் என சொன்னால் அது யாருக்கு பலன் என்பதையும் மக்கள் சிந்தித்து பார்க்கவேண்டும்.
அடுத்து? அடுத்து என்ன?
வான்வெளியிலே ஒரு ஆராய்ச்சிக்கூடம் தான்.
நன்றி நண்பர் Raja sankarஅவர்களுக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக